திருஷ்டி பலம்

திருஷ்டி பலம் – ஜோதிடத்தில் பலன் சொல்ல பல கணக்குகள் இருந்தாலும் ஷட்பலம் முக்கியம் அதில் ஒன்றாக திருஷ்டி பலம் உள்ளது. அதனை எவ்வாறு பலன் சொல்ல பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

பொதுவாக திருஷ்டி என்றால் பார்வை என்று பொருள். கிரகங்கள், சுபக்கிரகங்கள் மற்றும் அசுப கிரகங்களின் பார்வை பெற்றுள்ளதா என்று பார்ப்பது திருஷ்டி பலம். இங்கு சுபம் அசுபம் என்பது லக்கின ரீதியாக கணக்கிட வேண்டும்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் பார்வை உண்டு அவற்றை முதலில் தெரிந்துகொள்வோம்.

சூரியன் 7ஆம் பார்வை
சந்திரன் 7ஆம் பார்வை
செவ்வாய் 4,7,8ஆம் பார்வை
புதன் 7ஆம் பார்வை
குரு 5,7,9ஆம் பார்வை
சுக்கிரன் 7ஆம் பார்வை
சனி 3,7,10ஆம் பார்வை
ராகு, கேதுவுக்கு சிலர் 7ஆம் பார்வை உண்டு என்றும் சிலர் இல்லை என்றும் கூறுவார்கள்.

என்னை பொறுத்தவரையில் ராகு கேது இரண்டும் தான் இருக்கும் வீட்டில் மற்றும் உடன் இருக்கும் கிரக காரத்தை தான் பாதிக்கும், ஆதலால் பார்வை இல்லை என்றே எடுத்துக்கொள்வேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே.

இப்பொழுது, ஒரு ஜாதகத்தில் திருஷ்டி இருக்கிறதா என்று எளிதாக பார்த்துவிடலாம். ஏனென்றால் செவ்வாய், குரு, சனி தவிர மற்ற கிரகங்களுக்கு 7ஆம் பார்வை மட்டுமே உண்டு.

இதை பலன் சொல்ல நேரடியாக பயன்படுத்தாமல் லக்கின சுபர் பார்வை பெற்றால் நல்ல பலன் என்றும் லக்கின பாவர் பார்த்தால் மாறான பலன் என்றும் எடுத்து பலன் சொல்ல வேண்டும்.

குறிப்பு:

குரு 5,7,9ஆம் பார்வை எங்கு விழுந்தாலும் அந்த பாவகம் வலுப்பெறும். இங்கு நல்ல பாவமாக இருப்பின் நல்லது மறைவு ஸ்தான பாவமாக இருந்தால் பலனில் மாற்றம் உண்டு.

அதே போல சனி பார்க்கும் பாவகமும் சற்று தாமதத்தையும் தடங்கல்களையும் தரும், லக்கின சுபராக இருப்பின் தாமதத்தை கொடுத்தாலும் நல்ல பலனையே தருவார்.

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்