நீசபங்கம் ராஜயோகம் என்றால் என்ன?

இந்த பதிவில் நீசபங்கம், நீசபங்க ராஜயோகம் என்றால் என்ன? மற்றும் நீசபங்க விதிகள் என்னென்ன? இருக்கின்றன என்று பார்ப்போம். கிரகங்களின் நீச வீடுகள் நமக்கு ஏற்கெனவே தெரிந்தவை. நீசமான கிரகங்கள் பலமிழந்து இருக்கும். நீசபங்கம் என்பது நீசம் ஆன கிரகங்கள் பங்கம் ஆகி, பலம் பெற்று ஜாதகருக்கு பலன்களை வழங்கும்.

நீசபங்க விதிகள்

1. ஒரு கிரகம் நீசம் அடைந்திருப்பின் நீசம் அடைந்த வீட்டின் அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் நீசம் பங்கம் ஆகும்.

2. நீச வீட்டின் அதிபதி ஏதாவது ஒரு வகையில் பரிவர்த்தனை பெற்றிருந்தால் நீசம் பங்கமாகும்.

3. நீச கிரகம் நீச வீட்டின் அதிபதியுடன் சேர்க்கை அல்லது பார்வை என தொடர்பு பெற்றிருந்தால் நீசம் பங்கமாகும்.

4. உச்சம் பெற்ற கிரகம் நீச கிரகத்தை பார்த்தால் நீசம் பங்கமாகும்.

5. நீச கிரகம் சந்திரனுக்கு கேந்திரம் என்னும் 1,4,7,10ஆம் வீட்டில் நின்றாள் நீசம் பங்கமாகும்.

6. நீசம் பெற்ற கிரகம் வர்கோத்தமம் பெற்றால் நீசம் பங்கமாகும்.

7. நீசம் பெற்ற கிரகம் நவாம்சத்தில் உச்சம் பெற்றால் நீசம் பங்கமாகும்.

8. நீசக்கிரகம் வக்கிரமானால் நீசம் பங்கமாகும்.

நீசபங்க ராஜயோகம்

உண்மையிலே நீசபங்க ராஜயோகம் அமைப்பு என்பது மேலே கொடுக்கப்பட்டுள்ள நீசபங்க விதிகளில் 3க்கு மேல் பொருந்தும் ஜாதக அமைப்பு நீசபங்க ராஜயோக அமைப்பை பெரும்.

நீசபங்கம் உதாரணம் (நீசபங்க ராஜயோகம்)

நீசபங்கம் ராஜயோகம்

நீசபங்கம் ராஜயோகம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் புதன் நீசபங்கம் ஆகியுள்ளது. அதனை பார்ப்போம்.

புதன் குருவுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார்.

புதன் உச்சம் பெற்ற சுக்கிரனுடன் சேர்ந்துள்ளார்.

புதன் சந்திரனுக்கு கேந்திரத்தில் உள்ளார்.

இதுபோல மேல்கூறிய விதிகளை உங்களுடைய ஜாதகத்திற்கு பொருத்தி பார்த்து பலன் பெறுக.

தெரிந்துகொள்க

You may also like...