சூரியன் கிரக காரகத்துவம்

சூரியன் கிரக காரகத்துவம் – இந்த பதிவில் சூரியனின் காரகத்துவம் என்ன என்று தெரிந்துகொள்வோம். மேலும் அதனைக்கொண்டு நம் ஜாதத்தில் சூரியன் வலுவாக நல்ல நிலையில் இருப்பின் எவையெல்லாம் நமக்கு உகந்தது எதற்கெல்லாம் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என முடிவெடுக்கலாம். அதேபோல வலுவிழந்து இருந்தால் எதற்கெல்லாம் நாம் வீண் முயற்சி செய்யாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கலாம்.

சூரியன் கிரக காரகத்துவம்

சூரியன் கிரக காரகத்துவம்

சூரியன் கிரக காரகத்துவம்

தந்தை, சிவபெருமான், எல்லாவற்றிலும் முதன்மையானது, பருவ காலத்தை நிர்ணயிக்க கூடியவர், கிரகங்களின் தலைவன், ஆத்ம காரகன், ஆண் கிரகம், திருமணம் பின் மாமனார், குடும்பத்தில் மூத்த மகன், மூத்த மகள், தந்தை வழி உறவினர்கள், ஆளுமை, தலைமைப்பண்பு, நாட்டுத் தலைவர்கள்.

பணிபுரியும் இடத்தில் மேலதிகாரி, கௌரவம், ஊரின் பெரிய மனிதர்கள், நாட்டின் நிதியை பெருக்க கூடியவர், மயில், பகல் பொழுது

நிரந்தர வருமானம், சந்தனம், அரசு கட்டிடம், அரசு சார்ந்த நிறுவனங்கள், வீட்டு வாடகை, காடுகள், மலை மேடான பகுதி, உயர்ந்த கட்டிடங்கள், கோட்டைகள், லாட்ஜ்கள், தொகுப்பு வீடுகள், நெருப்பு, தேர், வணிக வளாகங்கள், தாமிரம், கம்பளி ஆடைகள்

கௌரவம், நம்பிக்கை, நாணயம், நிர்வாகம், சமூக மதிப்பு, நிர்வாக திறமை, கற்பனைகளும் கனவுகளும், கோபம், எடுத்த முடிவில் உறுதியாக நிற்பவர், பிரச்சினைகளிலிருந்து விடுபட வைக்கும் சக்தி படைத்தவர்.

தந்தையின் தொழில், குல தொழில், அரசியல், அரசியல்வாதி, அரசாங்க உத்தியோகம், மேனேஜர், மேல் அதிகாரி, ஆபரண வியாபாரம், பொன் முலாம் பூசுதல், தாலுக்கா, முனிசிபாலிட்டி, நீதிபதி, எம்எல்ஏ, எம்பி, டாக்டர் தொழில், நெருப்பு சம்பந்தமான அனைத்து தொழில்களும், சூரிய மின்சக்தி, ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ். ஆட்சிபணி. சூரிய வழிபாடு மற்றும் சிவ வழிபாடு

தலை, இருதயம், வலது கண், முதுகு தண்டுவடம், காலின் பெருவிரல், வயிறு

வலது கண், கண்ணின் கிட்டப்பார்வை தூரப்பார்வை, உஷ்ண சம்பந்தமான நோய்கள், சித்தபிரமை, எலும்பு சம்பந்தமான நோய்கள், இருதயம் தொடர்பான அறுவை சிகிச்சைகள், கடும் கோபம், மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வயிற்றில் பூச்சிகள், வைட்டமின் டி சத்து குறைபாடு, வெய்யில் வெப்பத்தாக்கு நோய். தொழுநோய், ஒற்றை தலைவலி, பித்த நோய்கள்.

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

You may also like...