திருடு போவது போல் கனவு வந்தால்

இந்த பதிவில் திருடு போவது போல் கனவு வந்தால் (Thiruttu Nadappadhu Pol Kanavu Palangal Tamil), கனவில் திருடன் வந்தால், திருடனை பிடிப்பது போல கனவு வந்தால் என்னென்ன பலன்கள் என்று தெளிவாக பார்ப்போம். (Video – திருடு சம்பந்தமான கனவு கண்டால் என்ன பலன்கள்)

திருடு போவது போல் கனவு வந்தால்

திருடு போவது போல் கனவு வந்தால்

திருடு போவது போல் கனவு வந்தால்

உங்கள் வீட்டிலேயே திருடு நடப்பது போல் கனவு வந்தால் எதோ தர்ம சங்கடத்தில் அல்லது அடுத்த கட்ட வாழ்க்கை நகர்தலை எண்ணி குழப்பமான மன நிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உங்களுடைய பணம் திருடு போவது போல கனவு வந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களுடைய திட்டம் அடுத்தகட்ட முயற்சி ஆகியவற்றை யாரிடமும் பகிர வேண்டாம். நேர்மையுடன் இருப்பின் நன்மை உண்டாகும்.

உணவு பொருள்கள் திருடு போவது போல கனவு வந்தால் நீங்கள் எதோ பிரச்சனைகளால் தவிப்பதை குறிக்கிறது.

வேறு எங்கேயோ திருடர்கள் கொள்ளை அடிப்பது போல கனவு கண்டால் நீங்கள் யாருக்காவது உதவ முயன்று கடைசியில் உதவ முடியாமல் இருந்திருக்கலாம். உங்களை நம்பி யாரேனும் தர்ம சங்கடத்திற்கு ஆளாகிருப்பார்கள்.

போலீசில் திருட்டை பற்றி புகார் அளிப்பது போல் கனவு வந்தால் உங்களை சுற்றி இருப்பவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கனவில் திருடன் வந்தால்

திருடனை எதிரே நின்று பார்த்துக்கொள்வது போலவோ அல்லது திருடனிடம் பையை பிடுங்குவது போல கனவு கண்டால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே திருடனை நீங்கள் துரத்துவது போல கனவு கண்டால் நேர்மையான முயற்சியால் வெற்றிகள் தேடி வரும் என்று பொருள்.

ஒரு திருடனால் நீங்கள் தாக்க படுவது போல கனவு கண்டால் உங்களை சுற்றி மறைமுகமாகவோ நேரடியாகவோ எதிரிகள் உள்ளனர் என்று பொருள்.

திருடனை பிடிப்பது போல கனவு கண்டால் நீங்கள் நேர்மையானவர் என்று பொருள். நற்பெயர் கிட்டும்.

திருடனை பிடிப்பது போல கனவு கண்டால் போராடி வெற்றி பெறுவீர்கள் என்று பொருள்.

Read More

You may also like...