தமிழக கற்கால மனிதன் வாழ்விடம்

வாழ்விடம்

வரலாற்றில் ஆதி மனிதனை கற்கால மனிதன் என்றும், கரடு முரடான கற்களை ஆயுதங்களாக பயன்படுத்தினர். அவர்களின் உடலமைப்பும் செயலும் விலங்கின் தன்மையாகவே இருத்தது. காட்டில் வாழும் மிருகங்களை வேட்டையாடி உண்டு வாழ்ந்தான்.

இவர்கள், வெயில், குளிர், காற்று, மழை இவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள மலையின் அடிவார உட்புரைகள், குகைகள், பாறை புழைகளில் தங்கி தங்கள் இனத்தை பெருக்கி வந்தனர்.

உணவு பொருள்களை சேர்த்து வைக்க வேண்டி உள்ளதாலும், சமுதாய குடும்ப அமைப்பில் வாழ்ந்ததாலும் தங்களுக்கென்று இருப்பிடமாக மரக்கிளைகள், கொடிகள், தழைகள், பாறைகள், குன்றுகள் ஆகியவற்றில் தங்கினார்கள்.

தமிழக கற்கால மனிதன் சான்று

தமிழகத்தில் கற்கால மனிதன் வாழ்ந்ததற்கான சான்று செங்கற்பட்டு மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டத்திலும், புதுக்கோட்டை கோனாட்டில் உள்ள குன்றுகளிலும், பாறை பள்ள தடங்களிலும் இன்னும் பல்வேறு இடங்களிலும் கண்டெடுக்க பட்டுள்ளன.

நீலகிரி மலைத்தொடரில் வாழும் பழங்குடி தமிழர் மக்களான தொதுவர், இருளர், குறும்பர் ஆகியோர் இன்றும் கொம்புகளால் கட்டப்பட்ட கூண்டுகளில் வாழ்ந்து வருவதும், அதற்கு ‘கொம்பை’ (குடிசை) என்று குறிப்பதும் தமிழர் பழங்கால மக்கள் மரபினர் என்பதற்கு சான்று ஆகும்.

கொம்பை அமைப்பு

கூம்பாக வடிவில் கூரை அமைப்பினை கொண்ட அமைப்பு கொம்பை என்றும் குடிசை என்றும் குறிப்பிடப்பட்டது. அவை முறையே குடிசை, கொட்டகை, வட்டகை, இருப்பு குடும்பு மற்றும் தலைக்கட்டு என்றும் கூறுவர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நானில மக்களும் தங்கள் சூழலுக்கேற்ப வாழ்விடங்களை அமைத்துக்கொள்வர்.

மேலும் காண்க

Business Ideas in Tamil

Video: அம்மா பற்றிய வரிகள்

You may also like...