பரிவர்த்தனை யோகம் என்றால் என்ன?

இந்த பதிவில் ஜோதிடத்தில் பரிவர்த்தனை யோகம் என்றால் என்ன? மற்றும் பரிவர்த்தனை பொருள் என்ன என்று தெரிந்துகொள்வோம். ஜோதிடத்தில் பரிவர்த்தனை என்பது கிரகங்கள் தங்களுடைய ஆட்சி வீட்டை பரிமாறிக்கொண்டு அமர்வது எடுத்துக்காட்டாக குருவினுடைய வீட்டில் சூரியனும், சூரியனுடைய வீட்டில் குருவும் மாறி அமர்வது பரிவர்த்தனை யோகம் எனப்படும்.

பரிவர்த்தனை யோகம் என்றால் என்ன
பரிவர்த்தனை யோகம் என்றால் என்ன

தெளிவாக கூறவேண்டுமென்றால் இரண்டு கிரகங்கள் தங்களுக்குள் தமது ஆட்சி வீடுகளை மாறிக்கொண்டு நின்றாள் அது ‘பரிவர்த்தனை’ என்று பெயர் பெரும்.

பரிவர்த்தனை யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் ஒரு பாவகத்தின் அதிபதி மற்றொரு பாவகத்திலும், மற்றொரு பாவகத்தின் அதிபதி இந்த பாவக த்திலும் மாறி அமர்ந்திருந்தால் அந்த ஜாதகருக்குப் பரிவர்த்தனை ஏற்படும். உதராணமாக ஜாதகத்தில் 3ஆம் வீட்டின் அதிபதி 9ஆம் இடத்திலும் 9ஆம் வீட்டின் அதிபதி 3ஆம் வீட்டிலும் அமர்ந்திருந்தால் பரிவர்த்தனை யோகம் உண்டாகும்.

பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் ஆட்சி பலத்திற்கு இணையாக கருதப்படுகிறது. அதற்காக எந்த பாவகத்தில் நிற்கிறது என்பதை பொறுத்தே அது நன்மையா அல்லது தீமையா என்று கணக்கில் கொள்ள வேண்டும். வெறும் பரிவர்த்தனையை பார்த்தபின்பே கிரகம் பலமாக உள்ளது என்று எடுத்துக்கொள்ள கூடாது.

கிரகங்கள் ஒன்றுக்கொன்று1,5,9ஆக பரிவர்த்தனை பெற்றால் தங்களது திசாபுத்தியில் யோக பலன்களை தருவார்கள். இந்த பாவகங்களுக்கிடையே பாவகாதில் அதிபதிகள் மாறி அமரும் போது சுப பலன்களை அனுபவிப்பர்கள். 1,5,9 ஆக கடகத்தில் குரு மீனத்தில் சந்திரன் பரிவர்த்தனை பெறும்போது ஜாதகருக்கு ராஜயோகத்தை தருவார்கள்.

அதேபோல கிரகங்கள் 1,4,7,10 ஆக பரிவர்த்தனை பெற்றால் தங்களது திசா புத்தியில் யோக பலன்களை தருவார்கள். சூரியன், சனி பரிவர்த்தனை அவ்வளவு எளிதாக நன்மையை தராது.

மறைவு ஸ்தானங்களின் பரிவர்தனையும் ஜாதகருக்கு நன்மையை செய்யும் என்று சொல்லிட முடியாது. இருப்பினும் உபஜெய ஸ்தானங்களில் தீய கிரகங்கள் பரிவர்த்தனை நன்மையை செய்யும். என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்