Skip to content
Home » ஜோதிடம் » சாந்தி முகூர்த்தம் செய்ய நல்ல நாள் பார்ப்பது எப்படி?

சாந்தி முகூர்த்தம் செய்ய நல்ல நாள் பார்ப்பது எப்படி?

இந்த பதிவில் சாந்தி முகூர்த்தம் செய்வது எப்படி? சாந்தி முஹூர்த்தம் செய்ய நல்ல நாள் பார்ப்பது எப்படி? மற்றும் முகூர்த்தம் செய்ய நல்ல நேரம் எது? என்று அறிந்துகொள்வோம்.

சாந்தி முகூர்த்தம் செய்ய நல்ல நாள்
சாந்தி முகூர்த்தம் செய்ய நல்ல நாள்

திருமண நிகழ்வில் தாலி கட்டியபின் சம்பந்தக்கலப்பு செய்வது வழக்கம் அதுவும் முடிந்து அடுத்த முக்கியமான நிகழ்வு சாந்தி முஹூர்த்தம் ஆகும். ஆண் பெண் இருவருக்கும் முதல் இரவு கண்டிப்பாக சுப நேரத்தில் அமைக்க அவர்களுக்கிடையே அன்னோன்யம், வசியம், சந்ததி விருத்தி மற்றும் சகல சுகங்களையும் பெறுவது சிறப்பாக அமையும்.

தெரிந்துகொள்க: திருமண பொருத்தம் | நிச்சயதார்த்தம் நிகழ்வு | பெண் பார்க்கும் நிகழ்ச்சி

சாந்தி முகூர்த்தம் நாள் குறிக்க கவனிக்க வேண்டியவை

ஆண் பெண் இருவருடைய ஜென்ம நட்சத்திரத்தையும் குறிக்க கூடாது.

ஆண் பெண் இருவருக்கும் அன்று சந்திராஷ்டமம் இருக்க கூடாது

கௌரி நல்ல நேரம் பார்க்க வேண்டும்.

ஹோரைகளில் குரு, சுக்கிரன், சந்திரன் ஹோரைகள் நல்லது.

துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி மற்றும் திரயோதசி ஆகிய திதிகளில் குறிக்க வேண்டும்.

நட்சத்திரங்களில் அஸ்வினி, ரோகினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திர, சுவாதி, அனுஷம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி உத்தமம் ஆகும். மற்ற நட்சத்திரங்களை தவிர்ப்பது நல்லது.

அப்போதைய நேரத்தில் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய சுப லக்னங்களாக இருப்பது மிகவும் உத்தமம்.

மேற்கூறிய சுப லக்னங்களுக்கு 1,7ஆம், 8ஆம் இடத்தில் எந்த கிரகமும் இல்லாமல் சுத்தமானதாக இருக்க வேண்டும்.

இல்லத்தின் தென்மேற்கு பகுதியில் சாந்தி முகூர்த்தம் நடைபெற தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் ஏற்பட்டு நல்ல புத்திரர்கள் பிறப்பார்கள்.

நன்றி! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

தெரிந்துகொள்க:

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்