குழந்தைக்கு காது குத்துவது
குழந்தைக்கு காது குத்துவது ஏன்? அதற்கு நல்ல நாள் பார்ப்பது எப்படி? என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

குழந்தைக்கு காது குத்துவது
காது குத்துவது என்பது நமது முன்னோர்கள் காலந்தொட்டே இன்றளவிலும் தொடர்ந்து வரும் முக்கியமான சடங்குகளில் ஒன்றாகும். இவ்வாறு காது குத்துவது காதிலுள்ள உணர்ச்சி நரம்புகளை தூண்டி விட்டு குழந்தைக்கு உடல்நலமும், சீரான உடல் வளர்ச்சியும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பையும் உண்டாக்கும் என்பதனை முன்னரே நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர்.
இதையே நவீன முறையில் அக்குபஞ்சர் என்னும் சிகிச்சை முறையாக கையாளுகின்றனர். காது குத்தல் அல்லது கர்ண பூஷணம் என்னும் சடங்கு குழந்தைக்கு ஒரு வயது பூர்த்தியாகும் போது செய்வது சிறப்பாகும்.
தெரிந்துகொள்க: குழந்தைக்கு பெயர் வைக்க நாள் குறிப்பது எப்படி | முகூர்த்தம் சுத்தம் – நல்ல நாள் குறிப்பது எப்படி?
காது குத்த நல்ல நாள் பார்க்கும் முறை
எனக்கு தெரிந்து வரையில் பதிவிட்டுள்ளேன் சந்தேகம் இருப்பின் அருகிலுள்ள ஜோதிடரிடம் சென்று ஆலோசிக்கவும்.
திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகள் உத்தம நாட்கள்
துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, துவாதசி மற்றும் திரயோதசி ஆகிய திதிகள் உத்தமம்.
மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தம நட்சத்திரங்கள்.
சடங்கு நடக்க வேண்டிய லக்னங்கள் ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்களாக இருந்து லக்கினத்திற்கு 7ஆம் இடம் 8ஆம் இடத்தில் எந்த கிரகமும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.
மேற்கண்ட அனைத்தும் அதாவது கிழமை, திதி, நட்சத்திரம், லக்னம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமைய வேண்டும். உங்களால் முடிந்தவரை எடுத்துப்பாருங்கள் முடியவில்லையென்றால் அருகிலுள்ள ஜோதிடரிடம் சென்றும் ஆலோசிக்கவும் தவறில்லை.
நன்றி வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
தெரிந்துகொள்க
- தாராபலம் பார்ப்பது எப்படி?
- குழந்தைக்கு பெயர் வைக்க நாள் குறிப்பது எப்படி
- முகூர்த்தம் சுத்தம் – நல்ல நாள் குறிப்பது எப்படி?
- திருமண சுப முகூர்த்தம் குறிப்பது எப்படி
- நட்சத்திர ராசி கற்கள்
- 27 நட்சத்திர பொது பலன்கள்
- 27 நட்சத்திரங்கள் அதிபதி
- 27 நட்சத்திரங்கள் 12 ராசிகள்
- திருமண பொருத்தம்
- Read All Astrology Articles in English