பறவைகள் கனவு பலன்கள் – Birds Kanavu Palangal in Tamil – பல்வேறு விதமான பறவைகளை கனவில் கண்டால் என்ன பலன்கள் என்று இந்த பதிவில் பார்ப்போம்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | ஜோதிட தகவல்கள் | Learn Basic Astrology | நாலடியார் பாடல்கள் மற்றும் விளக்கம் | கனவு பலன்கள்
பறவைகள் கனவு பலன்கள்
பறவைகள் பறப்பது போல கனவு கண்டால், செல்வ செழிப்பு உண்டாகும் என்று பொருள்.
பறவைகளின் முட்டையை கனவில் கண்டால், தொழிலில் வளர்ச்சி ஏற்பட இருப்பதை குறிக்கும்.
பறவை தன் குஞ்சுக்கு உணவு கொடுப்பது போல கனவு கண்டால், வீட்டில், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்று பொருள்.
பறவைகளுக்கு தானியம் தூவுவது போல் கனவு கண்டால், காதலில் வெற்றி பெற போகிறோம் என்று அர்த்தம்.
பறவையை கையில் வைத்துக் கொண்டு போவது போல் கனவில் கண்டால், தேர்வில் வெற்றி கிடைக்கும் என்று அர்த்தம்.
வானத்தில், பறவைகள் கூட்டமாகப் பறந்துசெல்வது போல கனவு வந்தால், நீண்டநாள் துன்பங்கள் நம்மை விட்டு விலகும். புதிய பதவி தேடி வரும் என்று பொருள்.
இரண்டு புறாக்கள் ஜோடியாக பறப்பது போல் கனவு கண்டால், உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே உள்ள நட்பில் விரிசல் விழும் என்று அர்த்தம்.
புறாவை பிடிக்க முயற்சி செய்வது போல் கனவு வந்தால், புதிய நண்பர்களின் பழக்கம் ஏற்படும் என்று அர்த்தம்.
புறாக்கள் கூட்டமாக கனவில் வந்தால், சில உறவுகளை பிரிய நேரிடும் என்று அர்த்தம்.
வெள்ளை புறா கனவில் வந்தால், உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும் என்று பொருள்.
கருப்பு நிற புறா கனவில் வந்தால், துக்கமான செய்தி வர உள்ளதை குறிக்கும்.
புறா வேடன் கையில் இருப்பது போல கனவு கண்டால், அது நல்லதல்ல.
வௌவால் தனியாகவோ, கூட்டமாகவோ கனவில் வந்தால் மிகவும் நல்லது. வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும்.
வௌவால் வீட்டிற்குள் வந்தது போல கனவு கண்டால், கெட்ட செய்திகள் இல்லம் தேடி வரும் என்று அர்த்தம்.
வௌவால் வீட்டிலிருந்து வெளியே செல்வது போல கனவு கண்டால், நமக்கு ஏற்பட்ட வறுமை நீங்கும் என்று அர்த்தம்.
கொக்கு கனவில் வந்தால், வயலில் விளைச்சல் அதிகரிக்கும் என்று அர்த்தம்.
தூக்கணாங்குருவி மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் மிகவும் நல்லது.
ஒரு ஆந்தையை கனவில் கண்டால் நல்லதல்ல. அதுவே, ஆந்தை கூட்டத்தை கனவில் பார்த்தால் மிகவும் நல்லது.
கழுகு கனவில் வந்தால், உடனிருப்பவர் யாரோ உங்களை கவிழ்த்து விட சதி செய்கிறார்கள் என்று அர்த்தம்.
கழுகு, பிணத்தை கொத்தி தின்பது போல கனவு கண்டால், வீட்டில் யாருக்கோ அல்லது தெரிந்தவருக்கோ அறுவை சிகிச்சை ஏற்பட இருப்பதை குறிக்கும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட கிளிகளை கனவில் கண்டால், செய்யும் தொழில் மேலும் விருத்தி அடையும் என்று அர்த்தம்.
கிளிகள் தானியங்களை சாப்பிடுவது போல கனவு கண்டால், பொருள் இழப்பு ஏற்படும் என்று அர்த்தம்.
கிளிகள் பறந்து செல்வது போல கனவு கண்டால், குழந்தை பருவ நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று அர்த்தம்.
கிளி இறந்து போனது போல கனவு வந்தால், கடன்கள் ஏற்படும்.
காகம் தலையில் கொத்துவது போல கனவு கண்டால், கெடுதல் ஏற்பட போகிறது என்று பொருள்.
காகம் உங்களை பிடித்தது போல கனவு கண்டால், அளவுக்கு அதிகமான பொறுப்புகளை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ ஏற்படும்.
காகம் கத்துவது போல் கனவு வந்தால், திருட்டு நடக்க வாய்ப்பு இருப்பதன் அறிகுறியாகும்.
பொதுவாக, காகத்தை கனவில் காண்பது நல்ல சகுனம் அல்ல.
காக்கா குளிப்பது போல கனவு கண்டால், நம்மை பிடித்த தோஷம் விலக போகிறது என்று அர்த்தம்.
அண்டங்காக்கை கனவில் வந்தால், நெருங்கிய நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ அசம்பாவிதம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
குயில் கனவில் வந்தால், நம் மனதுக்கு பிடித்தது போல நல்ல வாழ்க்கைத்துணை அமையும் என்று அர்த்தம்.
கருங்குயிலை கனவில் கண்டால், கெட்ட செய்திகள் வரும் என்று அர்த்தம்.
குயில்கள் சண்டை போடுவது போல கனவு வந்தால், அது நல்ல சகுனம் அல்ல. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கோழி, அதன் குஞ்சுகளோடு இருப்பது போல் கனவு வந்தால், பழைய வீடு, மற்றும் கட்டிடங்களை சீர்செய்து புதுப்பிக்கும் நிலை ஏற்படும் என்று அர்த்தம்.
சேவல் கூவுவது போல் கனவு வந்தால், மிகப்பெரிய மாற்றங்கள் நம் வாழ்க்கையில் ஏற்பட போகின்றன என்று பொருள்.
கோழி மற்றும் சேவலை ஒன்றாக கனவில் வந்தால், நல்ல சம்பவங்கள் நடைபெற போகின்றன என்று அர்த்தம்.
வான்கோழி கனவில் வந்தால், நல்ல சகுனம் அல்ல, குடும்பத்தில் சோக நிகழ்ச்சி நடைபெறும் என்று அர்த்தம்.
வாத்து கனவில் வந்தால், எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும் என்று அர்த்தம்.
வாத்து மற்றும் குயிலை கனவில் கண்டால், நாம் எடுக்கும் முயற்சிகள் விரைவில் வெற்றி பெறும் என்று அர்த்தம்.
அன்னப்பறவை கனவில் வந்தால், தெய்வ அருள் கிட்டும் என்று அர்த்தம்.
கறுப்பு நிற அன்னப்பறவையைக் காண்பது நல்லதல்ல. கெட்ட சகுனம். எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை.
மயில், தோகையை விரித்து ஆடுவது போல கனவு வந்தால், மகிழ்ச்சியான செய்தி ஒன்று வந்து சேரும்.
மயில் அகவுவது போல கனவு கண்டால், கணவன் மனைவி இடையே உள்ள அன்பு அதிகமாகும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் அர்த்தம்.
மயிலை கனவில் கண்டால், கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும் என்று அர்த்தம்.
மயில் பறந்து செல்வது போல கனவு கண்டால், குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும் என்று பொருள்.
குருவிகள் கனவில் வந்தால், குடும்பத்தில் உள்ள கஷ்டங்களும், நோய்களும் தீரும் என்று அர்த்தம்.
குருவிகள் ஜோடியாக இருப்பது போல கனவு வந்தால், நல்ல செய்தி ஒன்று வந்து சேரும் என்று அர்த்தம்.
குருவிக் கூடு கலைக்கப்படுவது போல கனவு கண்டால், குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும் என்று அர்த்தம்.
Read More
Video – பறவைகளை சம்பந்தமான கனவு கண்டால்
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்