ஜாதக கட்டத்தில் லக்னம் அல்லது ராசிக்கு(சந்திரன் நின்ற ராசி) செவ்வாய் ஆனது 2,4,7,8,12ஆம் வீடுகளில் இருந்தால் செவ்வாய் தோஷம் அமைப்பு உள்ள ஜாதகம் என்று எடுத்துக்கொள்ளலாம்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | ஜோதிட தகவல்கள் | Learn Basic Astrology | நாலடியார் பாடல்கள் மற்றும் விளக்கம் | கனவு பலன்கள்
செவ்வாய் கிரகம் ஒரு இயற்கை பாவ கிரகம் அதீத கோபம், படபடப்பு, அவசர முடிவு, முடிவு எடுத்தபின்பு தவறான முடிவு செய்தோம் என்று வருந்துவது, தைரியத்தை குறிப்பது, துணிகரம், சூது, வஞ்சகம் தீர்ப்பது, விபத்து, வெட்டு காயம் போன்ற அனைத்து விஷயங்களுக்கும் காரணமாகிறது.
திருமணம் என்று வரும்போது எல்லா பொருத்தத்தையும் பார்த்து முக்கியமாக செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். திருமண பொருத்தத்தில் செவ்வாய் தோஷத்திற்கு முக்கிய பங்கு உண்டு. ஏன் அதனை பார்க்கிறார்கள் என்று பார்ப்போம்.
பொதுவாக மேலே குறிப்பிட்ட இடங்களில் செவ்வாய் இருந்தால் அவர்களுக்கு தம்பதிய சுகத்தில் அதிக எண்ணம் இருக்கும். சில நேரங்களில் களத்திரத்தினால் ஈடு கொடுக்க முடியாமல் போகலாம். இதனால் பிரச்சனைகள் ஏற்படும். மேலும் அவர்களுடைய குணாதிசயம் மிகவும் விரைவானதாக இருக்கும். வேகமாக சாப்பிடுவது, கட்டுக்கடங்காமல் பேசுவது போன்று, ஆதலால் அவர்களுக்கு இணையான ஜாதகத்தை பொருத்துவதே சிறப்பை தரும்.
செவ்வாய் தோஷம் அமைப்பு
இருப்பினும் செவ்வாய் தோஷம் எவ்வாறு செயல்படுகிறது என்று பார்ப்போம். 2ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால், கார சுவை அதிகம் விரும்புவார்கள், குடும்பத்திற்கு கட்டுப்படாதவர்களாக இருப்பார்கள், பேச்சில் ஒரு அதட்டலும் பணிவின்மையும் இருக்கும்.
4ஆம் வீட்டில் செவ்வாய் இருப்பவர்கள் பிடிவாத குணத்துடன் இருப்பார்கள். யாருடைய பேச்சையும் பின்பற்றி நடக்க மாட்டார்கள்.
7ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் களத்திரம் பிடிவாத குணத்துடனும், இச்சை கொள்வதில் அதிக நாட்டம் இருக்கும்.
8ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் களத்திரத்தின் குடும்பத்தார் யாரேனும் முரட்டு பிடிவாத குணத்துடன் இருப்பார்கள். மேலும் களத்திரத்திற்கு இச்சை கொள்ளும் எண்ணம் அதிகமாக இருக்கும்.
12ஆம் வீட்டில் இருந்தால் அவசர முடிவு எடுப்பவர்களாக இருப்பர்கள். மேலும் தம்பதிய சுகத்தில் அதீத நாட்டம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
ஆதலால் இதுபோன்ற செவ்வாய் தோஷம் அமைப்பு உள்ள ஜாதகத்தை அதே போன்று தோஷம் உள்ள ஜாதகத்தை இணைத்து திருமணம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படாமல் கடைசி வரைக்கும் நல்லபடியாக வாழ்வார்கள்.
சேர்ந்து இருக்கும் கிரகங்கள், பார்க்கும் கிரகங்கள் பொறுத்து பலன் மாறுபடும்.
Video: அடிப்படை ஜோதிடம் கற்க
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்