Skip to content
Home » ஜோதிடம் » ஜாதக கட்டம் விளக்கம்

ஜாதக கட்டம் விளக்கம்

இந்த பதிவில் ஜாதக கட்டம் விளக்கம் மற்றும் ஜாதக கட்டத்தில் உள்ள சில முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம்.

ஜாதக கட்டம் விளக்கம்
ஜாதக கட்டம் விளக்கம்

லக்கினம் திரிகோணம் கேந்திரம் என்றால் என்ன?

ஜாதக கட்டம் விளக்கம்(Jadhagam Kattam in Tamil ) – ஒரு ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். ஜோதிடர்கள் ஒவ்வொரு கட்டத்தையும் ஒவ்வொரு வீடு என்பார்கள். லக்கினம் ஜாதக கட்டத்தில் “ல” என்று குறிப்பிட்டுருப்பார். அது எங்கு உள்ளதோ அதுவே முதலாம் வீடு மேஷ ராசி அதிலிருந்தே 2,3,…12ஆம் வீடு வரை மற்ற கிரகங்களில் அமைப்புகளை கணக்கிடனும்.

திரிகோணம்

திரிகோணம் என்பது லக்கினத்திலிருந்து 1, 5, 9 ஆகிய வீடுகள் ஆகும்.

கேந்திரம்

கேந்திரம் என்பது லக்கினத்திலிருந்து 1 , 4 , 7, 10 ஆகிய வீடுகள் ஆகும்.

Read more ;- Star Matching table for marriage in Tamil | Jathagam Porutham in Tamil

மறைவு ஸ்தானம் – Tamil Jothidam

இதில் மறைவு ஸ்தானம் என்பது 3, 6, 8, 12 ஆகும். பொதுவாக இந்த வீட்டில் இருக்கும் கிரகங்கள் பலம் குறைந்து காணப்படும். இருப்பினும் இதில் சில கிரகங்களுக்கு விதி விளக்கு உண்டு.

எடுத்துக்காட்டாக சுக்ரன் 12ஆம் வீட்டில் இருந்தால் மறைவாகாது மாறாக நல்ல பலன்களையே தருவார் அதுபோல சூரியன் 3, 6 ம் வீட்டில் அமைவதாகும். இதனை பற்றி பின்வரும் பதிவுகளில் விரிவாக பார்ப்போம்.

இதில் முதலாம் வீடு திருகோண அமைப்பும் பெறுகிறது கேந்திர அமைப்பும் பெறுகிறது. ஆதலால் முதல் வீட்டில் எந்த கிரகம் நின்றாலும் அது மிகுந்த பலத்துடன் இருக்கும். கேந்திர திரிகோண அமைப்பாகும்.

2 மற்றும் 11 ஆம் வீடுகளில் இருந்தால் நல்ல பலனையே தரும். இதில் 11ஆம் வீட்டில் சுபர் பாவ கிரகங்கள் எவை இருந்தாலும் நன்மையை மட்டுமே செய்யும்.

3 ஆம் வீடுகளில் கிரகங்கள் அமைவது சுமாரான பலன்கள் தரும்.

6 ,8 ,12 ஆம் வீடுகளில் கிரகங்கள் அமர்வது அவ்வளவு சிறப்பித்து சொல்ல முடியாது. சுப கிரகங்கள் இந்த வீடுகளில் இருந்தாலும் அதனால் ஜாதகருக்கு நல்ல பலன்களை வழங்க முடியாது. இருப்பினும் மேற்கூறியவாறு இதில் விதி விளக்கு உண்டு சுக்ரனுக்கு மட்டும் 12ஆம் வீடு மறைவு வீடாகாது. அதுபோல சூரியன் 3 மற்றும் 6 ஆம் வீடுகளில் அமர்வது நல்லதே. மேலும் 6, 8, 12 ஆம் இடத்தில் குரு பார்வை இருப்பின் பலன்கள் மாறுபடும்.

ஒரு கிரகம் , நீசம் ஆகி இருந்தால் அல்லது மறைவு வீடுகளில் இருந்தால் பகை கிரங்களுடன் சேர்ந்து அமர்ந்திருந்தாள் அந்த கிரகம் சரியாக இல்லை என்று பொருள்.

ஒவ்வொரு லக்கினத்தையும் நெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள் என்று வரையறுத்து வைத்துள்ளனர்.

திருமண பொருத்தம் பார்க்கும் முறை

நெருப்பு ராசிகள்
மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை நெருப்பு ராசிகள்

நிலம் ராசிகள்
ரிஷபம், கன்னி, மகரம் ஆகியவை நிலம் ராசிகள்

காற்று ராசிகள்
மிதுனம், துலாம், கும்பம் ஆகியவை காற்று ராசிகள்

நீர் ராசிகள்
கடகம் விருச்சிகம், மீனம் ஆகியவை நீர் ராசிகள்.

லக்கினங்களை சரம், ஸ்திரம், உபயம் என்று வகைப் படுத்தலாம்.

சர ராசிகள்

மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியன சர ராசிகள்.

ஸ்திர ராசிகள்

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியன ஸ்திர ராசிகள்.

உபய ராசிகள்

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியன உபய ராசிகள்

நன்றி!! வாழ்க வையகம் !! வாழ்க வளமுடன் !!

Read More

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்