நவகிரக ஸ்தலங்கள்

நவகிரக ஸ்தலங்கள் – இந்த பதிவில் நவகிரக கோயில்கள் மற்றும் நவகிரக கோயில்கள் சென்னை அவை எந்த ஊரில் உள்ளன என்றும் மேலும் அங்கு செல்வதால் ஏற்படும் பலன்கள் பற்றி பார்ப்போம்.முதலில் நவகிரகங்களும் அதற்கான கோயில்களும் எவை என்று தெரிந்து கொள்வோம்.

நவகிரக ஸ்தலங்கள்

நவகிரக ஸ்தலங்கள்

நவகிரகங்களும் கோயில்களும்

சூரியன் – சூரியனார் கோயில், திருவாவடுதுறை
சந்திரன் – திங்களூர் கைலாசநாதர் கோயில் (சந்திரன் கோயில்), திருப்பதி வெங்கடேச பெருமாள்
செவ்வாய் – வைத்தீஸ்வரன் கோயில் (மயிலாடுதுறை)
புதன் – திருவெங்காடு (கும்பகோணம் அருகில்), மதுரை சொக்கநாதர் கோயில்
குரு – திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில்
சுக்கிரன் – ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோயில்
சனி – திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் திருக்கோயில்
ராகு – திருநாகேசுவரம் நாகநாதசுவாமி திருக்கோயில்
கேது – கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி திருக்கோயில்

சூரியன் – சூரியனார் கோயில் திருவாவடுதுறை

சூரியனார் கோயில் செல்வதனால் ஒருவருக்கு புகழ், அந்தஸ்து, கௌரவம் உயரும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலம் கிடைக்கும். தந்தை மகன் உறவு நன்றாக இருக்கும். எலும்பு இதயம் மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

சந்திரன் – திங்களூர் கைலாசநாதர் கோயில்

திங்களூர் கைலாசநாதர் கோயில் சென்று வழிபடுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஞாபக சக்தி அதிகரிக்கும். மனநிலை சீரடையும். ஹோட்டல் தொழில், பால் வியாபாரம் செய்பவர்கள் நன்கு முன்னேறுவார்கள். புனர்பூ தோஷம் உள்ளவர்கள் இந்த கோயில் செல்வதனால் தோஷம் நீங்கி திருமணம் கைகூடும். கவிதைத்திறன் அதிகரிக்கும்.

செவ்வாய் – வைத்தீஸ்வரன் கோயில்

செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு திருமண தடை நீங்கும். நிர்வாகத்திறன் ஓங்கும். நிலம் வீடு வாகனம் யோகம் அமையும் அவற்றினால் வருமானம் உண்டாகும். சீருடைப்பணி செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பங்காளிகள் ஒற்றுமை ஓங்கும்.

புதன் – திருவெங்காடு

இக்கோயில் செல்வதனால் வியாபாரத்தில் அனுகூலம் உண்டாகும். கல்வி திறன் அதிகரிக்கும்,.கலைகள் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். தோல் மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகும். கமிஷன், தரகு தொழில், ஏஜென்சி நடுத்துபவர்களுக்கு தொழில் விருத்தியடையும். கதை எழுதும் திறன் அதிகரிக்கும். காலியான நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.

குரு – திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில்

மக்கள் இக்கோயில் சென்று வருவதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமண தடை நீங்கும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மேலதிகாரிகளிடம் நன்மதிப்பு உண்டாகும். குழந்தைகளினால் நன்மை உண்டாகும்.

சுக்கிரன் – ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோயில்
பணம் சேமிப்பு உயரும். விரைவில் திருமணம் கைகூடும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். கணவன்-மனைவி உறவு மேம்படும். களத்திர தோஷம் நீங்கும். சினிமா, கலைத்துறையில் உள்ளவர்களுக்கு தொழில் மேம்படும். மனைவியால் யோகமும் பொருள் சேர்க்கையும் உண்டாகும்.

ராகு – திருநாகேசுவரம் நாகநாதசுவாமி திருக்கோயில்

இங்கு ராகு காலத்தில் சென்று வழிபடுவது நல்லது. தந்தை வழி உறவுகளுடன் சுமூகமான உறவு உண்டாகும். காரியத்தடை, திருமணத்தடை நீங்கும். பிரச்சனைகள் நீங்கும். சாப்ட்வேர், ஆன்லைன் தொழில், மாந்திரிகம், செய்வினை போன்ற தொழில்களால் மேன்மை உண்டாகும். தீராத நோய்கள் குணமாகும்.

கேது – கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி திருக்கோயில்

இங்கு சென்று வழிபடுவதன் மூலம் தாய்வழி உறவுகளுடன் சுமூகமான உறவு ஏற்படும். தெய்வ அனுகூலம் உண்டாகும். திருமண தடை, புத்திரத்தடை நீங்கும். தையல் தொழில், சணல், நூல் wire, ஜோதிடம், சாப்ட்வேர் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

நவகிரக ஸ்தலங்கள் சென்னை

சென்னையில் உள்ளவர்கள் அருகில் உள்ள நவகிரக கோயில்கள் சென்று வழிபடலாம். அவற்றை காண்போம்.

சூரியன் – அகத்தீஸ்வரர் கோயில் – கொளப்பாக்கம்
சந்திரன் – சோமநாதேஸ்வரர் கோயில் – சோமங்கலம்
செவ்வாய் – வைத்தீஸ்வரர் கோயில் – பூந்தமல்லி
புதன் – திருமேனீஸ்வரர் கோயில் – கோவூர்
குரு – ராமநாதேஸ்வர் கோயில் – போரூர்
சுக்கிரன் – வெள்ளீஸ்வரர் திருக்கோயில் – மாங்காடு
சனி – அகத்தீஸ்வரர் கோயில் – பொழிச்சலூர்
ராகு – திருநாகேஸ்வரர் கோயில் – குன்றத்தூர்
கேது – நீலகண்டேஸ்வரர் கோயில் – கெருகம்பாக்கம்

தெரிந்துகொள்க 

Video: அடிப்படை ஜோதிடம் கற்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

You may also like...