துணி கனவு பலன்கள் – Thuni Kanavu Palangal in Tamil – இந்த பதிவில் துணி கனவில் வந்தால் என்ன பலன் என்று தெரிந்துகொள்வோம். வழக்கமாக துணிகளை பற்றிய கனவுகள் உங்கள் திறமை மற்றும் நிதி நிலையை பற்றியதாகவே இருக்கும்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

நீங்கள் துணிகளை வாங்குவது போல் கனவு கண்டால் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும்.
பழைய துணியை தானமாக தருவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி நன்மை உண்டாகும்.
Read More: புடவை கனவு பலன்கள்
புதிய ஆடைகள் வாங்குவதற்கு செல்கிறீர்கள் என்று கனவு கண்டால், ஆழ்மனதில் எதோ சிலவற்றை அனுபவிக்க விரும்புவதை குறிக்கும்.
புது துணி வாங்குவது போல் கனவு கண்டால் உடல்நலம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும்
துணிகளை மாற்றுவது போல் கனவில் கண்டால் உங்கள் ஆளுமை திறமையை பயன்படுத்தி எப்படியாவது முன்னேற வேண்டும் என்பதை குறிக்கும்.
நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஆடைகளை மாற்றி அணிந்து கொண்டிருந்தால், ஏதோ ஒரு நல்ல முன்னேற்றத்திற்காக உங்களுடைய குணத்தை மாற்ற வேண்டி இருக்கும். அவ்வாறு மாற்றிக்கொண்டால் அதில் வெற்றியும் காண்பீர்கள்.
புதிய ஆடைகளை அணிந்திருப்பது போல் கனவில் வந்தால், அந்த கனவு பொதுவாக உங்கள் ஆளுமைத் திறன்(குணம்) மாற்றத்தை குறிக்கிறது.
பொருத்தமில்லாத ஆடைகளை அணிந்திருப்பது போல கனவில் வந்தால், உங்களுடைய தவறான நடத்தையை உங்களுடைய கடமையை செய்ய தவறவிட்டீர்கள் என்பதை குறிக்கும் எச்சரிக்கையுடனும் தெளிவுடனும் இருக்க வேண்டும்.
வித்தியாசமாக உடையணிந்த ஒரு கூட்டத்தில் நீங்கள் இருப்பதாக கனவு கண்டால், அந்தக் கனவு மற்றவர்களை விட நீங்கள் விதியாசமானவராக இருக்கிறீர்கள் என்பதை குறிக்கும்.
கிழிந்த அல்லது அசுத்தமான ஆடைகள் அணிந்திருப்பதை போல கனவு காண்பது ஒரு மோசமான அறிகுறியாகும். இந்த கனவு பெரும்பாலும் நற்பெயரைக் கெடுப்பதை குறிக்கும். ஆகவே கவனமாக இருப்பது நல்லது.
நீங்கள் பிளவுஸ் அல்லது பாவாடை அணிந்திருப்பது போல கனவில் வந்தால், உணர்வுபூர்வமாக காரணங்களால் நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை மறைக்கிறீர்கள் என்று பொருள், ஆனால் உங்கள் வாழ்க்கையில் ஒருவரையும் உள் நுழைய அனுமதிக்க வேண்டாம். மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
நீங்கள் துணிகளை துவைப்பது போல கனவு கண்டால், உங்கள் ஆளுமை, உங்கள் பழக்கம், நம்பிக்கைகள் மற்றும் முயற்சிகளில் முன்னேற்றத்தை குறிக்கும்.
நீங்கள் கருப்பு நிற ஆடைகளை அணிந்திருப்பது போல உங்கள் கனவில் கண்டால், வாழ்க்கையில் சில புதிய சூழ்நிலைகளை சந்திப்பீர்கள்.
உங்கள் கனவில் வெள்ளை நிற ஆடைகளை அணிந்திருப்பது போல கனவு கண்டால் நல்லதல்ல. இது உங்கள் வாழ்க்கையில் நடக்க இருக்கும் எதிர்மறையான செயல்களை குறிக்கும். அதுவே வேறு ஒருவர் வெள்ளை நிற ஆடையை அணிந்திருப்பது போல கனவு கண்டால் துரதிர்ஷ்டத்தை குறிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.
Read More:
- புடவை கனவு பலன்கள்
- கனவு பலன்கள்
- பெண் கனவு பலன்கள்
- கோயில் கனவு பலன்கள்
- பணம் கனவு பலன்கள்
- ஜோதிடம் தொடர்பான பதிவுகள்
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்