இந்த பதிவில் நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி? ஏக நட்சத்திரம் திருமணம் செய்யலாமா, ஒரே ராசியில் திருமணம் செய்யலாமா என்று விளக்கமாகவும் தெளிவாகவும் தெரிந்துகொள்வோம்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
பொதுவாக நட்சத்திர பொருத்தம் ஆயுள் மற்றும் ஆரோக்கிய விருத்திக்காக பார்க்கப்படுகிறது. இது ஆண், பெண் என இருபாலரின் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்க கூடியது.
தெரிந்துகொள்க:- ராகு கேது தோஷ திருமண பொருத்தம் | திருமண பொருத்தம்
பெண்ணின் நட்சத்திரம் முதல் ஆணின் நட்சத்திரம் 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24, 26 ஆக வந்தால் உத்தமம். மற்ற அமைப்பில் இருந்தால் பொருத்தம் இல்லை.
ஜென்ம நட்சத்திரம் முதல் 10வது நட்சத்திரம் கர்ம நட்சத்திரம்
7-வது நட்சத்திரம் வதம்
19-வது நட்சத்திரம் அனு ஜென்மம்
22-வது நட்சத்திரம் 4ஆம் பாதம் வைநாசியம்
27-வது நட்சத்திரம் ம்ருத்யு நட்சத்திரம்
27-வது நட்சத்திரம் வேறு ராசியாக இருந்தால் பொருத்தம் இல்லை, ஒரே ராசியாக இருந்தால் பொருத்தம் உண்டு.
ரோகிணி, திருவாதிரை, மகம், விசாகம், திருவோணம், ஹஸ்தம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 8 நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் உத்தமம். இன்னும் பல விதிகள் உண்டு தெரிந்துகொள்க
பூரம், உத்திரம், சித்திரை, புனர்பூசம், பூசம், அஸ்வினி, கார்த்திகை, பூராடம், உத்திராடம், மிருகசீரிடம், அனுஷம் ஆகிய 11 நட்சத்திரங்களும் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் மத்திமம்.
திருமண பொருத்தத்தில் ஒரே ராசியாக இருந்தால் ஆணின் நட்சத்திரம் அல்லது நட்சத்திர பாதம் முந்தி இருந்தால் உத்தமம். மேற்கூறிய நட்சத்திரங்கள் இல்லாமல் மற்ற நட்சத்திரங்கள் இருந்தால் பொருத்தம் இல்லை.
பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து 7வது நட்சத்திரம் ஆணின் நட்சத்திரம் வந்தால் பொருத்தம் இல்லை. ஆணின் நட்சத்திரத்தில் இருந்து 22வது நட்சத்திரமாக பெண்ணின் நட்சத்திரம் வந்தால் பொருத்தம் இல்லை இவை இரண்டும் ஒதுக்கப்பட வேண்டும்.
இருப்பினும் இதில் திருவாதிரை – உத்திரம்; பூரம் – அனுஷம்; பூசம் – சித்திரை; புனர்பூசம் – ஹஸ்தம்; பூரட்டாதி – ரோகினி; உத்திராடம் – ரேவதி; மூலம் – பூரட்டாதி; பரணி – பூசம்; ஆகியவைக்கு 7வது 22வது நட்சத்திரமாக வந்தால் விதிவிலக்கு ஆகும், பொருத்தம் உண்டு.
நன்றி வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்
கேள்வி பதில்கள்
திருமணம் செய்ய கூடாத நட்சத்திரம் எவை?
ஏற்கெனவே வேறு பதிவில் சேரக்கூடாது நட்சத்திரங்கள் பற்றி தெளிவாக கூறியுள்ளோம் லிங்க் ஐ கிளிக் செய்யவும். Star Matching Table for Marriage in Tamil
திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எவை?
ஏக நட்சத்திரமாக இருந்து பொருந்தும் நட்சத்திரங்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், திருவோணம். மற்றபடி பொதுவாக என்றால் இந்த லிங்க் ஐ கிளிக் செய்யயவும். Star Matching Table for Marriage in Tamil
எத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்?
அனுபவத்தில் 5க்கு மேல் இருந்தால் நல்லது. அதுமட்டும் போதாது இவருடைய ஜாதக பாவக ஆய்வும் மேற்கொண்டு திருமணம் முடித்தல் நல்லது.
திருமண நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி?
திருமண நட்சத்திர பொருத்தம் தெரிந்து கொள்ள இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும். திருமண பொருத்தம்
ஒரே ராசி ஒரே லக்னம் திருமணம் செய்யலாமா?
ஒரே ராசி ஒரே லக்கினம் திருமணம் செய்யலாம் இருப்பினும் திசா சந்தி இல்லாமலும் ரஜ்ஜு பொருத்தம், யோனி பொருத்தம் இருக்க வேண்டும். மேலும் இவருடைய கட்ட பொருத்தம் பார்த்து முடிவு எடுக்க வேண்டும்.
ஏகராசி ஏக நட்சத்திரம் பொருத்தம் செய்யலாமா?
இந்த பதிவில் மேலே நாங்கள் குறிப்பிட்டுள்ளோம் ஏக நட்சத்திரம் உத்தம பொருத்தம் உள்ளவை மற்றும் மத்திம பொருத்தம் உள்ளவை அதனை ஏற்படும் பிரச்சனைகள் என்று அதனை தெளிவாக படித்து பயன் பெறவும். நன்றி
- திருமண பொருத்தம்
- ராசி பொருத்தம் விளக்கம்
- மகேந்திர பொருத்தம்
- யோனி பொருத்தம்
- ராகு கேது தோஷ திருமண பொருத்தம்
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க
- Read All Astrology Articles in English
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்