தங்க நகைகள் கனவு பலன்கள்

தங்க நகைகள் கனவு பலன்கள் – Gold Kanavu Palangal in Tamil – அனைவருக்கும் வணக்கம்! வாழ்க வளமுடன்! நாம் தங்கத்தையோ தங்க நகைகளையோ கனவில் கண்டால் பல பலன்கள் உள்ளது. அவைகள் என்னென்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம்.

தங்க நகைகள் கனவு பலன்கள்

ஒரு தங்கத்தேரை உங்கள் கனவில் கண்டால், நினைத்த காரியத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைவீர்கள் என்று பொருள்.

நகைகளை கனவில் கண்டால், அது சுபச் செலவை பற்றி தெரிவிக்கிறது. அது திருமணம் அல்லது குடுப்பத்துடனான சுற்றுலா போன்ற ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.

பொதுவாக கனவில் நகைகளை பார்த்தால், அது உங்கள் சந்தோச தருணத்தின் செலவினை குறிக்கும். நகையை அதிகமாக கனவில் பார்த்தாலோ அல்லது குறைவாக பார்த்தாலோ நல்லதே.

நீங்கள் நகையை பரிசளிப்பது போல் கனவு கண்டாலோ வருமானம் அதிகரிக்கும்.

உங்கள் துணைவர் அல்லது துணைவி நகையை பெறுவதை போல் கனவில் கண்டால், நீங்கள் விரைவில் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள்.

தங்க நகைகள் கனவு பலன்கள்

தங்க நகைகள் கனவு பலன்கள்

தங்கத்தை கண்டுபிடிப்பது போல் நீங்கள் கனவு கண்டால், சமூகத்தில் உங்களுடைய செல்வாக்கு உயரும் என்று பொருள்.

யாரோ ஒருவர் நகையை அணிந்திருப்பது போல் கனவு கண்டால், உங்கள் உங்களுக்கோ அல்லது உங்களுடைய நெருங்கிய உறவினருக்கோ பிரச்சனைகள் வரக்கூடும்.

நீங்கள் தங்க பானையை கனவில் கண்டால், உங்களுடைய கடின உழைப்பிற்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும் என்று அர்த்தம்.

நகையை நீங்கள் வாங்குவது போல் கனவு கண்டால், புதிய தொழில் தொடங்க போகிறீர்கள் என்று பொருள்.

அதுவே, திருமண பெண் நகையை அணிந்திருப்பது போல் கனவு கண்டால், உங்களுக்கு தெரிந்தவர் அல்லது உங்கள் குடும்பத்தினர் யாரேனும் ஒருவருக்கு திருமண நடக்க போகும் என்பதை குறிக்கும்.

ஒருவர் தங்கத்தை உங்களிடம் கொடுப்பது போல் கனவு கண்டால், உங்களுடைய செல்வாக்கு உயரும். புகழ் உண்டாகும் என்று பொருள்.

தங்க நாணயத்தை நீங்கள் கனவில் கண்டால், உங்களுக்கு செல்வம் சேரும். வருமானம் அதிகரிக்கும் என்றது பொருள்.

தங்க இலைகளை நீங்கள் கனவு கண்டால் உங்கள் எதிர்காலம் நல்ல பிரகாசமாக இருக்கும் என்று பொருள்.

நகையை அடமானம் வைப்பது போல் கனவு கண்டால் நீங்கள் ஏதாவது பொருளை விற்க வேண்டியது வரும். அல்லது ஏதாவது பொருள் இழப்பு ஏற்படலாம்.

நகைகள் திருடு போவது போல கனவு கண்டால், திடீர் பணவரவு உண்டாகும் என்று பொருள்.

Read More

You may also like...