கேந்திராதிபத்திய தோஷம் என்றால் என்ன?
இந்த பதிவில் கேந்திராதிபத்திய தோஷம் என்றால் என்ன? எந்த கிரகங்களுக்கு கேந்திராதிபத்ய தோஷம் உண்டு. குரு, புதன், சுக்கிரன் கேந்திராதிபத்திய தோஷம் பற்றியும் தெரிந்துகொள்வோம்.
காண்க: கேந்திரம் ஸ்தானம் என்றால் என்ன?
ஒரு ஜாதகத்தில் 1,4,7,10 ஆம் பாவகம் கேந்திரங்கள் ஆகும். அந்த கேந்திர ராசிகளின் அதிபதிகள் கேந்திர அதிபதிகள் ஆவார். உதாரணமாக மேஷ லக்கினம் என வைத்துக்கொள்வோம்.
மேஷத்தின் 4ஆம் வீடு கடகம் கேந்திரம் வீடு ஆகும். அதனுடைய அதிபதி சந்திரன் கேந்திரதிபதி ஆவார். அதேபோல மேஷத்தில் 7ஆம் வீடு துலாம் அதன் அதிபதி சுக்கிரன், 10ஆம் வீடு மகரம் அதன் அதிபதி சனி கேந்திரதிபதிகள் ஆவார்கள்.
1,4,7,10ஆம் வீடுகளின் அதிபதிகள் கேந்திராதிபதிகள் ஆவர், அவர்கள் 1,4,7,10ஆம் வீடுகளில் அமர்ந்தால் பெற்றாலோ கேந்திராதிபத்ய தோஷம் ஆகும்.
சுருக்கமாக கூறவேண்டுமென்றால் 1,4,7,10ஆம் அதிபதிகள் 1,4,7,10ல் அமர்ந்தால் கேந்திராதிபத்திய தோஷம் ஆகும்.
புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு மட்டுமே கேந்திராதிபத்திய தோஷம் உண்டு. மற்ற கிரகங்களுக்கு கேந்திராதிபத்திய தோஷம் கிடையாது. அதுவே புதன், குரு, சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்தாள் தோஷ பலனை தருவதில்லை.
எந்த கிரகம் கேந்திராதிபத்ய தோஷம் ஆகிறதோ, அந்த கிரகம் தனது காரகப்பலனைக் குறைத்துக் வழங்கும்.
புதன் கேந்திராதிபத்ய தோஷம்
புதன் கேந்திராதிபத்ய தோஷம் பெற்றால் அதன் காரகமான கல்வி, வித்தைகள் கற்றுக்கொள்வது, கணிதம், வியாபாரம், தாய்மாமன் உறவு போன்ற காரகப்பலனை முழுமையாக தராது.
குரு கேந்திராதிபத்ய தோஷம்
குரு கேந்திராதிபத்ய தோஷம் அடைந்தால் தனம், செல்வம், புத்திரபாக்கியம், தங்கம் சேமிப்பு, நல்ல ஆசிரியர்கள் அமைவது போன்றவற்றில் பாதிப்பை தரும்.
சுக்கிரன் கேந்திராதிபத்ய தோஷம்
சுக்கிரன் கேந்திராதிபத்ய தோஷம் ஆனால், அழகிய வாழ்க்கைத்துணை, வியாபாரம், உலக சுகம் கெடலாம், ஆடம்பர பொருள் சேர்க்கை, பொன்பொருள் சேர்க்கை இவ்வாறான காரகப்பலனை பலன்களையும் பாதிப்படைய செய்யும்.
கேந்திராதிபத்ய தோஷம் தரும் கிரகம் மற்றொரு பாவகிரகத்தோடு இணைந்தாலே, பார்வை பெற்றாலோ தோஷம் வேலை செய்யாது.
தெரிந்துகொள்க
கேந்திரம் ஸ்தானம் என்றால் என்ன?