தமிழ் இலக்கணம் – ஆகுபெயர்
தமிழ் இலக்கணம் – ஆகுபெயர் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்
ஆகுபெயர்
1. ஒரு பெருளின் இயற் பெயர், அப்பொருளோடு சம்பந்தமுடைய பிறிதொரு பொருளுக்குத் தொன்று தொட்டு வழங்கி வரின், அது ஆகு பெயரெனப்படும்.
2. ஆகுபெயர், பதினாறு வகைப்படும். அவையாவன:-
பொருளாகு பெயர், இடவாகு பெயர், காலவாகு பெயர், சினையாகு பெயர், குணவாகு பெயர், தொழிலாகு பெயர், எண்ணலளவையாகு பெயர், எடுத்தளவையாகு பெயர், முகத்தளவையாகு பெயர், நீட்டலளவையாகு பெயர், சொல்லாகு பெயர், தனியாகு பெயர், கருவியாகு பெயர், காரியவாகு பெயர், கருத்தாவாகு பெயர், உவமையாகு பெயர் என்பனவாம்.
உதாரணம்.
(1). தாமரை போலுமுகம்: இங்கே தாமரையென்னு முதற்பொருளின் பெயர் அதன் சினையாகிய மலருக்காதலாற் பொருளாகு பெயர்.
(2). ஊரடங்கிற்று: இங்கே ஊரென்னுபமிடப்பெயர் அங்கிருக்கிற மனிதருக்காதலால் இடவாகு பெயர்.
(3). காரறுத்தது: இங்கே காரென்னும் மழைக்காலப் பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்காதலாற் காலவாகு பெயர்
(4). வெற்றிலை நட்டான்: இங்கே வெற்றிலை யென்னும்ஞ் சினைப்பெயர் அதன் மதலாகிய கொடிக்கதலாற் சினையாகு பெயர்.
(5). நீலஞ் சூடினான்: இங்கே நீலமென்னும் நிறக்குணப் பெயர் அதனையுடைய குவளை மலருக்காதலாற் குணவாகு பெயர்.
(6). வற்றலோடுண்டான்: இங்கே வற்றலென்னுந் தொழிற்பெயர் அதனைப் பொருந்திய உணவிற்காதலாற் தொழிலாகு பெயர்
(7). காலாலே நடந்தான்: இங்கே காலென்னும் எண்ணளவைப் பெயர் அவ்வளவைக் கொண்ட உறுப்பிற்காதலால் எண்ணலவையாகுபெயர்.
(8). இரண்டுவீசை தந்தான்: இங்கே வீசை யென்னும் எடுத்த லளவைப்பெயர் அவ்வளவைக் கொண்ட உறிப்பிற்காதலால் எண்ணலவையாகு பெயர்.
(9). நாழியுடைந்தது: இங்கே நாழியென்னும் முகத்தளவைப் பெயர் அவ்வளவைக் பருவிக்காதலால் முகத்தளவையாகு பெயர்.
(10). கீழைத்தடி விளைந்தது: இங்கே தடி யென்னும், நீட்டளவைப்பெயர் அதனால் அளக்கப்பட்ட விளைநிலத்திற் காதலால் நீட்டலளவையாகு பெயர்.
(11). இற்நூற்குரை செய்தான்: இங்கே உரையென்னுஞ் சொல்லின் பெயர் அதன் பொருளுக்காதலாற் சொலாகு பெயர்.
(12). விளக்கு முறிந்தது: இங்கே விளக்கென்னுந் தானியின் பெயர் அதற்கு தானமாகிய தண்டிற்காதலாற் நானியாகு பெயர்.
(13). திருவாசகமோதினான்: இங்கே வாசகமென்னுங் கருவிப் பெயர் அதன் காரியமாகிய ஒரு நூலிற்காதலாற் கருவியாகு பெயர்.
(14). அலங்காரங்கற்றான்: இங்கே அலங்காரமென்னுங் காரியத்தின் பெயர் அதனையுணர்த்துதற்குக் கருவியாகிய நூலிற்காதலாற் காரியவாகு பெயர்.
(15). திருவள்ளுவர் படித்தான்: இங்கே திருவள்ளுவர் என்னுங் கருத்தாவின் பெயர் அவராற் செய்யப்பட்ட நூலிற்காதலாற் கருத்தாவாகு பெயர்.
(16). பாவை வந்தாள்: இங்கே பாவை என்னும் உவமையின் பெயர் அதனை யுவமையாகக் கொண்ட பெண்ணுக்காதலால் உவமையாகு பெயர்.
கார் என்னும் கரு நிறத்தின் பெயர், அதனுடைய மேகத்தை யுணர்த்தும் போது ஆகு பெயர்: அம் மேகம் பெய்யும் பருவத்தை உணர்த்தும் போது இரு மடியாகு பெயர்: அப்பருவத்தில் விளையும் நெற்பயிரை உணர்த்தும் போது மும்மடியாகு பெயர்.
வெற்றிலை நட்டான், திருவாசகமோதினான், என்பவற்றுள், இலையென்பது வெறுமையென்னும் அடையினையும், வாசகமென்பது திருவென்னும் அடையினையும் அடுத்து, ஆகு பெயராய் வருவதால் அடையடுத்தவாகு பெயர்
நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
Read More:
தமிழ் இலக்கணம் – திணை மற்றும் பால்
Video: அம்மா பற்றிய வரிகள்