குரு சுக்ர மூடம் என்றால் என்ன?
குரு சுக்ர மூடம் – ஜோதிட சாஸ்திரத்தில் அனைவரும் அறிந்த வார்த்தை குரு சுக்ர மூடம், ஆனால் அப்படியென்றால் என்ன என்று இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

குரு சுக்ர மூடம் என்றால் என்ன?
பொதுவாக மூடம் என்றால் செயலிழத்தல் என்று பொருள். குரு அல்லது சுக்ரன் சூரியனுக்கு மிக அருகில் இருப்பது குரு மூடம், சுக்ர மூடம் என்பார்கள்.
தெரிந்துகொள்க: திருமண பொருத்தம் | நிச்சயதார்த்தம் நிகழ்வு | பெண் பார்க்கும் நிகழ்ச்சி
முன்னோர்களின் கூற்றுப்படி அதாவது வாக்கிய பஞ்சாங்கப்படி குருவோ அல்லது சுக்ரனோ சூரியனுக்கு மிக அருகில் 3 பாதங்களுக்குள் இருப்பது அஸ்தங்கம் நிலையை அடையும் இதையே அஸ்தங்கம் அல்லது குரு, சுக்ர மூடம் என்பார்கள்.
இப்பொழுது அனைத்தும் பாகை கணக்கில் எடுப்பதால் சூரியனுக்கு அருகில் 11 பாகை உள்ளே குரு இருந்தால் அஸ்தமனம் அதேபோல சுக்கிரன் 10 பாகைக்குள் இருந்தால் அஸ்தமனம் என்று பொருள், இதனையே குரு சுக்ர மூடமாக கருதலாம்.
குரு சுக்ர மூடம் விளைவுகள்
கோச்சாரத்தில் குரு சுக்ர மூடம் வரும்பொழுது சுப விஷயங்கள் செய்யக்கூடாது. திருமணம் முகூர்த்தம், சாந்தி முகூர்த்தம் குறிப்பது, நிச்சயதார்த்தம் செய்வது, முகூர்த்தக்கால் நடுதல், வீடுகட்ட துவங்குதல், கிரகப்பிரவேசம் செய்தல், வளைகாப்பு சீமந்தம் செய்தல், குழந்தைக்கு பெயர் வைத்தல், போன்ற சுப நிகழ்வுகளை செய்ய கூடாது.
ஏனென்றால் சுப நிகழ்ச்சிக்கு காரணமான சுப கிரகங்கள் குருவோ அல்லது சுக்கிரனோ பலமிழந்த நிலையில் சுப நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது.
தெரிந்துகொள்க:
- வளைகாப்பு சடங்குகள்
- முகூர்த்தக்கால் நடுதல்
- நிச்சயதார்த்தம் நிகழ்வு
- திருமண பொருத்தம்
- திருமாங்கல்யம் செய்ய உகந்த நாள்
- ராகு கேது தோஷ திருமண பொருத்தம்
- Star Matching Table for Marriage in Tamil
- ஏக நட்சத்திரம் திருமண பொருத்தம்
- மகேந்திர பொருத்தம்
- யோனி பொருத்தம்
Video – Learn Basic Astrology in Tamil