பணபர ஸ்தானம் என்றால் என்ன

பணபர ஸ்தானம் என்றால் என்ன? – ஜோதிடத்தில் திரிகோணம் மற்றும் கேந்திர ஸ்தானங்கள் மிகவும் முக்கியமானவை அதற்கு அடுத்தபடியாக பணபர ஸ்தானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் நாம் என்னதான் உழைத்தாலும் பணம் சம்பாதிப்பது என்பது அவசியமான ஒன்று.

பணபர ஸ்தானம்
பணபர ஸ்தானம்

பணபர ஸ்தானம்

சிலருக்கு உழைத்த உழைப்பிற்கேற்ற வருமானம் வரும், சிலருக்கு என்னதான் உழைத்தாலும் வருமானம் கிடைக்காது, சிலருக்கு உழைப்பு குறைவாக இருந்தாலும் பணம் சேர்ந்துகொண்டு போகும். இதனை கண்டறிய ஜோதிடத்தில் பணபர ஸ்தானத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

பணபரஸ்தானம் என்பது ஒரு ஜாதகருடைய ஜென்ம லக்னத்திலிருந்து 2,11 ஆம் பாவகங்கள் ஆகும். தனம், குடும்பம், வாக்கு, என்று அழைக்கப்படும் 2ஆம் இடமும், லாபம் ஸ்தானம் என அழைக்கப்படும் 11ஆம் பாவமும் பணபர ஸ்தானமாகும்.

உதாரணமாக:- ஒருவருக்கு மேஷ லக்கினம் என வைத்துக்கொள்வோம், அவருக்கு 2ஆம் இடம் ரிஷபமும் 11ஆம் இடம் கும்பமும் பணபரஸ்தானம் ஆகும். இந்த இரண்டு பாவகங்கள் வலுவாக இருக்க பண வரவு வாழ்வில் இருந்துகொண்டே இருக்கும்.

ஒரு ஜாதகரின் பொருளாதார நிலையை இந்த இரு பாவகங்கள் கொண்டுதான் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். தந்தை, தாய், மனைவி, குழந்தை போன்ற உறவுகளுக்கு அடுத்தபடியாக தனம், லாபம் முக்கியம் என்பதால் 2,11ஆம் இடம் இந்த சிறப்பை பெற்றுள்ளது.

ஒருவருடைய ஜாதகத்தில் 2,11 ஆம் இடம் ஆய்வு செய்து பார்த்து அது வலுவாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க ஜாதகருக்கு தொட்டது துலங்கும். சிறிது முதலீட்டில் அதிக வருவாய் கிடைக்கும். இரண்டாம் பட்சமாக 2,11ஆம் இடத்தில நல்ல கிரகங்கள் அமைய வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் 2,11ஆம் அதிபதிகள் நல்ல நிலையில் அமைய வேண்டும். இதில் ஒவ்வொரு அமைப்பிற்கேற்ப பலன்கள் கணக்கிட வேண்டும்.

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்