Skip to content
Home » Vasthu in Tamil » கிரகப்பிரவேசம் செய்ய முகூர்த்தம் லக்னம் குறிப்பது

கிரகப்பிரவேசம் செய்ய முகூர்த்தம் லக்னம் குறிப்பது

கிரகப்பிரவேசம் செய்ய முகூர்த்தம் லக்னம் குறிப்பது – இந்த பதிவில் புதுமனையில் நல்ல நாள், நல்ல திதி, நல்ல நட்சத்திரம் பார்த்தாலும் கிரகப்பிரவேசம் செய்யும் நேரத்தில் நல்ல முகூர்த்த லக்னம் குறிப்பது எப்படி மற்றும் அதற்கான பலன்கள் என்ன என்று தெரிந்துகொள்வோம்.

கிரகப்பிரவேசம் செய்ய முகூர்த்தம்
கிரகப்பிரவேசம் செய்ய முகூர்த்தம்

கிரகப்பிரவேசம் முகூர்த்தத்தை விடியற்காலை(பிரம்ம முகூர்த்தம்) வேலையில் நிகழ்த்துவது மிகவும் சிறப்பானது ஆகும். அதில் என்ன லக்கினம் வருகிறது மற்றும் எந்த லக்கினத்தில் செய்தால் என்ன பலன் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள பலன்களை தெரிந்துகொள்ளவும்.

மேஷ லக்கினத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் நற்பலன்கள் உண்டாகும்.

ரிஷப லக்கினத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் வீட்டிற்கு தனவரவு அதிகரிக்கும்.

மிதுன லக்கினத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் கால்நடை விருத்தி ஆகும்.

கடக லக்கினத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் பொருள் இழப்பு அல்லது சேதம் உண்டாகும்.

சிம்ம லக்கினத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் உறவினர்கள், நண்பர்களிடம் நல்லுறவு உண்டாகும்.

கன்னி லக்கினத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் உடல் ஆரோக்கியம் கெடும்.

துலாம் லக்கினத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் பலவிதமான நன்மைகளும், பொருள்வரவும் உண்டாகும்.

விருச்சிக லக்கினத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் வீட்டில் உள்ளவர் ஒருவருடைய இடமாற்றத்தை உண்டாக்கும்.

தனுசு லக்கினத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் பேச்சாற்றல் அதிகமாகும். பேசியே தொழில் செய்பவர்களுக்கு அதிக தனவரவு உண்டாகும்.

மகர லக்கினத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் தானியம் மற்றும் தொழில் விருத்தியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். புது பதவிகள், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

கும்ப லக்கினத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும், சேமிப்பு உயரும். தங்கம், ரத்தினங்கள் சேமிப்பு அதிகரிக்கும்.

மீன லக்கினத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் மரணபயத்தை உண்டாக்குவார். ஆதலால் அதனை தவிர்ப்பது நல்லது.

எனவே எந்த லக்கினத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் நன்மை உண்டாகும். என்பதை நன்கு ஆராய்ந்து முடிவுஎடுத்து பயன்பெறுக.

தெரிந்து கொள்க

 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்