இந்த பதிவில் குழந்தைக்கு பெயர் வைக்க நாள் குறிப்பது எப்படி? அல்லது நாமகரணம் எப்படி சூட்டுவது? மற்றும் குழந்தையை தொட்டிலில் விடுதல் எப்படி? எந்த நாளில் செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
குழந்தைக்கு பெயர் வைக்கும் நாள் அல்லது நாமகரணம் சூட்டுவது
உலகில் உள்ள அனைத்து மனிதனும் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள பெயர் சூட்டிக்கொள்ளகிறார்கள். பெயர் இல்லாவிட்டால் ஒவ்வொரு மனிதனுடைய தகவல் பரிமாற்றங்களும் தடைபடும். குறிப்பாக இவரிடம் இந்த செயலை ஒப்படைத்தேன் என்று கூட கூற முடியாது.
இப்படியிருக்கு புதிதாக பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது பற்றியும் அதற்கான நல்ல நாளையும் ஜோதிட சாஸ்திரத்தில் நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர், அவற்றை பார்ப்போம்.
பிறந்த குழந்தைக்கு(புதிய ஜனனம்), குழந்தை பிறந்த 11வது நாளில் பெயர் சூட்டுவது மிகவும் சிறப்பானது, இருப்பினும் தற்போது உள்ள கால கட்டத்தில் இது சிலருக்கு மட்டுமே சாத்தியம் ஆகிறது. சாத்தியம் உள்ளவர்கள் 11வது நாளில் செய்வது சிறப்பு.
11வது நாள் தவற விட்டவர்கள் குழந்தை பிறந்த 30வது நாளில் பெயர் வைப்பது உத்தமம்.
குழந்தைக்கு பெயர் வைக்க அதன் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்பட முதல் எழுத்துக்களில் பெயர் வைப்பது நல்லது.
தெரிந்து கொள்க: ஜென்ம நட்சத்திரபடி குழந்தை முதல் எழுத்து
பெயர் வைக்க நாள் குறிப்பது எப்படி?
மேற்கூறிய 11வது மற்றும் 30 வது நாளில் கீழ்வரும் விதிகள் உட்பட்டால் மிகவும் உத்தமம் ஆகும். அப்படி 11வது மற்றும் 30வது நாளில் செய்ய முடியாதவர்கள் வேறு நாளில் செய்ய விரும்பினாலும் கீழுள்ள விதிகளின் படி நாள் மற்றும் லக்கினம் குறித்து பெயர் சூட்டி தொட்டிலிலிடவும்.
திங்கள், புதன், வியாழன், மற்றும் வெள்ளி கிழமைகளில் பெயர் வைக்க வேண்டும்.
துவிதியை, திருதியை, பஞ்சமி சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி ஆகிய திதிகள் சிறப்பு
தாராபலத்துடன் கூடிய அஸ்வினி, ரோகினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பெயர் வைப்பது சிறப்பை தரும்.
தெரிந்து கொள்க: தாராபலம் பார்ப்பது எப்படி?
பெயர் வைக்கும் நேரம் உள்ள லக்னதிற்கு எட்டாமிடம் சுத்தமாக உள்ள ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மற்றும் கும்ப லக்கினமும் இருத்தல் சிறப்பு.
முற்பகல் காலமாக இருக்க வேண்டும்.
குழந்தையை தொட்டிலில் விடுதல்
குழந்தையின் உடம்பிலுள்ள எலும்பு, தசை இயல்பாக அமையும், அவை சரியான வளர்ச்சியடையவும், குழந்தையின் நீண்ட நேர ஓய்வுக்கு தொட்டில் படுக்கை அவசியமாகிறது. இது குழந்தை பிறந்த நாளிலிருந்து 11வது நாள் செய்வது நல்லது. அவ்வாறு இல்லையென்றால் பெயர்சூட்டிய நாளில் நாமகரணம் வைத்து தொட்டிலில் இடுவது நல்லது.
நன்றி வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
- திருமண சுப முகூர்த்தம் குறிப்பது எப்படி
- முகூர்த்தம் சுத்தம் – நல்ல நாள் குறிப்பது எப்படி?
- நட்சத்திர ராசி கற்கள்
- 27 நட்சத்திர பொது பலன்கள்
- 27 நட்சத்திரங்கள் அதிபதி
- 27 நட்சத்திரங்கள் 12 ராசிகள்
- திருமண பொருத்தம்
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்