பொதுவாக நவகிரகங்களின் சப்த வலிமை என்னவென்றால் நவகிரகங்கள் ராசிகளில் நிற்க ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம், நட்பு, சமம், பகை, நீசம் என்ற வலிமையை அடைகின்றன என்பதை நாம் அறிவோம்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

ஆனால், மேற்கூறிய நிலையில் இருந்தால் எந்த அளவு பலம் என்று எப்படி கணக்கிடுவது என்று பார்ப்போம்.
நவகிரகங்களின் வலிமை அளவு
ஒரு கிரகம் தனது உச்ச வீட்டில் இருந்தால் 2 பங்கு பலம் (200%)
ஒரு கிரகம் தனது மூலத்திரிகோண வீட்டில் இருந்தால் 1.75 அளவு பலம் (175%)
ஒரு கிரகம் தனது ஆட்சி வீட்டில் இருந்தால் – 1.5 அளவு பலம் (150%)
ஒரு கிரகம் தனது நட்பு வீட்டில் இருந்தால் 1 பங்கு அளவு பலம் (100%)
ஒரு கிரகம் தனது சமம் வீட்டில் இருந்தால் 0.75 பங்கு அளவு பலம் (75%)
ஒரு கிரகம் தனது பகை வீட்டில் இருந்தால் 0.5 பங்கு அளவு பலம் (50%)
ஒரு கிரகம் தனது நீச வீட்டில் இருந்தால் 0.25 பங்கு அளவு பலம் (25%)
இதனை கணக்கில் கொண்டு கிரகங்களின் பலனை கண்டறிய வேண்டும். அதற்கென இதனை அப்படியே நேரடியாக பலன் சொல்ல எடுத்துக்கொள்ள கூடாது. அந்த கிரகம் லக்கினதிற்கு நட்பு வீட்டில் உள்ளதா பகை வீட்டில் உள்ளதா என்று ஆராய வேண்டும்.
தெரிந்துகொள்க
- ஷட்பலம் என்றால் என்ன?
- ஆத்மகாரகன் என்றால் என்ன?
- அஸ்தமனம் என்றால் என்ன?
- வக்கிரம் என்றால் என்ன?
- பரிவர்த்தனை யோகம்
- கிரகயுத்தம் என்றால் என்ன?
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்