கிரகப்பிரவேசம் நாள் குறிக்க கவனிக்க வேண்டியவை

கிரகப்பிரவேசம் நாள் குறிக்க
கிரகப்பிரவேசம் நாள் குறிக்க கவனிக்க வேண்டியவை – கிரகப்ரவேசம் செய்யும் நாள் அன்று முகூர்த்த லக்கின காலத்தில் குருவோ சுக்கிரனோ(கோச்சாரத்தில்) சூரியனுடன் கூடி நின்று அஸ்தமனம் ஆகாமல் இருக்க வேண்டும். இவ்வாறு உள்ள அமைப்பை குரு சுக்கிர அஸ்தமனம் அல்லது குரு சுக்ர மூடம் என்பார்கள்.
தெரிந்து கொள்க: குரு சுக்ர மூடம் என்றால் என்ன?
எந்த சுப லக்கின, நாளாக இருந்தாலும் குரு சுக்ர மூடம் காலத்தில் கிரகப்பிரவேசம் நடத்தக்கூடாது.
மேலும் குருவோ சுக்கிரனோ நீசம் அடைந்தோ அல்லது பகை பெற்று வலுவிழந்து நின்றாலும் கிரகப்பிரவேசம் நடத்தக்கூடாது.
கிரகப்பிரவேசம் செய்யும் நாளில் சுக்கிரன் எந்த திசையில் இருக்கின்றதோ அந்த திசையை நோக்கியவாறு வீட்டினும் புகுதல் கூடாது.
முகூர்த்த லக்கினத்திற்குரிய ராசியின் மேல் பாவ கிரகங்களின் பார்வையோ அல்லது பாவ கிரகங்களோ இருக்ககூடாது.
முகூர்த்த லக்கினத்திற்குரிய ராசியின் மேல் சுப கிரகங்களின் பார்வையோ அல்லது சுப கிரகங்களோ இருக்கலாம்.
குறித்த லக்கினத்திற்கு 4ஆம் இடம் சுத்தமாக எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது சிறப்பு. 4ஆம் இடம் பூமியை குறிப்பதால் இந்த இடம் பலம் பெற்று இருக்க வேண்டும்.
அதேபோல குறித்த முகூர்த்த லக்கினத்திற்கு 8ஆம் இடம், 12ஆம் இடம் எந்த கிரகமும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.
8ஆம் இடம் ஆயுள் பலத்தையும், 12ஆம் இடம் மருத்துவ செலவுகளையும் குறிப்பதால் இந்த இரண்டு ஸ்தனங்களும் நல்ல நிலையில் இருக்க வேண்டும்
பொதுவாகவே அக்னி நட்சத்திரம் நடைபெறுகின்ற காலகட்டத்தில் சுபகாரியங்களை செய்யக்கூடாது. ஆதலால் இந்த காலகட்டத்தில் கிரகப்ரவேச நிறுத்த வேண்டும்.
தெரிந்து கொள்க
கிரகப்பிரவேசம் செய்ய முகூர்த்தம் லக்னம் குறிப்பது
சுப லக்னம் குறிப்பது என்றால் என்ன
திருமாங்கல்யம் செய்ய உகந்த நாள்