
தொண்டை வலிக்கு வீட்டு வைத்தியம் – இன்றைய உலகத்தில் தொண்டை வலிகள் பாதிக்கப்படுபவர் அதிகம். தொண்டை வலியானது பொதுவாக பலபேருக்கு பலவிதமாக உண்டாகும். சிலர் அடித் தொண்டையில் உணர்வீர்கள். சிலருக்கு மிகுந்த வேதனையைக் கொடுக்கும் அளவிற்கு இருக்கும். சிலருக்கு ஒரு பக்கம் மட்டும் வலி இருக்கும். சிலருக்கு தொண்டையில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
பெரும்பாலான தொண்டை வலிகள் நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை. சில வலிகள் மருந்துகள் ஏதும் எடுத்துக்கொள்ளாமலே மாறக் கூடியவை. நாம் தெரிந்து கொள்ளவேண்டியது தொண்டை வலி என்பது ஒரு நோயல்ல, அறிகுறி மாத்திரமே. பல்வேறு நோய்களில் இதுவும் ஒரு அறிகுறியாக வெளிப்படும்.
தொண்டை வலிகள் உருவாக காரணம்
1) வைரஸ் தொற்று
2) பாக்டீரியா தொற்று
குரல்வளையில் ஏற்படும் வைரஸ் தொற்று நோயில் தொண்டையில் கரகரப்பு, பேசுவதில் சிரமம், குரல் மாற்றம் போன்ற அறிகுறிகளுடன் தொண்டை வலியும் சேர்ந்து வரும்.
பாக்டீரியா தொற்று மூலம் உண்டாகும் தொண்டை வலி ஸ்ரெப்ரோகோகஸ் கிருமியால் ஏற்படும் . காய்ச்சல் இருந்தபோதும் சளி மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் இருப்பதில்லை.
வளிமண்டலத்தில் குறைந்த ஈரப்பதம், புகைபிடிப்பது, சுற்று சூழலில் படர்ந்த தூசி போன்றவையும் தொண்டைவலி உருவாகிறது.
தொண்டை வலியுடன் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் மருத்துவரைக் காண்பது மிக அவசியம். அதேபோல தொண்டை வலியுடன் கழுத்தில் நெறிக்கட்டிகள் தெரிந்தால் மருத்துவரை அணுகவும். கடுமையான காய்ச்சலுடன் திடீரென தொண்டை வலி ஏற்பட்டாலும் இந்த அறிகுறிகள் ஒரு வாரம் மேல் நீடித்தாலும் மருத்துவரை சந்திக்கவும்.
தொண்டை வலிக்கு செய்ய வேண்டியது
உப்பு நீரால் அலசிக் கொப்பளிப்பது நல்லது.
நீராவி பிடிப்பதில் பலர் நல்ல பலன் உண்டு.
சூடான நீராகாரங்களைப் பருகுவது நல்லது.
பரசிட்டமோல் மாத்திரைகளை அவசியமானால் மருத்துவரின் யோசனையுடன் உபயோகிக்கலாம்.
தொண்டை வலி வீட்டு வைத்தியம்
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து 2 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடிக்கவும்.
இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு 150மி லி நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி, ஒரு நாளைக்கு மூன்று வேளை பருகி வர வறட்டு இருமல் குணமாகும்.
தொண்டை வலி வரும்போது உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பது நல்ல பலனை தரும்.
இஞ்சி தேநீர் அருந்துவது அல்லது இஞ்சிச்சாறு உட்கொள்வது இருமலுக்கு சிகிச்சையளிக்க மிகவும் பயனுள்ள தீர்வாகும்.
ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு டம்ளர் பாலில் கலந்து காய்ச்சி வடிகட்டி, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும்.
அரை ஸ்பூன் இஞ்சிச்சாறு, ஒரு ஸ்பூன் எலுமிச்சம்சாறு, ஒரு ஸ்பூன் புதினாச்சாறு, ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டால் இருமல், தொண்டைவலி குணமாகும்.
குறிப்பு: இஞ்சி டீ அதிகமாக குடிக்கவேண்டாம். அதனால் வயிற்று வலி அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுத்தலாம்.
மிளகுக்கீரை தேநீரை ஒரு நாளைக்கு 2-3 முறை சாப்பிடுவது இருமல் பிரச்சனையைக் குறைக்கும்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !
Read More:
உடலில் ஏற்படும் புண்கள் குணமாக
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்