
பகுபதம் பகாப்பதம் பற்றி தெரிந்து கொள்வோம்
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
தமிழ் இலக்கணம் பதவியல்
1. பதமாவது, த ஒரெழுத்தாலாயினும் இரண்டு முதலிய பலவெழுத்துக்களாயினும் ஆக்கப்பட்டுப் பொருளை அறிவதாம். அது, பகாப்பதம், பகுபதம் என இருவகைப்படும்.
2. பகாப்பதமாவது, பகுக்கபடாத இயல்புடைய பதமாம். ஆது, பெயர்ப்பகாப்பதம், வினைப் பகாப்பதம், இடைப் பகாப்பதம், உரிப் பகாப்பதம், என நான்கு வகைப்படும்.
உதாரணம்.
நிலம், நீர், மரம் பெயர்ப் பகாப்பதம்
நட, வா, உண் வினைப் பகாப்பதம்
மற்று, ஏ, ஓ இடைப் பகாப்பதம்
உறு, தவ, நனி உரிப் பகாப்பதம்
3. பகுபதமாவது, பகுக்கப்படும் இயல்பையுடைய பதமாம். அது, பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம், என இருவகைப்படும். அவற்றுல், வினைப் பகுபதம், தெரிநிலை வiனைப் பகுபதம், குறிப்பு வினைப் பகுபதமும் என இருவகைப்படும்.
உதாரணம்.
பொன்னன் .. பெயர்ப் பகுபதம்
நடந்தான் .. தெரிநிலை வினைப் பகுபதம்
பெரியன் .. உரிப்பகாப்பதம்
4. தெரிநிலைவினையுங் குறிப்பு வினையும் பகுபதமாகும் எனவே, அவ்விருவகை வினையாலணையும் பெயர்களும் பகுபதமாகும் என்பது பெறப்படும்.
பகுதவுறுப்பு
1. பகுபதத்துக்கு உறுப்புக்கள், பகுதி, விகுதி, இடைநிலை சாரியை, சந்தி, விகாரம், என ஆறாம். புகுபதம், இ;வ்வாறுறுப்புக்களுள்ளும் பகுதி விகுதி என்னும் இரண்டு முதலியவவைகளினால் முடிவு பெறும்.
உதாரணம்.
(1) கூனி என்பது, கூன், இ எனப் பகுதி, விகுதி என்னும் இரண்டுறுப்பால் முடிந்தது.
(2) ஊண்டான் என்பது, உண், ட், ஆன் எனப் பகுதி, விகுதி, இடைநிலை என்னும் மூன்றுறுப்பால் முடிந்தது.
(3) உண்டனன் என்தது, உண், ட், அன், அன், அன், எனப் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை என்னும் நான்குறுப்பால் முடிந்தது.
(4) பிடித்தனன் என்பது, பிடி, த், த், அன், அன், எனப் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி என்னும் ஐந்துறுப்பால் முடிந்தது.
(5) நடந்தனன் என்பது, நட, த், த், அன், அன் எனப் பகுதி, முதலிய ஐந்தும் பெற்று, சந்தியால் வந்த தகர வல்லொற்று நகரமெல்லொற்றாதலாகிய விகாரமும் பெற்று, ஆறுறுப்பால் முடிந்தது.
பகுதி
5. பகுதிகளாவன, பகுபதங்களின் முதலிலே நிற்கும் பகாப்பதங்களாம்.
6. பெயர்ப்பகுபதங்களுக்குப் பெரும்பாலும் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில், என்னும் ஆறவகைப் பெயர்ச்சொற்களும், சிறுபான்மை சுட்டிடைச் சொற்கள், வினாவிடைச் சொற்கள், பிற மற்று என்னும் இடைச்சொற்களும், பகுதிகளாய் வரும்.
உதாரணம்.
(1) பொன்னன், நிலத்தன், தையான், பல்லன், கரியன், நடையன்.
(2) அவன், இவன், உவன், எவன், ஏவன், யாவன், பிறன், மற்றையன்.
7. வினைக்குறிப்பு பகுபதங்களுக்கு, மேற்சொல்லப்பட்டனவாகிய அறுவகைப் பெயர்ச்சொற்களும், இடைச்சொற்களும், பகுதிகளாய் வரும்.
உதாரணம்.
(1) பொன்னன், நிலத்தன், தையான், பல்லன், கரியன், நடையன்.
(2) ஆற்று, இற்று, எற்று
8. மை விகுதி புணர்ந்து நின்ற செம்மை கருமை முதலிய பண்புப் பெயர்கள், விகுதி புணரும்பொழுது, பெரும்பாலும் விகாரப்பட்டு வரும். இவை விகாரப்படுதல் பதப்புணர்ச்சிக்குங் கொள்க.
உதாரணம்.
அணியன்: இங்கே அணிமையின் மை விகுதி கெட்டது.
கரியன்: இங்கே கருமையின் மைவிகுதி கெட்டு, நடு உகரம் இகரமாய்த் திரிந்தது.
பாசி: இங்மே பசுமையின் மைவிகுதி கெட்டு, முதல் நீண்டது.
பேரறிவு: இங்மே பெருமையின் மைவிகுதியோடு நடு நின்ற உகரவுயிர் கெட்டு முதல் நீண்டது.
குருங்குதிரை: இங்கே கருமையின் மைவிகுதி கெட்டு, வரும் வல்லெழுத்திற்கு இனமெல்லெழுத்து மிகுந்தது.
பைந்தர்: இங்கே பகமையின் மை விகுதியோடு நடு நின்ற ககரவுயிர் மெய் கெட்டு, முதலகரம் ஐகாரமாய் திரிந்து, வரும் வல்லெழுத்துக்கு இன மெல்லெழுத்து மிகுந்நது.
வெற்றிலை: இங்கே வெறுமையின் மைவிகுதி கெட்டு, நடு நின்ற மெய் இரட்டித்தது.
சேதாம்பல்: இங்கே செம்மையின் மைவிகுதி கெட்டு, முதல் நீண்டு, நடு நின்ற, மகரமெய் தகரமெய்யாய்த் திரிந்தது.
9. தெரிநிலைவினைப் பகுபதங்களுக்குப் பெரும்பாலும் நட வா முதலிய வினைச்சொற்களும், சிறுபான்மை பெயர்ச்சொல் இடைச்சொல் உரிச்சொற்களும், பகுதிகளாய் வரும்.
உதாரணம்.
நட, நடந்தான் வினையடி
வா, வந்தான்
நில், நின்றான்
காண், கண்டான்
சித்திரம், சித்திரித்தான் பெயரடி
கடைக்கண், கடைக்கணித்தான்
போல், பொன்போன்றான் இடையடி
நிகர், புலிநிகர்த்தான்
சால், சான்றான் உரியடி
மாண், மாண்டான்
10. தெரிநிலைவினைப் பகுதிகள், விகுதி முதலியவற்றோடு புணரும்போது, இயல்பாகியும், விகாரமாகியும் வரும்.
உதாரணம்.
1. தொழு: தொழுதான் இயலபாகி வந்தன உண், உண்டான்
2. சேறல்: இங்கே சொல்லென்பகுதி முதல் நீண்டது.
தந்தான்: இங்கே தாவென்பகுதி முதல் குறகியது.
தருகின்றான்: இங்கே தாவென்பகுதி முதல் குறுகி, ருகரவுயிர்மெய் விரியப்பெற்றது.
செத்தான்: இங்கே சாவென்பகுதி முதலாகரம் எகராமாய்த் திரிந்தது.
விராவினான்: இங்கே விராவென்பகுதி நடுக்குறில் நீண்டது.
கொணார்ந்தான்: இங்கே கொணாவென் பகுதியீற்று நெடில் குறிகி, ரகரமெய் விரிந்தது.
கற்றான்: இங்கே கல்லென் பகுதியீற்று மெய் வருமெழுத்தாய்த் திரிந்தது.
சென்றான்: இங்கே சொல்லென் பகுதியீற்று மெய் வருமெழுத்துக்கு இனமாய்த் திரிந்தது.
11. தொரிநிலை வினைப்பகுதிகள், வி, பி, முதலிய விகுதி பெற்றேனும், விகாரப்பட்டேனும், விகாரப்பட்டு விகுதி பெற்றேனும், பிறவினைப் பகுதிகளாய் வரும்.
உதாரணம்.
1. செய், செய்வி, செய்வித்தான் நட, நடப்பி, நடப்பித்தான்.
2. திருந்து, திருத்து, திருத்தினான் ஆடு, ஆட்டு, ஆட்டினான் தேறு, தேற்று, தேற்றினான் உருகு, உருக்கு, உருக்கினான்
3. திருத்து, திருத்துவி, திருத்துவித்தான் ஆட்டு, ஆட்டுவி, ஆட்டுவித்தான் தேற்று, தேற்றுவி, தேற்றிவித்தான் உருக்கு, உருக்குவி, உருக்குவித்தான்
12. பொன்னன், கரியன், முதலானவை, எட்டு வேற்றுமைகளுள் ஒன்றையேற்கும் போது பெயர்ப்பகுபதங்களாம்: முக்காலங்களுள் ஒன்றைக் குறிப்பாகக் காட்டும்போது வினைக்குறிப்பு முற்றுப்பகுபதங்களாம்: காலங்காட்டுதலோடு வேற்றுமையேற்கும் போது குறிப்பு வினையாலணையும் பெயர்ப்பகுபதங்களாம். இவையே இம் மூன்றுக்கும் வேறுபாடம்.
13. நடந்தான், வந்தான், முதலானவை காலங்காட்டும் போது தெரிநிலை வினை முற்றுப் பகுபதங்களாம்: காலங்காட்டுதலோடு வேற்றுமையேற்கும்போது தெரிநிலை வினையாலணையும் பெயர்ப்பகுபதங்களாம். இவையே இவ்விரண்டுக்கும் வேறுபாடாகும்.
14. பெயர் விகுதிகள், அன், ஆன், மன்,மான், ன், அள்,ஆள், இ, ள், அர், ஆர், மார், கள், ர், து, அ, வை, வ், தை, கை, பி, முன், அல், என்னும் இருபத்து மூன்றும் பிறவுமாம்.
உதாரணம். குழையன், வாகத்தான், வடமன், கோமான், பிறன், குழையள், வானத்தாள், அரசி, பறள், குழையர், வானத்தார், தேவிமார், கோக்கள், பிறர், அது, குநற்தாளன, அவை, எந்தை, எங்கை, எம்பி, எம்முன், தோன்றல்.
15. தொழிற்பெயர்விகுதிகள், தல், அல், அம், ஐ, கை,வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து என்னும் பத்தொன்பதும் பிறவுமாம்.
உதாரணம். நடத்தல், ஆடல், வாட்டம், கொலை, நடக்கை, பார்வை, போக்கு, நடப்பு, வரவு, மறதி, புணர்ச்சி, புலவி, விக்குள், சாக்காடு, கோட்பாடு, தோற்றரவு, வாரானை, நடவாமை, பாய்த்து என வரும்.
மை விகுதி, செய்தமை, செய்கின்றமை, என இறந்த காலவிடை நிலை, நிகழ்காலவிடை நிலைகளோடு கூடியும் வரும்.
துவ்விகுதி, அவர் செய்தது, செய்கின்றது. செய்வது என முக்கால விடைநிலைகளோடு கூடியும் வரும்.
16. பண்புப் பெயர்விகுதிகள், மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், நர், என்னும் பத்தும் பிறவுமாம்.
உதாரணம். நன்மை, தொல்லை, மாட்சி, மான்பு, மழவு, நன்கு, நன்றி, நன்று, நலம், நன்னர் என வருமு;.
17. தெரிநிலை வினைமுற்று விகுதிகள், அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார், அ, ஆ, கு, டு, து, று, என், ஏன், அல், அம், ஆம், எம், ஏம், ஒம், கும், டுமு;, தும், றும், ஐ, ஆய், இ, இர், ஈர், க, இய, இயர், ஆல், ஏல், மின், உம் என்னும் முப்பெத்தெட்டும் பிறவுமாம்.
உதாரணம்.
நடந்தனன், நடந்தான், நடந்தனள், நடந்தாள், நடந்தனர், நடந்தார், நடப்ப, நடமார், நடந்தன, நடவா, உண்கு, உண்டு, நடந்தது, கூயிற்று, நடந்தெனன், நடந்தேன், நடப்பல், நடப்பம், நடப்பாம், நடப்பெம், நடப்பேம், நடப்போம், உண்கும், உண்டும், வருதும், சேறும், நடந்தனை, நடந்தாய், நடத்தி, நடந்தனிர், நடந்தீர், வாழ்க, வாழிய, வாழியர், மாறல், அழேல், நடமின், உண்ணும்.
18. குறிப்பு வினைமுற்று விகுதிகள், அன், ஆன், அள், ஆள், அர், ஆர், அ,
டு, து, று, என், ஏன், அம், ஆம், எம், ஏம், ஒம், ஐ, ஆய், இ, இர், ஈர், என்னும் இருபத்திரண்டும் பிறவுமாம்.
உதாரணம்.
கரியன், கரியான், கரியள், கரியாள், கரியர், கரியார், கரியன, குநற்தட்டு, கரிது, குழையிற்று, கரியென், கரியேன், கரியம், கரியாம், கரியெம், கரியேம், கரியோம், கரியை, கரியாய், வில்லி, கரியிர், கரியீர்.
19. தெரிநிலை வினைப் பெயரெச்ச விகுதிகள், அ, உம், என்னும் இரண்டுமாம்.
உதாரணம்.
செய்த, செய்கின்ற் செய்யும்.
குறிப்பு வினைப்பெயரெச்சவிகுதி, அ ஒன்றேயாம். உம், விகுதி, இடைநிலையேலாது, தானே எதிர்காலங்காட்டலாற் குறிப்பு வiனைப் பெயரெச்சத்துக்கு வாராது.
உதாரணம். கரிய
20. தெரிநிலைவினை வினையெச்ச விகுதிகள், உ, இ, ய், பு, ஆ, ஊ, என, அ, இன், ஆல், கால், ஏல், எனின், ஆயின், ஏனும், கு, இய, இயர், வான், பான், பாக்கு, கடை, வழி, இடத்து, உம், மல், மை, மே என்னும் இருபத்தெட்டும் பிறவுமாம். இவற்றுள், இறுதியிற்கூறிய மல், மை, மே என்னும் மூன்று விகுதிகளும் எதிர்மறையில் வரும்.
உதாரணம்.
நடந்து, ஒடி, போய், உண்குபு, உண்ணா, உண்ணுh, உண்ணென, உண்ண, உண்ணின், உண்டால், உண்டக்கால்,
உண்டானேல், உண்டானெனின், உண்டானாயின், உண்டானெனும், உணற்கு, உண்ணிய, உண்ணியர், வருவான், உண்பான், உண்பாக்கு, செய்தக்கடை, செய்தவழி, செய்தவிடத்து, காண்டலும், உண்ணாமல், உண்ணாமை, உண்ணாமே.
குறிப்பு வினை வினையெச்ச விகுதிகள், அ, றி, து, ஆல், மல், கடை, வழி, இடத்து, என்னும் எட்டும் பிறவுமாம்.
உதாரணம்.
மெல்ல, அன்றி, அல்லது, அல்லால், அல்லாமல், அல்லாக்கடை, அல்லாவழி, அல்லாவிடத்து.
21. பிறவினை விகுதிகள், வி, பி, கு, சு, டு. து, பு, று என்னம் எட்டுமாம்.
உதாரணம்.
செய்வி, நடப்பி, போக்கு, பாய்ச்சு, உருட்டு, நடத்து, எழுப்பு, துயிற்று.
22. இ, ஐ, அம் என்னும் மூன்று விகுதிகளும், வினைமுதற்பொருளையுஞ் செயற்படு பொருளையும் கருவிப்பொருளையும் உணர்த்தும்.
உதாரணம்.
1. அலரி, பறவை, எச்சம், என்பன வினைமுதற்பொருளை உணர்த்தின. இவை முறையே, அலர்வது, பறப்பது, எஞ்சுவது, எனப் பொருள் படும்.
2. ஊருணி, தொடை, தேட்டம், என்பன செயற்படு பொருளை உணர்த்தின. இவை முறையே, ஊராலுண்ணப் படுவது, தொடுக்கப்படுவது, தேடபபடுவது எஎனப்பொருள்படும்.
3. மண்வெட்டி, பார்வை, நோக்கம், என்பன, கருவிப்பொருளை, உணர்த்தின. இவை முறையே, டண்வெட்டற்கருவி, பார்த்தற் கருவி, நோக்கற்கருவி எனப் பொருள்படும்.
23. இதுவரையுங் கூறிய விகுதிகளேயன்றிப் பிற விகுதிகளும் உண்டு. அவை வருமாறு:-
விடு, ஒழி, விகுதிகள், துணிவுப்பொருளை உணர்த்தும்.
உதாரணம்.
வந்துவிட்டான், கெட்டொழிந்தான், என வரும்.
கொள்விகுதி, தற்பொருட்டுப் பொருள் உணர்த்தும்.
உதாரணம்.
அடித்துக்கொண்டான்.
படு, உண், விகுதிகள் செயப்பாட்டு வினைப்பொருள் உணர்த்தும்.
உதாரணம்.
கட்டப்பட்டான், கட்டுண்டான்.
மை விகுதி தன்மைப்பொருள் உணர்த்தும்.
உதாரணம்.
பொன்மை, ஆண்மை
இரு, இடு, என்பன, தமக்கென வேறுபொருள் இன்றிப் பகுதிப்பொருள் இன்றிப் பகுதிப்பொருள் விகுதியாய் வரும்.
உதாரணம். எழுந்திருக்கின்றான், உரைத்திடுக்கின்றான்.
புணர்ந்து கெடும் விகுதி
24. முன்னிலையேவலொருமை ஆய் விகுதியும், பெயெரெச்ச விகுதியும், தொழிற்பெயர் விகுதியும், வினைமுதற் பொருளை உணர்த்தும் ஐ விகுதியும், பகுதியோடு புணர்ந்து நின்றாற் போலவே தம்பொருளை உணர்த்தும்.
உதாரணம். நீ, நட, நீ நடப்பி: இவைகளிலே ஆய் விகுதி புணர்ந்து கெட்டது.
கொல்களிறு, ஒடாக்குதிரை: இவைகளிலே பெயரெச்ச விகுதிகள் புணர்ந்து கெட்டன.
அடி, கேடு, இடையீடு : இவைகளிலே தல்லென்னுந் தொழிற்பெயர் விகுதி புணர்ந்து கெட்டது.
காய், தளிர், பூ, கனி : இவைகளிலே வினைமுதற் பொருளை உணர்த்தும் இகரவிகுதி புணர்ந்து கெட்டது.
ஊண், தீன், எழுத்து : இவைகளிலே செயப்படு பொருளை உணர்த்தும் ஐ விகுதி புணர்ந்து கெட்டது.
இடைநிலை
25. இடைநிலைகளாவன, பகுபதங்களிலே பகுதிக்கும் விகுதிக்கும் நடுவிலே நிற்கும் இடைப்பகாப்பதங்களாம். அவை, காலங்காட்டாவிடைநிலையும், காலங்காட்டுமிடைநிலையும் என இரண்டு வகைப்படும்.
26. காலங்காட்டாவிடைநிலைகள் பெயர்ப்பகுபதங்களுக்கு வரும்.
உதாரணம்.
அறிஞன் .. ஜஞஇடைநிலைஸ
ஒதுவான் .. ஜவ இடைநிலைஸ
வலைச்சி .. ஜச இடைநிலைஸ
வண்ணாத்தி .. ஜத இடைநிலைஸ
27. காலங்காட்டுமிடைநிலைகள் தெரிநிலைவினைப் பகுபதங்களுக்கு வரும்.
அவை, இறந்தகாலவிடைநிலையும், நிகழ்காலவிடைநிலையும், எதிர்காலவிடைநிலையும் என, மூன்று வகைப்படும்.
28. இறந்தகாலவிடைநிலைகள், த், ட், ற், இன், என்னும் நான்குமாம்.
உதாரணம்.
செய்தான், உண்டான், தின்றான், ஓடினான்.
சிறுபான்மை இன்னிடைநிலை, போனான், என இகரங்குறைந்தும், எஞ்சியது என னகர மெய் குறைந்தும் வரும். பேயாது என யகரமெய் இறந்தகாலவிடைநிலையாயும் வரும்.
29. நிகழ்காலவிடைநிலைகள், ஆநின்று, கின்று, கிறு என்னும் மூன்றுமாம்.
உதாரணம்.
நடவாநின்றான், நடக்கின்றான், நடக்கிறான்.
30. எதிர்கால விடைநிலைகள், ப், வ், என்னும் இரண்டுமாம்.
உதாரணம்.
நடப்பான், செய்வான்.
எதிர்மறை இடைநிலை
31. இல், அல், ஆ, என்னும் மூன்றும் எதிர்மறை யிடைநிலைகளாம். இவற்றுள், ஆகாரவிடைநிலை, வருமெழுத்து மெய்யாயிற் கெடாதும், உயிறாய்க்கெட்டும் கெட்டும் வரும்.
உதாரணம்.
நடந்திலன், நடக்கின்றிலன், நடக்கலன், நடவாதான், நடவான், நடவேன்.
நடவாதான் என்பதிலே தகரமெய் எழுத்துப்பேறு.
காலங்காட்டும் விகுதி
32. சில விகுதிகள், இடைநிலையேலாது, தாமே காலங்காட்டும், அவை வருமாறு:-
து, தும், று, றும் என்னும் விகுதிகள் இறந்தகாலமும், எதிர்காலமுங்காட்டும்.
உதாரணம்.
வந்து, (-வந்தேன்), வந்தும், (-வந்தேம்) வருது, (-வருவேன்) வருதும், (-வருவேம்) எ-ம்.
சென்று, (-சென்றேன்) சென்றும், (-சென்றேம்) சேறு, (-செல்வேன்) சேறும், (-செல்வேம்) எ-ம். வரும்.
கு, கும் என்னும் விகுதிகள் எதிர்காலங் காட்டும்.
உதாரணம்.
உண்கு, (-உண்பேன்) உண்கும், (-உண்பேம்) என வரும்
டு, டும் என்னும் விகுதிகள் இறந்தகாலங் காட்டும்.
உதாரணம்.
உண்டு, (-உண்டேன்) உண்டும், (-உண்டேம்) என வரும்.
இ என்னும் முன்னிலை வினைமுற்று விகுதி யொன்றும், ப, மர், என்னும் படர்க்கை வினைமுற்று விகுதியிரண்டும், க, இய, இயர், அல், என்னும் வியங்கோண் முற்று விகுதுp நான்கும், ஆய், இ, ஆல், ஏல், காண், மின், உம், ஈர், என்னும் முன்னிலையேவன்முற்று விகுதியேழும், ஆகிய பதிநான்கு விகுதிகளும் எதிர்காலங்காட்டும்.
உதாரணம்.
(1). சேறி, (-செல்வாய்) (2) நடப்ப, (-நடப்பார்) நடமார், (-நடப்பார்) (3) வாழ்க, வாழிய, வாழியர், உண்ணல் (4) நடவாய், உண்ணுதி, மாறல், அழேல், சொல்லிக்காண், நடமின், உண்ணும், உண்ணீர். உம் என்னஞ் செய்யுமன் முற்று விகுதி நிகழ்காலமும் எதிர்காலமுங்காட்டும்.
உதாரணம்.
உண்ணும்
எச்சவிகுதிகள் காலங்காட்டல் வினையியலிற் கண்டு கொள்க.
காலங்காட்டும் பகுதி
32. கு, டு, று, என்னும் மூன்னுயிர்மெய்களை இறுதியாக உடைய சில குறிலிணைப் பகுதிகள் விகாரப்பட்டு இறந்த காலங்காட்டும்.
உதாரணம்.
புக்கான், விட்டான், பெற்றான்.
சாரியை
33. சாரியைகள், அன், ஆன், அம், ஆம், அல், அத்து, அற்று, இன், இற்று, தன், தான், தம், தாம், நம்,நும், அ, ஆ, உ, ஏ, ஐ, கு, து, ன் என்னும் இருபத்து மூன்றும் பிறவுமாம்.
உதாரணம்.
நடந்தனன், ஒருபற்கு, புளியங்காய், புற்றாஞ்சோறு, தொடையல், அகத்தன், பலவற்றை, வய்டின் கால், பதிற்றுப் பத்து, அவன்றன்னை, அவன்றான், அவர்தம்மை, அவர்தாம், எல்லாநம்மையும், எல்லீர் நும்மையும், நடந்தது, இல்லாப்பொருள், உண்ணுவான், செய்து கொண்டான், ஆன்.
சந்தி
34. சந்திகளாவன, புணரியலிற் சொல்லப்டுவன வாகிய தோன்றல் முதலிய புணர்ச்சி விகாரங்களாம்.
விகாரம்
35. விகாரங்களாவன, மெல்லின மெய்யை வல்லின மெய்யாக்கலும், குற்றெழுத்தை நெட்டெழுத்தாக்களும், நெட்டெழுத்தை கற்றெழுத்தாக்கலும், இல்லாத எழுத்தை விரித்தலும், உள்ள எழுத்தை தொகுத்தலும் ஆகும்.
நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
Read More:
- தமிழ் இலக்கணம் – திணை மற்றும் பால்
- தன்மை முன்னிலை வினைமுற்று
- தமிழ் இலக்கண நூல்கள்
- தமிழ் இலக்கணத்தின் வகைகள்
- தன்மை வினைமுற்று
- முற்று வினை என்றால் என்ன
- இடவேற்றுமை பெயர்கள்
- வேற்றுமை உருபு
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க
- தமிழ் பழமொழிகள்
- Read More: தமிழ் இலக்கணம் – திணை மற்றும் பால்
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்