சனி கிரக காரகத்துவம்

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

இந்த பதிவில் சனி கிரக காரகத்துவம் என்ன என்று தெரிந்துகொள்வோம். மேலும் அதனைக்கொண்டு நம் ஜாதத்தில் சனி வலுவாக நல்ல நிலையில் இருப்பின் எவையெல்லாம் நமக்கு உகந்தது எதற்கெல்லாம் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என முடிவெடுக்கலாம். அதேபோல சனி ஜாதகத்தில் வலுவிழந்து இருந்தால் எதற்கெல்லாம் நாம் வீண் முயற்சி செய்யாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கலாம்.

சனி கிரக காரகத்துவம்
சனி கிரக காரகத்துவம்

சனி காரகத்துவம்

தொழில் காரகன், கர்மா காரகன், ஆயுள் காரகன், சிற்றப்பா, கால தாமதம், சோம்பேறித்தனம், கடின உழைப்பு, துப்புரவு தொழிலாளர்கள், உடல் ஊனமுற்றோர், முடக்கு வாதம், நீண்ட கால நோய், யானைக்கால் நோய்.

கால்களில் பாதிப்பு, பயந்த சுபாவம், மெலிந்த உடல், பழைய பொருட்கள், இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள், எண்ணெய் பொருட்கள், அனைத்து வகையான எண்ணெய், பெட்ரோல், டீசல்.

பயன்படாத பழைய பொருட்கள், மற்றவர்களின் கட்டளைப்படி நடப்பது, அசுத்தம் நிறைந்த பகுதியில் வசிப்பது, மரண பயம், தாழ்வு மனப்பான்மை, படித்த படிப்பிற்கு தொடர்பில்லாத வேலை, தாழ்ந்த இனத்தாருடன் பழக்க வழக்கம்.

கலப்படம், இரவு வேலைக்காரன், காவல் தெய்வங்கள், உற்சாகமின்மை, கஷ்டங்கள், அவமானம், நீல நிறம், மேற்கு திசை, காவலாளி, சுடுகாடு, எப்போதும் சோகமாக காணப்படுவார். வயதிற்கு அதிகமான முதிர்ச்சி.

இருள் அடைந்த பள்ளத்தாக்கு, குன்றுகள், பள்ளத்தாக்கு, பதுங்கு குழி, நிலக்கரி, கழிவு நீர் தங்கும் இடம், தோள் பதனிடும் தொழிற்சாலைகள், தார் சாலைகள், அவசர கால தடை, தொழிலாளர் பிரச்சனை, மறியல் செய்வது.

போக்குவரத்து கஷ்டங்கள், மண்ணெண்ணெய், எண்ணெய் பொருட்கள், கருமையான பொருட்கள், ஈயம், ரோமம், கம்பளி, உலோக தாதுக்களை விற்பனை செய்பவர்.

விடாமுயற்சி, மூட்டு எலும்பு, முழங்கால், மண்ணீரல், எலும்புகள், கம்பு, சோளம், கேப்பை, கேழ்வரகு, பேரிச்சம்பழம், கருப்புதிராட்சை, கருப்பட்டி, நுங்கு, நல்லெண்ணெய், பதநீர், கூலி வேலை செய்பவர்கள்.

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்