கிரகங்களின் தசா புத்தி வருடங்கள்

தசா புத்தி என்றால் என்ன? – தசா புத்தி வரிசை – தசா அட்டவணை – வேத ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் சில குறிப்பிட்ட ஆண்டுகள் தசா வருடங்கள் மற்றும் புத்தி காலங்கள் என நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஓர் ஜாதகருக்கும் அவருடைய வாழ்க்கை படியில் கிடைக்க வேண்டிய சுக துக்க நிகழ்வுகளை கிரகங்கள் தன் தசா புத்தி வருட காலங்களில் செயல் படுத்துகின்றன. இதில் புத்திக்கான வருடங்கள் ஒவ்வொரு திசைக்கேற்ப மாறுபடும்.

"<yoastmark
தசா மற்றும் புத்தி

தசா வருட காலங்கள் என பார்க்கும்பொழுது 9 கிரகங்களும் சேர்த்து மொத்தம் 120 ஆண்டுகள் வரும். கீழ்வரும் பதிவில் நட்சத்திரங்கள் அதன் அதிபதிகள் மற்றும் அதற்கான தசா வருடங்கள் எத்தனை ஆண்டுகள் என்று தெரிந்து கொள்வோம்.

தசா புத்தி வரிசை – தசா அட்டவணை

அஸ்வினி – மகம் – மூலம் – கேது – 07 ஆண்டுகள்
பரணி – பூரம் – பூராடம் – சுக்கிரன் – 20 ஆண்டுகள்
கார்த்திகை – உத்திரம் – உத்திராடம் – சூரியன் – 06 ஆண்டுகள்
ரோகிணி – ஹஸ்தம் – திருவோணம் – சந்திரன் – 10 ஆண்டுகள்
மிருகசீரிடம் – சித்திரை – அவிட்டம் – செவ்வாய் – 07 ஆண்டுகள்
திருவாதிரை – சுவாதி – சதயம் – ராகு – 18 ஆண்டுகள்
புனர்பூசம் – விசாகம் – பூரட்டாதி – குரு – 16 ஆண்டுகள்
பூசம் – அனுஷம் – உத்திரட்டாதி – சனி – 19 ஆண்டுகள்
ஆயில்யம் – கேட்டை – ரேவதி – புதன் – 17 ஆண்டுகள்

என மொத்தம் 120 ஆண்டுகள்

புத்தி கணிதம்

ஒவ்வொரு தசா வருடங்களுக்கும் ஏற்ப புத்தி கிரகங்கள் வருடங்கள் மாறுபடும் அவற்றை எவ்வாறு கணிப்பது என்று பார்ப்போம்

இப்பொழுது ஒருவருக்கு சந்திர தசா ராகு புத்தி நடக்கிறது எனில்

சந்திர தசா வருடங்கள் = 10 வருடங்கள் 
ராகு தசா வருடங்கள் = 18 வருடங்கள் 

புத்தி கணிதம் = (10×18)/120 = 1.5 வருடங்கள்
1.5 வருடங்களை மாதங்களாக மற்ற = 1.5×12 = 180 மாதங்கள்ஆக 1 வருடம் 6 மாதங்கள்

பொதுவாக சந்திர தசா ராகு புத்தி காலங்கள் 1 வருடம் 6 மாதங்கள் ஆகும்.

இதே போல மற்ற புத்தியை கணக்கிட்டு கொள்ளவும்.

குறிப்பு: இது பொதுவான புத்தி கணக்கு மட்டுமே மற்றபடி ஒவ்வொரு ஜாதத்திற்கும் ஏற்றவாறு மாறுபடும்.

தெரிந்துகொள்க 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்