வாழ்வாதாரத்தை பாதித்த பசுமைப்புரட்சி
தீவிர சாகுபடி திட்டம்
பசுமை புரட்சிக்கு அக்காலத்தில் தீவிர சாகுபடி திட்டம் என்று பெயர். இந்தியாவில் ஏழு மாநிலங்களிலும் தலா ஒரு மாவட்டத்தை தேர்ந்தெடுத்து முன்னோடி திட்டத்தை செயல்படுத்தினர். இதன்மூலம் ஜப்பானின் குட்டை நெல் ரகங்களை அறிமுக படுத்தினார்கள். புதிய ரக உரங்களையும் அறிமுக படுத்தினார்கள். இந்தியா முழுதும் இத்திட்டத்தை செயல்படுத்த விரும்பினார்கள்.
ஐ ஆர் ரகங்கள்
இதன்மூலம் பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்ட ஐ ஆர் 8 நெல்லை மக்கள் வெறுத்து ஒதுக்கினார்கள். காரணம் ருசியில்ல்லை, பூச்சி தாக்குதல் அதிகம். அப்போது மணிலாவில் உள்ள IRRI நிறுவனத்திலிருந்து வந்த ஐ ஆர் 20, ஐ ஆர் 50 ரகங்களும் இன்று புல்லாக்கத்திலில்லை. 74 ரகங்களை உற்பத்தி செய்தாலும், ஒரு ரகம் கூட வெற்றி பெறவில்லை. இது அவர்களுக்கு பெருந்தோல்வி.
1965 கு பிறகு ரசாயன இடுபொருட்களை அதிகமாக பயன்படுத்தினோம். இதன் மூலம் நிலங்கள் உயிரியக்கமில்லாத பண்டம் ஆகிவிட்டது. மேலும் ஆலோசகர்கள் அறிவுரைப்படி இடுபொருட்களை உழவர்கள் வாங்கிப்போட வேண்டிய நிலையில் உழவர்களுக்கு கட்டுப்படியாவதில்லை. இந்த அடிப்படையில் நவீன உழவாண்மை என்பது உழவர்களுக்கு கட்டுபாடியவதில்லை.
பச்சை புரட்சி ஏமாற்றம்
பச்சை புரட்சியினால் பயனடைந்தவர்களுக்கு 100 கு 25 உழவர்கள்தான். பலன் எல்லோருக்கும் போய் சேரவில்லை என்றாலும், ஒட்டு விதைகளும் ரசாயனங்களும் எல்லோரையும் தொட்டுவிட்டன. பாரம்பரிய விதைகள் காணாமல் போகிவிட்டன. பசுமை புரட்சி நிலங்கள் அனைத்தையும் பாழ்படுத்தி விட்டது. பணக்கார உழவர்கள் ஆழ்குழாய் கிணறு போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து விடுகிறார்கள். ஏழை உழவர்களுக்கு நீர் கிடைப்பதில்லை.
ரசாயன உரத்தின் உற்பத்தி விலை தொடர்ந்து அதிகரிக்கின்றது. அரசாங்கமும் உணவு உற்பத்திக்கு பதிலாக ஆலைகளுக்கு தேவையான மூலப் பொருள்களை உழவர்களை உற்பத்தி செய்ய வைத்தார்கள். இதனால் கிராமப்புறங்களில் உற்பத்தி செய்பவனுக்கு உணவில்லை. தொழிற்நுட்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உழவாண்மை தாக்குபிடித்தது. இந்த உண்மையை மறைத்து பச்சை புரட்சி வெற்றிகரமானது என அரசியல்வாதிகள் மார்தட்டுகிறார்கள். பச்சை புரட்சியால் உர கம்பெனிகள் லாபமடைந்தன. இயந்திரங்கள் மற்றும் கருவிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தான் லாபமடைகின்றன. இவ்வாறு மானியங்கள் கொடுத்ததன் மூலம் அரசு, நிலத்தையும் நாசப்படுத்தி உழவர்களையும் நொண்டிகளாக்கி விட்டது.
தொழிற்சாலை பயன்பாடு
சர்க்கரை தொழிற்சாலைகளுக்காக கரும்பு விளைவிப்பதில் உழவர்கள் ஈடுபடுகிறார்கள். இதைப்போல இன்னும் பல மூலப்பொருட்களை உலக சந்தைக்காக உற்பத்தி செய்கிறார்கள். ஏற்றுமதிக்காக உற்பத்தி என்ற நிலைமையை அரசியவாதிகள் ஊக்குவிக்கிறார்கள். இவ்வாறு அரசாங்கம் வளமான நிலங்களை பச்சை புரட்சிக்கு தயாராக்குவதன் மூலம் நாசமாக்கி விடுகிறது. மக்களின் கலாச்சாரத்தை அழிப்பதன் மூலம் அரசு தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறது. கரும்பை விற்று உழவன் உணவை வாங்குகிறான். அவன் கையில் ஏதும் எஞ்சியிருப்பதில்லை.
கரும்பு, தேயிலை, காபி, புகையிலை ஆகியவற்றின் சாகுபடி காரணமாக இன்று நிலங்களும், நீர்நிலைகளும் மாசுபடுகின்றன. சாயப்பட்டறைகள், தோல்பதனிடும் தொழிற்சாலைகள் கடைசியாக இரால் பண்ணைகள் ஆகியவற்றின் மூலம் நீர்நிலைகள் மாசுபடுவதோடு, ஏகபத்திய நாடுகளுக்கு நம் நாடும் அடிமையாகி விடுகிறது. இதை மாற்ற நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
நஞ்சு
நிலத்தையும், உயிரினங்களையும் அளிக்கும் நஞ்சுகளுக்கு அரசுகளும், முதலாளிகளும் மருந்து என்று பெயர் வைத்தார்கள். பூச்சி நஞ்சை மருந்து என்று சொல்வது பயங்கரமான பொய். போருக்காக பயன்படுத்திய நஞ்சை இப்பொழுது உழவுக்கு தள்ளியிருக்கிறார்.
பூச்சிகளை கொள்வதற்கான நஞ்சுகளில் குளிப்படிதான் உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் போன்ற அனைத்து காய்கறிகளும் நமக்கு வந்து சேருகின்றன. பழங்கள், தானியங்கள் கெடாமல் இருக்க நச்சு பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இது அனைத்தும் உழவர்கள் பிரச்சினை மட்டும் இல்லை நுகர்வோர்கள் பிரச்சினையும் தான். இனி ஒரு விதி செய்வோம்.
கோ நம்மாழ்வார்.
மேலும் காண்க
Video: அம்மா பற்றிய வரிகள்
நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்
Comments are closed.