திருமாங்கல்யம் செய்ய உகந்த நாள்

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

திருமாங்கல்யம் செய்ய உகந்த நாள் – திருமண சடங்குகளில் நிச்சயதார்த்தம் நிகழ்வு முடிந்தபின்பு திருமாங்கல்யம் செய்வது மிகவும் முக்கியமான சடங்கு ஆகும். திருமாங்கல்யம் பொதுவாக மங்களத்தின் அடையாளம் ஆகும். கணவன் மனைவியின் உறவை மேம்படுத்த நம்மளுடைய கலாச்சாரத்தில் மாங்கல்யம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

திருமாங்கல்யம் செய்ய உகந்த நாள்
திருமாங்கல்யம் செய்ய உகந்த நாள்

மாங்கல்யம் செய்ய கீழ்கண்ட விதிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும்.

தெரிந்துகொள்க: பெண் பார்க்கும் நிகழ்ச்சி

திருமாங்கல்யம் செய்ய உகந்த நாள்

மாங்கல்யம் செய்யும் அல்லது வாங்கும் நாள் துவிதியை, திருதியை, பஞ்சமி, தசமி, ஏகாதசி, துவாதசி மற்றும் திரயோதசி ஆகிய திதிகளாக இருக்க வேண்டும்.

அஸ்வினி, ரோஹிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம் மற்றும் ரேவதி நட்சத்திரங்களாக இருப்பது உத்தமம்.

மாங்கல்யம் செய்யும் நாள் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்களாக இருக்க வேண்டும்.

அதேபோல மேற்கண்ட லக்னங்களுக்கு 2ஆம் இடத்தில் எந்த கிரகங்களும் இல்லாமல் சுத்தமாக அமைய வேண்டும்.

தெரிந்துகொள்க:

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்