கீரை வகைகள் மருத்துவ குணங்கள்
கீரை வகைகள் மருத்துவ குணங்களும் பயன்களும் (Spinach Tamil) – இந்த பதிவில் முருங்கைக்கீரை, சிறுகீரை, புளிச்ச கீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை, அகத்திக் கீரை, பசலைக் கீரை, மணத்தக்காளி கீரை பற்றி விரிவாக பார்ப்போம் மற்றும் அதனால் என்ன பயன் என்றும் தெரிந்துகொள்வோம்.
கீரை வகைகள் – Keerai Varieties in Tamil | Spinach in Tamil
முருங்கைக் கீரை – Drumstick Spinach
இயற்கையாகவே அதிக சத்து நிறைந்தது, ஆண்மையை வளர்ப்பது, குருதியை தூய்மை படுத்தும் இரும்புச் சத்து கொண்டது. உடல் வெப்பத்தை தணிக்கும், மலச்சிக்கலை தீர்க்கும் வல்லமை இதற்கு உண்டு. பெண்களுக்கு மாதவிடாய் தருவாயில் வலி இருக்கும்பொழுது முருங்கைக்கீரை சாற்றில் சிறிது கல் உப்பு சேர்த்து சாப்பிட்டால் வலி நிற்கும்.
வயிற்றுப்புண்களை ஆற்றுவதோடு மற்ற மருந்துகளின் பக்க விளைவுகளுக்கு பெருமருந்தாக இதன் சாறு உதவும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய நோய்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். கருவுற்ற கர்ப்பிணி பெண்கள் இந்த சாற்றை வாரம் ஒரு முறை உட்கொண்டால் நீர் இறங்கும். பாதங்களில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கும். சோகையை போக்கும்.
சிறுகீரை – Spinach
உடல் தளர்ச்சியை போக்கும். மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கும். குடலின் பலத்தை அதிகரிக்கும். உடலில் இருக்கும் அதிகப்படியான பித்தத்தை குறைக்கும்.
புளிச்ச கீரை – Fermented Leaves
குடலினை சுத்தம் செய்து பலமாக்கும். வயிற்று புண்ணை ஆற்றும். வயிற்றுக் கடுப்பு உள்ளவர்கள் இக்கீரையை வெங்காயத்துடன் வெந்தயமும் சேர்த்து மூன்று வேலையும் சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு நின்று விடும். இரத்த போக்கை கட்டுக்குள் வைக்கும்.
அரைக்கீரை – Spinach
விஷத்தை முறிக்கும் ஆற்றல் அரைக்கீரைக்கு உண்டு. ஆங்கில மருந்து அதிகம் உட்கொண்டு அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை சரிசெய்யும். தேமல், சொறி போன்ற தோல் வியாதிகள் உள்ளவர்கள் இக்கீரையை தினமும் உட்கொண்டால் நாளடைவில் வியாதிகள் குணமடையும்.
வெந்தயக் கீரை – Fenugreek Leaves
முருங்கைக்கீரையை போலவே இதுவும் இரும்புச் சத்து கொண்டது. உடலுக்கு ஆற்றலை தரவல்லது. வயிற்றுப்புண்ணை ஆற்றுவதோடு கண்ணிற்கும் நல்லது. வயிற்றுப்போக்கு நேரத்தில் இதனை உட்கொண்டால் வயிற்றுப்போக்கு நின்று விடும்.
அகத்திக் கீரை – Agathi Leaves
அனைத்து வகையான சத்துக்களையும் கொண்டது இந்த கீரைதான். உடலில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கும். இரத்தம், குடல் ஆகியவற்றை தூய்மைபடுத்தும். குடற்புழுவை கொல்லும். பித்தத்தை தணிக்கும். தலைச்சுற்று, வாந்தி, மயக்கம் ஆகியவற்றை போக்கும். எல்லாவற்றிக்கும் மேலாக உடலில் எந்த வகையில் விஷம் ஏறினாலும் அதனை முறிக்கும் வல்லமை இதற்குண்டு. மேலும் சிலர் செய்வினை மருந்து என்று சொல்லுவார்கள் அது நம் உடலில் இருந்து நமக்கு உடல் உபாதைகளை கொடுக்கும். அம்மருந்தினை முறிக்கும் ஆற்றலும் இதற்குண்டு.
பசலைக் கீரை – Pasalai Spinach
குளிர்ச்சி தருவதில் சிறந்தது. நீர் உடல் அம்சம் கொண்டவர்கள் இதனை உட்கொள்வதை பெரும்பாலும் தவிர்க்கலாம். ஏனென்றால், இது உடலில் நீரை பெருக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க பயன்படும். வயிற்றுப்புண்களை குணப்படுத்துவதோடு கண்களுக்கு குளிர்ச்சியை தந்து நல்ல ஒளியைத் தரும்.
மணத்தக்காளி கீரை – Spinach
கீரை வகைகள் மணத்தக்காளி கீரை – அல்சர் வியாதியையே குணப்படுத்தும் மகிமை கொண்டது. குடலுக்கு தூய்மைப்படுத்தி பலம் கொடுக்கும். பெண்களின் மார்பக வளர்ச்சிக்கு நல்லது. கர்ப்பப்பை குறைபாட்டை நீக்கி ஆரோக்கியத்தை தரும். குடற்புழுவை அழிக்கும்.
Read More:- Health Tips in Tamil | உடல் எடை குறைப்பது புரதத்தின் பங்கு
Video – Learn Basic Astrology in Tamil