Skip to content
Home » பொதுத் தமிழ் தகவல்கள் » பாரதிதாசன் இளையார் ஆத்திசூடி விளக்கம்

பாரதிதாசன் இளையார் ஆத்திசூடி விளக்கம்

பாரதிதாசன் இளையார் ஆத்திசூடி விளக்கம்
பாரதிதாசன் இளையார் ஆத்திசூடி விளக்கம்

பாரதிதாசன் இளையார் ஆத்திசூடி விளக்கம் – பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இளையார் ஆத்திசூடி என்னும் 88 அடிகள் கொண்ட இந்நூலை 1963ஆம் ஆண்டில் இயற்றினார். இந்நூல் 1967 சூன் 10 ஆம் நாள் பாரதிதாசனின் குயில் என்னும் இதழில் வெளியிடப்பட்டது.

பாரதிதாசன் இளையார் ஆத்திசூடி விளக்கம்

அழுபவன் கோழை
வீரனாக வாழ்

ஆவின் பாலினிது
பசுவின் பால் நல்லது

இரவினில் தூங்கு
பகல் தூக்கம் உடலுக்கு கேடு

ஈவது மகிழ்ச்சி
மற்றவர்களுக்கு கொடுத்து வாழ்வது மகிழ்ச்சி

உள்ளதைப் பேசு
மனதில் உள்ளதை பேசு, மறைத்து பேசாதே

ஊமையைப் போலிராதே
பேச வேண்டிய இடத்திலும் நேரத்திலும் பேசு

Read More: ஔவையார் ஆத்திச்சூடி விளக்கம் | பாரதியார் ஆத்திச்சூடி விளக்கம் 

எதையுமூன்றிப் பார்
எதையும் அறிவைக் கொண்டு உற்றுநோக்கி பார்க்க வேண்டும்.

ஏசே லெவரையும்
யாரையும் திட்டுவது மற்றும் குறை கூறக்கூடாது

ஐந்திற் கலை பயில்
சிறுவயதில் கலைகளை கற்றுக்கொள்

ஒற்றுமை வெல்லும்
ஒற்றுமையுடன் வாழ்

ஓரம்போ தெருவில்
சாலைகளில் விதிகளை மதித்து ஓரமாக செல்ல வேண்டும்.

ஔவை தமிழ்த்தாய்
ஆத்திச்சூடி வழங்கிய ஔவையார் தமிழ்த்தாய்

கணக்கில் தேர்ச்சி கொள்
கணிதம் சரியாக கற்றுக்கொள்

சரியா யெழுது
பிழையில்லாமல் எழுது (அ) நல்லவைகளை எழுது

தமிழுன் தாய்மொழி
தமிழ் தான் தாய்மொழி

நல்லவனா யிரு
ஒழுக்கத்துடன் இரு

பல்லினைத் தூய்மைசெய்
தினசரி பல்லினை தூய்மை செய்.

மற்றவர்க்குதவி செய்
மற்றவர்க்கு உதவி செய்து வாழ்

வண்டிபார்த்து நட
வாகனத்தில் செல்லும்போது அருகிலும் எதிரிலும் வரும் வாகனங்களை கவனித்து நிதானமாக செல்ல வேண்டும்.

கல்வி கற்கண்டு
கல்வி கற்கண்டு போன்று சுவையானது.

கால்விலங்கு கல்லாமை
கல்லாதவர் விலங்குகள் போன்றவர்.

கிழிந்தாடை தீது
கிழிந்த ஆடை தீது ஆகும்.

கீரை உடற்கினிது
கீரை உணவை உட்கொண்டு வாழ்

குப்பை ஆக்காதே
நாம் இருக்கும் இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

கூனி நடவேல்
தலைகுனிந்து நடக்காதே, நிமிர்ந்து நட!

கெட்டசொல் நீக்கு
தீய சொற்களை பேசாதே

கேலி பண்ணாதே
எவரையும் கேலி கிண்டல் செய்யாதே.

Read More: ஔவையார் ஆத்திச்சூடி விளக்கம் | பாரதியார் ஆத்திச்சூடி விளக்கம் 

கைத்தொழில் பழகு
ஏதாவது கைத்தொழில் கற்றுக்கொள்.

கொடியரைச் சேரேல்
தீய எண்ணம் கொண்டவரிடம் சேராதே.

கௌவி உமிழேல்
பிறர் கூறியச்சொற்களை தான் கூறியது போல் கூறக்கூடாது. (அ) பொருள் அறியாமல் மனப்பாடம் செய்து ஒப்பிக்காதே

சமமே அனைவரும்
இவ்வுலகில் அனைவரும் சமம்

சாப்பிடு வேளையோடு
நேரத்திற்கு உண்டு வாழ்

சிரித்துப் பேசு
அனைவரிடமும் சிரித்து பேசு.

சீறினாற் சீறு
தவறு நடக்கும் பட்சத்தில் கோபப்படு

செக்கெண்ணெய் முழுகு
செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெயில் தலை நீராடு என்று பொருள்.

சேவல்போல் நிமிர்ந்துநில்
சேவல் போல நெஞ்சம் நிமிர்ந்து நில்

‘சை’யென இகழேல்
யாரிடமும் முகசுளிப்பு காட்டாதே.

சொல்லை விழுங்கேல்
சொல்ல வேண்டிய பொருளை தெளிவாக கூறவேண்டும். அரைகுறை அறிவுடன் எதையும் கூறாதே.

சோம்பல் ஒரு நோய்
சோம்பலுடன் தெரிவதே நோய் ஆகும்.

தந்தைசொற்படி நட
தந்தை சொல்லின்படி நடந்துகொள்.

தாயைக் கும்பிடு
தாயை தெய்வமாக கருது.

தின்பாரை நோக்கேல்
மற்றவர் உண்ணும் உணவையோ உணவின் அளவையோ நோக்காதே. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பிறர்போல வாழ வேண்டும் என்று ஆசை கொள்ளாதே.

தீக்கண்டு விலகிநில்
தீயவரிடம் விலகி நில் (அ) தீயிடம் எச்சரிக்கையுடன் இரு.

துவைத்ததை உடுத்து
துணிகளை துவைத்து உடுத்து.

தூசியா யிராதே
யாரும் ஏளனமாக பார்க்கும்படி இருக்காதே.

தென்னையின் பயன்கொள்
தென்னை மரம் நமக்கு தரும் பயன்களை பயன்படுத்திக்கொள் (கீற்று கொட்டகை, தேங்காய், இளநீர் மற்றும் பல).

தேனீ வளர்த்திடு
தேன் உணவாகவும் மருந்தாகவும் இருப்பதால் தேனீ வளர்த்து பயன் பெறு

தைப் பொங்கல் இனிது
தை மாதம் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழா தமிழர்களுக்கு இனிது.

தொலைத்தும் தொலைத்திடேல்
அன்பையோ பொருளையோ இழந்தாலும் தெளிவான மனதுடன் இரு.

தோற்பினும் முயற்சிசெய்
எத்தனை முறை தோற்றாலும் முயற்சி செய்துகொண்டிரு

நரிச்செயல் கான்றுமிழ்
வஞ்சகம், துரோகம், போன்ற செயல்களை செய்பவரை கண்டவுடன் உமிழ்ந்து ஒதுங்கிவிடு

நாட்டின் பகைதொலை
நாட்டின் பகைவர்கள் இல்லாதவாறு செய்யவேண்டும்.

நினைத்ததை உடன்முடி
நினைத்த நற்செயலை உடனே செய்துமுடி

நீந்தப் பழகு
நீச்சல் கற்றுக்கொள் (அ) வாழ்க்கையின் கஷ்டங்களில் நீந்த பழகு, வெற்றி உண்டாகும்.

நுணல் வாயாற்கெடும்
பேசவேண்டிய இடமறிந்து பேச வேண்டும். (அ) பகைவரிடம் ரகசியத்தை கூறாதே.

நூல்பயில் நாடொறும்
நூல்கள் பல கற்றுக்கொள்ளுங்கள்.

நெல்விளைத்துக் குவி
நெற்பயிர் செய்க என்று பொருள்.

நேரம் வீணாக்கேல்
நேரத்தை வீணாக்காதே என்று பொருள்.

நைந்தது அருந்திடும்.
நைந்து போனதை சரிசெய்து கொள்ள வேண்டும்.

நொய்யும் பயன்படும்
சிறு துரும்பும் கூட பயன்பெறும்.

நோய் தீயொழுக்கம்
தீயொழுக்கத்தினால் வருவது நோய்

பனைப்பயன் பெரிது
பனை மரத்தினால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்.

பாட்டிக்குத் தொண்டுசெய்
வயதானவர்களுக்கு உதவிசெய்.

பிறர்நலம் நாடு
பிறர் நலத்தை கொண்டு செயல் புரிக.

பீளை கண்ணிற்கொளேல்
உடற்சூடு அதிகம் ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

புற்றிற் கைவிடேல்
“அரவம் ஆட்டேல்” என்பது போல பாம்பு புற்றில் கைவிடக்கூடாது.(அ) தெரியாத இடத்தில் தெரியாதவரிடம் பிரச்சனைகள் செய்யக்கூடாது.

பூச்செடி வளர்த்திடு
பூச்செடிகள் அதிகம் வளர்க்க வேண்டும்.

பெற்றதைக் காத்தல்செய்
கிடைத்த நல்ல விசயங்களையோ பொருட்களையோ காத்துக்கொள்ள வேண்டும்.

பேராசை தவிர்
பேராசையுடன் வாழ்வதை விட்டு விடு

பையும் பறிபோம்
செல்வம் நிலையில்லாதது, அதை வைத்து ஒருவரை மதிப்பிடக்கூடாது.

பொய் பேசாதே
பொய்கள் பேசக்கூடாது.

போர்த்தொழில் பழகு
பிறருடன் இருந்து தற்காத்துக்கொள்ள போர் தொழில் செய்க.

மாடாடு செல்வம்
கால்நடை செல்வம் கொள்

மிதியொடு நட
வெறுங்காலோடு செல்லாதே

மீனுணல் நன்றே
புரத சத்துக்காக குறைபாடு உள்ளவர்கள் மீன் உண்பது நல்லது.

முத்தமிழ் முக்கனி
இயல் இசை நாடகம் என்பது முக்கனிகள் போன்றது.

மூத்தவர் சொற்கேள்
மூத்தவரின் சொற்களை கேட்க வேண்டும்.

மெத்தெனப் பேசு
மென்மையாக பேச வேண்டும்.

மேலவர் கற்றவர்
கற்றவர்கள் மேலவர்கள் ஆவர்.

மையினம் காத்தல்செய்
பெண் இனத்தை காத்தல் செய் (அ) வறுமையை ஒழிக்க வேண்டும்.

மொழிகளில் தமிழ்முதல்
முதலில் தோன்றிய மொழிகளில் மூத்தமொழி தமிழ் மொழி ஆகும்.

வள்ளுவர்நூல் பயில்
வள்ளுவர் தந்த வான்மறை திருக்குறளை பயில வேண்டும்.

வாழ்ந்தவர் உழைத்தவர்
உழைத்தவர்கள் அனைவரும் வாழ்ந்தவரே மற்றவர் அனைவரும் வாழ்ந்தும் வாழத்தவரே.

விடியலிற் கண்விழி
விடியற்காலையில் விழித்துக்கொள் (அ) சூரியன் உதிக்கும் முன் எழுந்துகொள்க

வீரரைப் போற்று
திறம் உள்ளவனை புகழ்

வெல்லத்தமிழ் பயில்
இனியமையான் தமிழினை கற்றுக்கொள்

வேர்க்க விளையாடு
உடலில் வியர்வை வரும்வரை விளையாடு.

வைய நூலாய்வு செய்
உலகில் உள்ள அணைத்து நூல்களையும் ஆய்வு செய்க.

Read More: 

Bharathiyar Quotes in Tamil

பாரதியார் பாடல்கள் கவிதைகள்

12 Zodiac Signs

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்