சுக்கிரன் கிரக காரகத்துவம்

இந்த பதிவில் சுக்கிரன் கிரக காரகத்துவம் என்ன என்று தெரிந்துகொள்வோம். மேலும் அதனைக்கொண்டு நம் ஜாதத்தில் சுக்கிரன் வலுவாக நல்ல நிலையில் இருப்பின் எவையெல்லாம் நமக்கு உகந்தது எதற்கெல்லாம் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என முடிவெடுக்கலாம். அதேபோல சுக்கிரன் ஜாதகத்தில் வலுவிழந்து இருந்தால் எதற்கெல்லாம் நாம் வீண் முயற்சி செய்யாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கலாம்.

சுக்கிரன் கிரக காரகத்துவம்

சுக்கிரன் கிரக காரகத்துவம்

சுக்கிரன் காரகத்துவம்

மனைவி, அழகு, கவர்ச்சி, நளினம், மென்மை, காதல், திருமண சுகங்கள், கலை நிகழ்ச்சி, அத்தை, கேளிக்கை விடுதி, இனிப்பு சுவை, புத்துணர்ச்சி, ஒற்றைக்கண்ணன், பியூட்டி பார்லர்.

அழகு சாதனங்கள் மற்றும் அதன் மூலம் வருமானம், உல்லாச விடுதி, பாலின இன்பங்கள், சுரோணிதம், ஹார்மோன் மாற்றம், இனக்கவர்ச்சி, மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை.

ஆடம்பர பொருட்கள், இயல், இசை, நாடக கலைஞர்கள், சொகுசு மாளிகைகள், வெள்ளி, உயர்ரக மதுபானங்கள், திருட்டு உறவு, மூத்த சகோதரி, அத்தை.

கன்னம், பிறப்புறுப்பு, சிறுநீரகம், கண்களில் ஊனம், கப்பல் கட்டும் தளம், பட்டு மற்றும் செயற்கை பட்டுக்கூடங்கள், போனஸ், ஜவுளி, போட்டோ ஸ்டுடியோ.

சினிமா, கலைத்துறை, பழங்கள், பளபளப்பான மேனி, தேவ பெண்கள், மகாலட்சுமி, மீன், கண்ணாடி, சீப்பு, பணம், துணி வியாபாரம், பைனான்ஸ் ஆகியன.

தெரிந்துகொள்க

You may also like...