குடைவறை கோயில்கள் பல்லவர்கள் காலம்

கி பி 3ஆம் நூற்றாண்டு முதல் 6ஆம் நூற்றாண்டு வரை களப்பிரர்கள் ஆட்சிதான் தமிழக்த்தில் நடந்தது. அக்காலத்தில் கட்டிடக் கலையோ மற்ற கலையோ பிரசித்தி பெறவில்லை. பின்னர் பல்லவ அரச மரபினர் ஆட்சி தமிழகத்தில் நிகழ்ந்தது.

பல்லவர்கள் காலம் கி பி 550 – 850

பல்லவர் காலத்தில் தான் தமிழகத்தில் கலைகளுக்கு புத்துணர்ச்சி காலம் எனலாம். பல்லவ மன்னர்கள் சமயம், கலை, இலக்கியம் முதலிய துறைகளில் அதிக ஈடுபாடு இருந்தது. கி பி 7ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டையும் சோழ நாட்டையும் மகேந்திரவர்மன் என்னும் பல்லவ மன்னன் ஆட்சி செய்தான்.

குடைவறை கோயில்கள்

மகேந்திரவர்மன் காலத்தில் கட்டிட முறையில் புதிய முறையை தோற்றுவித்தான். பெரிய கற்பாறைகளை, குன்றுகளின் முகப்புகளை செங்குத்தான அமைப்புடைய பாறை தடங்களிலும் கல் தச்சர்களை கண்டு குடைவித்து அழகிய குகைக் கோயில்களை அமைத்தான்.

செங்கல், சுண்ணாம்பு, மரம் ஆகிய பொருள்களால் கட்டப்பட்டிருந்த சங்ககால கோயில்கள் காலத்தால் சிதைந்தும் அழிந்தும் போன நிலையை கண்ட மகேந்திரவர்மன், அக்கட்டிட அமைப்பிலிருந்து மாறுபட்டும் நிலையான படைப்பை படைக்க விரும்பினான் அதுவே பாறைகளை வைத்து குடைவித்த குடைவறை கோயில்கள் ஆகும்.

மகேந்திரவர்மன் காலத்தில் (கி பி 600-630) தோன்றிய குகைக்கோயில்கள் தென்னாற்காடு மாவட்டம் விழுப்புர வட்டத்தில் உள்ள மண்டகப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ள குடைவரைக் கோயில் முக்கியமான ஒன்றாகும். மேலும் பல்வேறு இடங்களில் பல்லாவரம், திருச்சிராப்பள்ளி, மகேந்திரவாடி, சீயமங்கலம், மேலைச்சேரி, திருவல்லம், மாமண்டூர், தளவானூர் ஆகிய இடங்களில் குன்றுகள் உள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் மலையிலுள்ள சிற்ப குகைக்கோயிலும் இம்மன்னனின் காலத்தில் குடையப்பட்டது என்று கருதுகின்றனர்.

குடைவறை அமைப்பு

முகப்பு தோற்றம் நீண்ட சதுரமான மண்டபம் போன்றும், பெரிய அறையினை போன்றும், தோற்றம் அளித்தால் அதனை மண்டபக் குடைவரை கோயில்கள் எனலாம். அறையின் இரு பக்கங்களிலும் வாயிற்காவலர் சிலைகளும் மேலே கூரையை தாங்கி நிற்கும் பாங்கில் நான்கு பட்டைகள் முகப்பாக, எட்டு பட்டைகள் திரணையுடன் கூடிய தூண்களும் அமைக்கப் பட்டிருக்கும்.

திருச்சி உச்சி பிள்ளையார் கோயில் மலைத்தடத்தில் குடையப்பட்ட கோயில் ஒரு பக்கம் உள் அறையும், எதிர் பக்கம் தெய்வ மாடமும் உருவாக்கப்பட்டுள்ளன. மகேந்திர வர்ம பல்லவனால் தோற்றுவிக்கப்பட்ட குடைவறை கோயில்கள் தொண்டை நாட்டிலும், சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் இன்றளவும் பின்பற்றப் பட்டுள்ளது. மகேந்திரவர்மனுக்கு பிறகு நரசிம்மவர்மன், முதலாம் இராச சிம்மன், நந்திவர்மன் ஆகிய மன்னர்களின் காலத்திலும் குடைவரைக் கோயில்கள் அமைப்பு பின்பற்றப்பட்டது.

ஒற்றைக்கல் கற்கோயில்கள்

பல்லவர்கள் மலையை குடைவித்து மண்டப அரைக்கோயில்களை அமைத்ததோடு, கல்தச்சரைக் கொண்டு பெரிய வடிவிலமைந்த குண்டு பாறைகளையும், சிறிய குன்றுகளையும், பாறையை உளியால் செதுக்கி ஒற்றைக் கற்கோயில்களையும் படைத்துள்ளனர்.

இவ்வகை கோயில் வாயில், கருவறை, மேல் விமானம் ஆகிய அங்கங்களுடன் மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரத்தில் செய்யப்பட்டுள்ளன. கடற்கரையை ஒட்டி இயற்கையாக அமைந்துள்ள பாறையையும் குன்றுகளையும் செதுக்கி சிறப்பான கடற்கரை கோயிலினை இங்கு அமைத்துள்ளனர். பஞ்ச பாண்டவர் ரதங்கள் என்று குறிக்கப்பெறும் செதுக்கு முறை கோயில்களும் இவர்களின் கட்டிடக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பல்லவ மன்னன் பரமேஸ்வரனுக்கு பிறகு அவன் மகன் இராச சிம்மன் காலத்தில்தான் (கி பி 685-705) சிறந்த கருங்கல் கட்டிடக் கோயில்கள் பெரிய வடிவிலும் கட்டப்பட்டுள்ளன. இதற்கு சான்று காஞ்சிபுரம், மாமல்லபுரம், பனைமலை, திருப்பத்துர் ஆகிய இடங்களில் உள்ளன.

கட்டிடக் கலை நூல்கள்

இது போன்ற கட்டிடக்கலைக்கு அளவியல் கூறும் நூல்களில் சிறப்பாக கையாள பெரும் பிரிவுகள் இரண்டாகும். ஒன்று ‘மயன்’ என்ற தச்சரால் உருவாக்கப்பட்ட ‘மயமதம்’ என்ற தெய்வத்தச்சனால் ஏற்படுத்தப்பட்ட வழிமுறையாகும். மயமதம் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கட்டிட அமைப்பு வகைகட்கு பின்பற்றப்பட்ட சரித்திரமாகும்.

மற்றோன்று ‘விச்வகரீமியம்’ வட இந்தியாவில் கங்கை சிந்து நதிகளின் கரைநாடுகளில் கையாள பெற்ற சரித்திரமாகும். இதுபோன்ற தமிழ்நாட்டில் கட்டிடக் காலை இலக்கணங்களை முற்றும் அறிந்த சிற்பி ஒருவரால் ‘மனையடி சத்திரம்’ என்ற நூல் உருவாக்கப்பட்டது.

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

1 Comment

Comments are closed.