குழந்தைக்கு முடி இறக்குதல் ஏன்?

குழந்தைக்கு முடி இறக்குதல் ஏன்? அதற்கு நல்ல நாள் பார்ப்பது எப்படி? என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

குழந்தைக்கு முடி இறக்குதல்
குழந்தைக்கு முடி இறக்குதல்

ஒரு வருடத்தில் காது குத்த முடியாதவர்கள் சௌள கர்ணம் என்னும் குழந்தைக்கு முடி இறக்குதல் நிகழ்வை ஒரு வருடத்திற்குள் செய்யலாம்.

பொதுவாக குழந்தைக்கு முடி இறக்குவது குழந்தையின் உடல் வளர்ச்சிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும்.

அதுவும் குழந்தை பிறந்து இரண்டு திதி அல்லது இரண்டு நட்சத்திரங்கள் சந்திக்காத நாளில் குழந்தை பிறந்த 11வது மாதத்தில் முடி இறக்குதல் மிகவும் நல்லது. ஆனால் தற்பொழுது குழந்தையின் ஆரோக்கியம் கருதி 7வது மாதம் அல்லது 9வது மாதம் செய்கிறார்கள்(அதனால் தவறில்லை).

தெரிந்துகொள்க: குழந்தைக்கு பெயர் வைக்க நாள் குறிப்பது எப்படிமுகூர்த்தம் சுத்தம் – நல்ல நாள் குறிப்பது எப்படி? | குழந்தைக்கு காது குத்துவது ஏன்?

குழந்தைக்கு முடி இறக்க நாள் குறிக்கும் முறை

திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் செய்வது நல்லது.

வளர்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி மற்றும் திரயோதசி ஆகிய திதிகள் உத்தம திதிகள் ஆகும்.

ரிஷபம், மிதுனம் கன்னி, துலாம், மகரம் மற்றும் மீன லக்னங்கள் மத்திம பலன்களை தரும் மேலும் லக்கினத்திற்கு 7ஆம் இடம் 8ஆம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.

நன்றி வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்