மனிதன் பேசத்தெரியும் முன்பே முகக்குறி சைகை கைக்குறிகளாலும், உறுப்பசைவுகளாலும் தன் உணர்ச்சிையயும் கருத்தையும் வெளிப்படுத்தினான், ஆதலால், மொழிக்கும் இசைக்கும் முன்பிருந்தே நடனம் இருந்தது. மொழியும் இசையும் சேர்ந்து நடனக் கலைக்கு ஒரு வடிவம் தந்தன.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
நடனக் கலைதான் மனிதனின் உணர்ச்சி, மூளையில் அறிவாகவும், நாவில் பேச்சாகவும், வாக்கில் கவியாகவும் குரலில் பாட்டாகவும், விரலில் கருவிசையாகவும் இருக்கிறது. உணர்ச்சிதான் முகபாவனைகளாலும், தலை, மார்பு, கைகள், இடுப்பு, கால்கள், அங்கங்களாலும், அபிநயமும் கலந்தே வருகிறது. பேச்சில்லாமல் சைகையில் ஒருவன் உணர்ச்சியை வெளிப்படுத்த முடியும். அவனுடைய மனதினை முகக்குறியும் கை சைகையும் காட்டும்.
பரத நாட்டியத்தில் கைமுத்திரைகள் முதன்மையாகக் கொள்ளப்படும். பரத நாட்டியத்தில் பாடலின் பொருளைக் கைமுத்திரைகள் காட்டும். கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும். இதனைக் கம்பர்,
“கைவழி நயனஞ் செல்லக்
கண்வழி மனமும் செல்ல”
மனம் வழி பாவமும்
பாவ வழி ரசமும் சேர”.
பரதம் என்ற சொல், ப – பாவம், ர – ராகம், த – தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பாரத நாட்டின் நாட்டியக்கலையே பரதநாட்டியம். முதன்மையாக பரதநாட்டியக் கலை , நமது தமிழகத்திற்கே உரியது. இங்கே தான் அது நல்ல வளர்ச்சி பெற்று இன்னும் பொழிந்து விளங்குகிறது. மேற்கத்திய நாடுகளின் நடனம் பெரும்பாலும் கொட்டுக்கு குதிக்கும் கால் கை ஆட்டங்கேளயாகும்; புலன்களின் இன்பமே அவற்றின் குறிப்பாகும். நமது நாட்டின் கலை, புலன் மனங்களைக் கடந்து, உள்ளுயிரான சுத்தான்மாவின் இன்பத்திற்கு உரிய தெய்வ ஒளி வீசுவதாம் . இக்கலை ஜீவாத்மா மற்றும் பரமாத்மவை கண்டு கலக்க செய்யும் ஒரு பக்தி யோகமாகும்.
பரத நாட்டியக் கலை மூன்று ஆடல் முறைகளைக் கொண்டது. அவை:
நிருத்தம்
நிருத்தியம்
நாட்டியம்
அங்கம்
தலை, கைகள், மார்பு, பக்கங்கள், இடை, பாதங்கள் ஆகிய ஆறும் அங்கம் எனப்படும். சிலர் கழுத்தையும் இதில் சேர்ப்பர்.
பிரத்தியாங்கம்
புஜங்கள், முன் கைகள், முதுகு, வயிறு, தொடைகள், முழங்கால்கள் ஆகியவற்றை பிரத்தியாங்கம் என்பர்.
உபாங்கம்
உபாங்கம் என்பது கண், விழி, புருவம், கன்னம், மூக்கு, தாடை, பல், நாக்கு, உதடு, முகவாய் ஆகியனவாகும்.
சாத்விக அபிநயம்
உள்ளத்தில் எழும்பும் உணர்வுகள் காரணமாக உடலில் ஏற்படும் மெய்ப்பாடுகளை உடல் மொழிகளால் வெளிப்படுத்துவது சாத்விக அபிநயமாகும். மெய்ப்பாடுகளை நவரசம் என்று சொல்வர். அவை அச்சம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை ஆகிய இச்சுவைகளை மெய்ப்பாடுகளால் உணர்த்த வேண்டும். அதாவது கண்கள், உடலசைவு, உடல்நிலை (posture). கை முத்திரைகள், முக பாவம் ஆகியவற்றால் அபிநயித்தல். இது சாத்விக அபிநயமாகும்.எடுத்துக்காட்டாக அச்சமேற்படும் போது உடல் வியர்க்கும்; உடல் நடுங்கும்; கண்கள் சொருகும். இத்தகு மெய்ப்பாடுகளை ஆடலில் காட்டுதல் சாத்விக அபிநயமாகும்.
நம் முன்னோர் நடனக் கலையை எவ்வளவு பயபக்தியுடன் போற்றினார் என்பதற்குச் சிலப்பதிகாரத்தில் ஒரு கதை கூறுகிறது. இந்திர சபைக்கு அகத்தியர் வந்தார். இந்திரன் அவரை மகிழ்விக்க ஊர்வசியை நடனமாடச் சொன்னான். தோரிய மடந்தை (ஆடி மூத்தவள்) வாரம் பாடினாள். ஆனால் ஊர்வசி இந்திர குமாரனான சயந்தன் மேல் காதல் கொண்டு, மயங்கி நின்றாள். அவனும் அவளிடம் மோகம் கொண்டான். இதனால் ஆட்டம் கெட்டது; வீணை மங்கலமிழந்தது. முனிவர் முனிந்தார்; “நீங்கள் மன விகாரத்தால் கலையை கெடுத்ததால், உலகில் பிறக்கேவண்டியது” என்று சாபம் கொடுத்தார். சயந்தன் குழலாகப் பிறந்தான். ஊர்வசி மாதவியாகப் பிறந்தாள். தலைக்கோல் தானத்தில் மாதவி ஆடும்பொழுது, குழலான சயந்தன் துணை செய்ததால், சாபம் நீங்கியது. நம் முன்னோர்கள் நாட்டியக்கைலையத் தெய்வ பக்திசாதனமாக்கிப் புனிதமாகக் காத்தனர்.
பரத நாட்டியக்கைல நம்முடைய கோயில்களில் தெய்வப் பொலிவுற வளர்ந்து வந்தது. கடவுளுக்கே நம்மவர் நடராஜ வடிவம் தந்து ஆடுந்தெய்வமாக வணங்கினர், அதனை இவ்வரிகளில் அறியலாம்.
உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவ கவசம்
நடராஜ பாதம் நவரசம்…!!!
மேலும் கோயில்களில் நர்த்தனமும் தாண்டவமும் ஒரு வழிபாடாகக் கருதப்படுகிறது. கோயில் தூண்களிலும் சுவர்களிலும் அழகான நாட்டிய வடிவங்களாக செதுக்கப் பெற்றிருக்கின்றன. மதுரை, சிதம்பரம் கோயில்களில், அபிநய முத்திைரகளும் கரணங்களும் கூடிய நாட்டியக் கலை சித்திரங்கள் பல காண்கின்றன. நம் பெரியோர்கள் கலையை சிலையாக வடித்து அழியாப் புத்தகமாக்கினார்கள். அந்தச் சித்திரங்களினால் நமது நாட்டியக் கலை இப்போது உயிர்த்தெழுந்து, மறுமலர்ச்சி பெற்று வருகிறது. நமது சிற்பக் கலையும் மறுமலர்ச்சி பெற்று கோயில்களில் அழகு பொழிகின்றது.
- Read More:
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்
சூப்பர் , பாரதம் பற்றிய மிகச்சிறந்த தொகுப்பு .
வாழ்க வளமுடன் !
மன்னிக்கவும் ! பரதம் !