நிச்சயதார்த்தம் நிகழ்வு

நிச்சயதார்த்தம் நிகழ்வு – பெண் பார்க்கும் நிகழ்வு முடிந்தபின்பு ஆண்-பெண் இரு வீட்டாருக்கும் பிடித்துப்போக திருமணம் வரை அதன் உறுதிப்பாடு மாறாமல் இருக்க செய்யும் சடங்கே நிச்சயதார்த்த நிகழ்ச்சி  ஆகும். திருமண சடங்குகளில் இது மிகவும் முக்கியமாக சடங்கு ஆகும்.

நிச்சயதார்த்தம் நிகழ்வு

நிச்சயதார்த்தம் நிகழ்வு

அவ்வாறு நடக்க இருக்கும் முக்கியமான நிச்சயதார்த்தம் சடங்கை எப்பொழுது செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.

தெரிந்துகொள்க: திருமண பொருத்தம் | நட்சத்திர பொருத்தம் | பெண் பார்க்கும் நிகழ்ச்சி

திங்கள், புதன், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் செய்வது உத்தமம்.

துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, மற்றும் திரயோதசி ஆகிய திதிகளில் செய்வது உத்தமம்.

நட்சத்திரங்களில் அஸ்வினி ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி போன்றவற்றில் செய்வது உத்தமம்.

முகூர்த்த லக்கினத்திற்கு கேந்திரத்தில் இயற்கை பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது நல்ல அமைப்பு.

தெரிந்துகொள்க:

You may also like...