சந்திரன் கிரக காரகத்துவம்
இந்த பதிவில் சந்திரனின் காரகத்துவம் என்ன என்று தெரிந்துகொள்வோம். மேலும் அதனைக்கொண்டு நம் ஜாதத்தில் சந்திரன் வலுவாக நல்ல நிலையில் இருப்பின் எவையெல்லாம் நமக்கு உகந்தது எதற்கெல்லாம் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என முடிவெடுக்கலாம். அதேபோல வலுவிழந்து இருந்தால் எதற்கெல்லாம் நாம் வீண் முயற்சி செய்யாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கலாம்.

சந்திரன் கிரக காரகத்துவம்
சந்திரன் கிரக காரகத்துவம்
தாய், மனைவி, உடல், மனம், திருமணம் பின்பு மாமியார், கற்பனை திறன், கவிதை, கலைஞர்கள். நிலவு, வீட்டின் இடது பக்க ஜன்னல், பூக்கள், தினமும் அழிய கூடிய பொருட்கள், நீர் சூழ்ந்த இடங்கள், ஆறு, ஏரி, கடல், குளம், உடல் பலவீனம், தேய்மானம், ஞாபக மறதி.
உணவகம்(ஹோட்டல்), பால் மற்றும் பால் போன்ற வெண்மையான பொருட்கள், மளிகை சாமான்கள், டிபார்ட்மென்ட் ஸ்டோர். அலைந்து கொண்டு இருப்பது, அலைச்சல், மனநோய்.
படிகாரம், சுண்ணாம்பு, நீராவி இயந்திரம், சளி, இரும்பல், சிறுநீரக மற்றும் கர்ப்பப்பை பிரச்சனை
கதை, கவிதை, கற்பனை, எழுத்து, அமைதி, கலைநயம், பொறுமை, ஆலோசனை வழங்குதல், சைக்காலஜி, பிலோஸோபி(Philosophy), சோம்பல், சாந்தம், காதல், கள்ளத்தனம்.
இடது கண், கற்பு, மனம், வேதம், மருத்துவம், ஒளி, மேகங்கள், மழை, வெண்மை, முத்து, புஷ்ப மலர்கள், முருங்கை, பார்வதி தேவி.
வாசனை திரவியம், காம இச்சை, காக்கா வலிப்பு, டைப்பாய்டு, வைட்டமின் பி குறைபாடு, மூச்சு கோளாறு, கடல் சார்ந்த தொழில்கள், வாழை, நீச்சல்குளம், சாராயம் காய்ச்சுதல்
தெரிந்துகொள்க
- சூரியன் கிரக காரகத்துவம்
- சந்திரன் கிரகம் பற்றி தெரிந்து கொள்க
- அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?
- Tamil Zodiac Signs Dates
- 27 நட்சத்திர தேவதை அதிதேவதை
- நவகிரக ஸ்தலங்கள்
- Read All Astrology Articles in English