செவ்வாய் கிரக காரகத்துவம்

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

இந்த பதிவில் செவ்வாய் கிரக காரகத்துவம் என்ன என்று தெரிந்துகொள்வோம். மேலும் அதனைக்கொண்டு நம் ஜாதத்தில் செவ்வாய் வலுவாக நல்ல நிலையில் இருப்பின் எவையெல்லாம் நமக்கு உகந்தது எதற்கெல்லாம் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என முடிவெடுக்கலாம். அதேபோல செவ்வாய் ஜாதகத்தில் வலுவிழந்து இருந்தால் எதற்கெல்லாம் நாம் வீண் முயற்சி செய்யாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கலாம்.

செவ்வாய் கிரக காரகத்துவம்
செவ்வாய் கிரக காரகத்துவம்

செவ்வாய் காரகத்துவம்

இளைய சகோதரன், பெண்களாக இருந்தால் கணவன், கோபம், ரத்தம், நிலம், காவல், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும், கத்தி, ஆயுதம், கரடு முரடான நிலம், பாறைகள், மலைகள், முற்செடிகள், புதர்கள், கலகக்காரர்கள்.

தைரியம், வீரியம், சண்டை சச்சரவுகள், போர், ஆயுதங்கள், கூர்மையான ஆயுதம், துப்பாக்கி, வெடி விபத்து, சிகப்பு நிறம், முகப்பரு, தசைகள், காது, தலை, எலும்பு மஜ்ஜை, ராணுவம், காவல்துறை, போர்ப்படை தலைவர், பல் மருத்துவர், வேதியியல் வல்லுநர், அறுவை சிகிச்சை மருத்துவர், திருடன், கொலைகாரன்.

முருகன், கட்டுமஸ்தான உடல், சீருடை பணியாளர்கள், பவளம், கட்டிடம், வெடிமருந்து தொழிற்சாலை, பட்டாசு, புலி, வேட்டை நாய்கள், கசப்பு கடை, முருகன், உடற்பயிற்சி கூடம், கராத்தே, குங்பூ, யோகா போன்ற கலைகள், குத்துசண்டை ஆகியன.

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்