கேந்திரம் ஸ்தானம் என்றால் என்ன?

இந்த பதிவில் ஜாதகத்தில் கேந்திரம் ஸ்தானம் என்றால் என்ன? கேந்திரம் பொருள் என்ன என்று தெரிந்து கொள்வோம் மேலும் கேந்திரம் அதிபதிகள் யார் என்றும் தெரிந்து கொள்வோம்.

கேந்திரம் ஸ்தானம் என்றால் என்ன
கேந்திரம் ஸ்தானம் என்றால் என்ன

லக்கினத்தை வைத்து கேந்திரம் கணக்கிடுவது லக்கின கேந்திரம் அதுபோல சந்திரனுக்கு(ராசிக்கு) கேந்திர ஸ்தானம் பார்ப்பது சந்திர கேந்திரம் ஆகும். சந்திரன் மற்றும் லக்கினம் இரண்டிற்கும் கேந்திரம் பார்த்து பலன் சொல்லலாம்.

கேந்திரம் பொருள்

ஜாதகத்தில் திரிகோணத்திற்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்தது கேந்திரம் ஆகும். ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலிருந்து 1,4,7,10ஆம் வீடுகள் கேந்திர வீடுகள் என்று அழைக்கப்படும். லக்கின புள்ளியானது(1ஆம் இடம்) திரிகோணம் மற்றும் கேந்திரம் இரண்டிலும் பங்கு வகிக்கிறது. ஒரு ஜாதகத்தில் லக்கினம் வலுவாக இருந்தால் மிகவும் நல்லது.

கர்ம வினைப்படி ஒருவருக்கு வாழ்வில் அனுபவிக்கக்கூடிய நன்மை தீமைகளை திரிகோணம் முதலில் தீர்மானம் செய்கிறது. அதற்கு அடுத்த நிலையில் கேந்திரம் ஸ்தானம் தீர்மானிக்கிறது. அதனால் ஒரு ஜனனம் நிகழ்வில் முதல் காரணமான தந்தை திரிகோண(9ஆம் வீடு) வீட்டிலும், இரண்டாம் காரணமான தாய்க்கு(4ஆம் வீடு) கேந்திர வீட்டையும் நிர்ணயித்துள்ளனர்.

இவ்வாறு தாயை குறிக்ககூடிய 4ஆம் வீடு கேந்திரத்தில் 2ஆம் இடத்தை வகிக்கிறது.

கேந்திரத்தில் மூன்றாவதாக 7ஆம் இடம் வரும் இது ஜாதகரின் களத்திரத்தை குறிக்கும். தாய் தந்தைக்கு அடுத்தபடியாக கணவன்/மனைவி உறவே மிகவும் சிறப்பானது.

கேந்திரத்தில் நான்காவதாக 10ஆம் பாவகம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒருவருடைய தொழில், மற்றும் ஜீவனத்தை குறிக்கும்.

கேந்திர அதிபதிகள்

ஜென்ம ஜாதகத்தில் லக்கினம் 1ஆம் இடம் ஆகும், அதிலிருந்து 4,7,10ஆம் வீடுகளின் ராசி அதிபதிகள் கேந்திர அதிபதிகள் ஆவார். ஒவ்வொருவருடைய ஜாதகத்திற்கும் கேந்திர அதிபதிகள் மாறுபடுவார்கள். ராசி மற்றும் அதன் அதிபதிகள் யார் என்று தெரிந்துகொள்வோம்

மேஷம் – செவ்வாய்
ரிஷபம் – சுக்கிரன்
மிதுனம் – புதன்
கடகம் – சந்திரன்
சிம்மம் – சூரியன்
கன்னி – புதன்
துலாம் – சுக்கிரன்
விருச்சிகம் – செவ்வாய்
தனுசு – குரு
மகரம் – சனி
கும்பம் – சனி
மீனம் – குரு அதிபதிகள் ஆவார்.

குறிப்பு: ஒரு ஜாதகருக்கு கேந்திர அதிபதிகளாக வரும் நான்கு கிரகங்களில் இரண்டு கிரகங்கள் சுபராகவும், இரண்டு கிரகங்கள் பாவராகவும் வரும்.

தெரிந்துகொள்க

 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்