சிறுநீரக நோயின் அறிகுறிகள்
சிறுநீரக நோயின் அறிகுறிகள்
வீக்கங்கள்
முகம், பாதங்கள் மற்றும் அடி வயிறு வீக்கம் அடையும். இந்த வீக்கங்கள் காலை நேரத்தில் மிக தெளிவாக தெரியும்.
பசியின்மை
பசியின்மை, வாய் ருசியில் மாற்றம், உணவில் நாட்டமின்மை போன்றவைகளும் அறிகுறிகளாகும். இவை அதிகமாகும் பொழுது இரத்தத்தில் நச்சுத்தன்மை அதிகரித்து தொடர் வாந்தி மற்றும் விக்கல் எடுக்கும் நிலைமை உருவாகும்.
இரத்த அழுத்தம் & இரத்த சோகை
பொதுவாக சிறுநீரகங்கள் பதிப்படைந்தவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வரும்.
செய்யும் வேலையில் கவனமின்மையில், சோம்பல் மிகுந்து இருத்தல், உடல் வலிகள், உடல் நலிவு இவற்றுடன் இரத்த சோகையும் ஏற்படும். இந்த அறிகுறிகள் சிறுநீரக பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு ஏற்படும்.
இரத்த சோகை குணப்படுத்த முடியவில்லை என்றால். சிறுநீரக நோய் தாக்கியது என்று அர்த்தம்.
பொதுவான கோளாறுகள்
முதுகு வலி, உடல் அசதி, உடல் வலி மற்றும் அரிப்பு போன்றவை சிறுநீரக நோயின் பாதிப்புகள்.
குழந்தைகளுக்கு வளர்ச்சி குன்றுதல், கால் எலும்புகள் வளைந்து கொடுத்தால் போன்றவை அறிகுறிகளாகும்.
குறைவாக விடும் சிறுநீரின் கன அளவு.
சிறுநீர் கழிக்கும்பொழுது எரிச்சல் இருத்தல், இரத்தம் சேர்ந்து வருதல் அல்லது சீல் சேர்ந்து வருதல் இந்நோயின் அறிகுறியாகும்.
சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்பட்டு நாளடைவில் சிறுநீர் கழிப்பதே சிரமமாகி விடும்.
தகுந்த மருத்துவரை ஆலோசித்து மருத்துவம் செய்து இன்புற்று வாழ்க.
நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
மேலும் காண்க
Video: அம்மா பற்றிய வரிகள்