பத்துப்பாட்டு நூல்கள் – திருமுருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் முடியப் பத்து நீண்ட பாடல்களின் தொகுப்பே பத்துப்பாட்டு நூல்கள் என்று சான்றோரால் வழங்கப்படுகின்றது. இதனைப் பாட்டு என்றே வழங்கலும் உண்டு.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | ஜோதிட தகவல்கள் | Learn Basic Astrology | நாலடியார் பாடல்கள் மற்றும் விளக்கம் | கனவு பலன்கள்
பத்துப்பாட்டுள் அடங்கிய நூல்கள் எவை எவை எனக் கூறும் பழைய வெண்பா ஒன்று உண்டு. அது பின்வருமாறு:-
முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி – மருஇனிய
கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
இவ்வெண்பாவின் படி,
பத்துப்பாட்டு நூல்கள்
1. திருமுருகாற்றுப் படை
2. பொருநராற்றுப் படை
3. சிறுபாணாற்றுப் படை
4. பெரும்பாணாற்றுப் படை
5. முல்லைப்பாட்டு
6. மதுரைக் காஞ்சி
7. நெடுநல்வாடை
8. குறிஞ்சிப் பாட்டு
9. பட்டினப்பாலை
10. மலைபடுகடாம், என்பனவாகும்.
பத்துப்பாட்டு என்னும் பெயர் வழக்கு இடைக்காலத்தில் தோன்றியது. கி.பி. 11, 12 ஆம் நூற்றாண்டுக்குரிய பன்னிரு பாட்டியல் என்னும் இலக்கண நூல் பத்துப்பாட்டிற்கு இலக்கணம் கூறிற்று.
கி.பி.15ஆம் நூற்றாண்டினரான மயிலை நாதர் (நன்னூல் எனும் இலக்கணத்துக்கு உரை எழுதியவர்) பத்துப்பாட்டு என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளார்.
பத்துப்பாட்டில் மிகச் சிறிய பாட்டு 103 அடிகளைக் கொண்டது. மிக நீண்டது 782 அடிகளைக் கொண்டது. இனி, பத்துப்பாட்டிலுள்ள நூல்களின் வகைப்பாட்டையும் ஒவ்வொரு வகையிலும் உள்ள செய்யுட்களின் தனித் தனியான சிறப்புகளையும் காணலாம்.
நூல்களின் வகைப்பாடு
பத்துப்பாட்டில் உள்ள செய்யுட்களும் எட்டுத்தொகையில் உள்ள நூல்களைப் போலவே அகம், புறம் என்ற இரு பிரிவுகளில் அடங்கும்.
முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் பாலை, நெடுநல்வாடை என்ற நான்கும் அகப்பொருள் நூல்களாகும்.
திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, பொருநராற்றுப் படை, மலைபடுகடாம் என்னும் கூத்தராற்றுப்படை, மதுரைக் காஞ்சி ஆகிய ஆறும் புறப்பொருள் பற்றியன. இவ்வாறனுள்ளும் முதல் ஐந்தும் ஆற்றுப்படை என்ற பிரிவில் அடங்கும். இறுதியானது நிலையாமை பற்றிக் கூறும் காஞ்சித்திணையின் பாற்படுவதாகும்.
– பேரா.அ.தட்சிணாமூர்த்தி
தெரிந்து கொள்க
- தமிழ் இலக்கண நூல்கள்
- தமிழ் இலக்கணத்தின் வகைகள்
- தன்மை வினைமுற்று
- முற்று வினை என்றால் என்ன
- இடவேற்றுமை பெயர்கள்
- வேற்றுமை உருபு
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க
- தமிழ் பழமொழிகள்
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்