Skip to content
Home » ஜோதிடம் » அஸ்தமனம் என்றால் என்ன?

அஸ்தமனம் என்றால் என்ன?

ஜோதிடத்தில் அஸ்தங்கம் அல்லது சூரிய அஸ்தமனம் என்றால் என்ன? அஸ்தங்கம் பொருள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். சூரியன் தான் அஸ்தங்கம் என்கிற நிலையை உடைக்கும். ராகு, கேது, சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் அஸ்தமனம் நிலையை அடையும்.

சூரிய அஸ்தமனம்
சூரிய அஸ்தமனம்

சந்திரன், ராகு, கேது தவிர மற்ற கிரகங்களான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி போன்றவை சூரியனுக்கு ஒரு குறிப்பிட்ட பாகைக்குள் கூடும்போது தன் சுய பலத்தை (ஒளியை) இழந்து அஸ்தமனம் அல்லது அஸ்தங்கம் என்கிற நிலையை அடைகின்றன.

இதில் விதிவிலக்காக சூரியன், புதன், இருவரும் 4 பாகைக்கு மேல் கூடும்போது, ‘புத ஆதித்ய யோகம்’ ஏற்படுகிறது. புத ஆதித்ய யோகம் உள்ளவர்கள் எந்த துறையிலும் நிபுணத்துவம் உண்டாகும். எந்த தொழிலும் புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் மேற்கொள்வார்கள். பல வித்தைகளை கற்றது மட்டுமில்லாமல் அதில் நிபுணத்துவ தேர்ச்சி பெறுவார்கள்.

ஆனால் இதுவே குரு மற்றும் சுக்கிரன் குறிப்பிட்ட பாகைக்குள் சூரியனுடன் சேரும்போது அதனை குரு-சுக்ர மூடம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக கோச்சாரத்தில் குரு-சுக்ர மூடம் வரும்போது சுப காரியங்களை நடத்தக்கூடாது, மற்றும் நல்ல விஷயங்களை விலக்கிக்கொள்ள வேண்டும்.

அஸ்தமனம் ஆன கிரகங்கள் தங்கள் பலத்தை இழந்து தன்னுடைய தசா புத்திகளில் தரவேண்டிய பலன்களை சூரியன் தன் தசா புத்தி காலங்களில் தருவார்.

சூரிய அஸ்தங்கம் ஆகும் கிரகங்களின் பாகை அளவு

செவ்வாய் – 17 பாகை
குரு – 11 பாகை
புதன் – 14 பாகை
சனி – 15 பாகை
சுக்கிரன் – 10 பாகை

வக்கிர புதன் – 12 பாகை
வக்கிர சுக்கிரன் – 8 பாகை

அஸ்தங்கம் விதிவிலக்கு

அஸ்தமனம் அல்லது அஸ்தங்கம் ஆன கிரகங்களுக்கு விதிவிலக்கு எனில் ஒன்றே ஒன்று தான் அது அஸ்தங்கம் ஆனா கிரகங்கள் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்க வேண்டும்.

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்