திரிகோணம் ஸ்தானம் என்றால் என்ன?

இந்த பதிவில் ஜாதகத்தில் திரிகோணம் ஸ்தானம் என்றால் என்ன? திரிகோணம் பொருள் என்ன என்று தெரிந்து கொள்வோம் மேலும் திரிகோண அதிபதிகள் யார் என்றும் தெரிந்து கொள்வோம்.

திரிகோணம் ஸ்தானம்
திரிகோணம் ஸ்தானம்

திரிகோணம் பொருள்

உலகில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் கர்ம வினையின் அடிப்படையில் நன்மை தீமைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அவ்வாறு நிர்ணயம் செய்த நன்மை தீமைகள் தனி நபருடைய ஜாதகத்தின் லக்கினம் என்னும் மையப்புள்ளியிலிருந்தே தீர்மானிக்கப்படுகின்றன. எனவே லக்கினம்(அ)1ஆம் பாவம் மிகவும் முக்கிய ஸ்தானமாக கருதப்படுகிறது. இதுவே திரிகோணத்தில் முதல்இடமாகவும் கருதப்படுகிறது.

5ஆம் பாவம்: ஒருவருக்கு நிர்ணயிக்கபட்ட சுக துக்கங்கள் அவர் செய்த முன் ஜென்மத்தில் செய்த புண்ணியங்கள் மற்றும் பாவங்கள் பொருத்தே தீர்மானிக்கப்படுகின்றன. இதில் பூர்வ ஜென்ம புண்ணியங்கள் மற்றும் பாவங்களை குறிக்கும் இடமாக 5ஆம் பாவகம் குறிப்பிடப்படுகிறது. இது திரிகோணத்தின் இரண்டாவது ஸ்தானமாகும்.

9ஆம் பாவம்: 5ஆம் பாவம் எவ்வாறும் நாம் செய்த பாவ புண்ணியங்களை குறிக்கிறதோ அதேபோல் 9ஆம் பாவம் நம் முன்னோர்கள்(தந்தை மற்றும் அவருடைய மூதாதையர்கள்) செய்த பாவம் மற்றும் புண்ணியத்தை குறிக்கும்.

திரிகோண அதிபதிகள்

திரிகோண அதிபதிகள் என்பது ஒவ்வொருவருடைய ஜாதகத்திற்கும் ஏற்ப மாறுபடும். லக்கினம் எந்த ராசியில் உள்ளது அந்த ராசியின் அதிபதியே லக்கின அதிபதி ஆவார். அதேபோல லக்கினத்தை 1 என வைத்து கடிகார சுழலும் திசையில் என்ன 5வது ராசி மற்றும் 9வது ராசி கணக்கிட வேண்டும். கீழே ராசிகள் மற்றும் ராசி அதிபதிகள் யார் என்று குறிப்பிட்டுள்ளோம் படித்து தெரிந்து கொள்ளவும்.

மேஷம் – செவ்வாய்
ரிஷபம் – சுக்கிரன்
மிதுனம் – புதன்
கடகம் – சந்திரன்
சிம்மம் – சூரியன்
கன்னி – புதன்
துலாம் – சுக்கிரன்
விருச்சிகம் – செவ்வாய்
தனுசு – குரு
மகரம் – சனி
கும்பம் – சனி
மீனம் – குரு

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்