கிரகங்களின் ஆட்சி உச்சம் நீசம் என்றால் என்ன?

கிரகங்களின் ஆட்சி உச்சம் நீசம் – ஜோதிடத்தில் 12 ராசிகள் மற்றும் 9 கிரகங்கள் உள்ளன. அவற்றில் ராகு கேது தவிர மற்ற ஒவ்வொரு கிரகத்திற்கும் சொந்த வீடுகள் உள்ளன. அவ்வாறு கிரகங்கள் தன் சொந்த வீடுகளில் நின்றால் அவை ஆட்சி வீடுகள் என அழைக்கப்படும்.

ஆட்சி உச்சம் நீசம்

ஆட்சி உச்சம் நீசம்

ஒரு ஜாதகத்தில் சொந்த வீடுகளில் உள்ள வீடுகள் 100% பலமுடன் இருப்பதாக பலன் எடுத்துக்கொள்ள வேண்டும். உச்ச வீடுகளில் 200% பலமும், மூலத்திரிகோண வீட்டில் 150% பலமும், நீச்ச வீடுகளில் 20-30% பலத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும். நீசம் என்றவுடன் 0% பலம் என்று எடுக்க கூடாது.

ஆட்சி வீடுகள்

சூரியன் ஆட்சி வீடு சிம்மம்
சந்திரன் ஆட்சி வீடு கடகம்
செவ்வாய் ஆட்சி வீடு மேஷம், விருச்சிகம்
புதன் ஆட்சி வீடு மிதுனம், கன்னி
குரு ஆட்சி வீடு தனுசு, மீனம்
சுக்கிரன் ஆட்சி வீடு ரிஷபம், துலாம்
சனி ஆட்சி வீடு மகரம், கும்பம்

இதில் ராகு கேதுவிற்கு சொந்த ஆட்சி வீடுகள் கிடையாது. சூரியன் மற்றும் சந்திரனுக்கு 1 ஆட்சி வீடுகள் மட்டுமே உண்டு. மற்ற 5 கிரகங்களுக்கும் 2 ஆட்சி வீடுகள் உள்ளன.

உச்ச வீடுகள்

உச்ச வீடுகள்

உச்ச வீடுகள்

உச்ச வீடுகளில் கிரகம் இருந்தால் ஆட்சி வீட்டை விட இருமடங்கு பலத்துடன் இருப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த கிரகம் எந்த வீட்டில் உச்சம் அடைகிறது என பார்ப்போம்.

மேஷம் – சூரியன் உச்சம்
ரிஷபம் – சந்திரன் உச்சம்
கடகம் – குரு உச்சம்
கன்னி – புதன் உச்சம் (ஆட்சியும், மூலத்திரிகோணமும் கூட)
துலாம் – சனி உச்சம்
மகரம் – செவ்வாய் உச்சம்
மீனம் – சுக்ரன் உச்சம்

நீச வீடுகள்

ஒரு கிரகம் உச்சம் பெற்ற வீட்டில் இருந்து நேர் 7 ஆம் வீட்டில் நீசம் அடையும். இவ்வாறு நீசம் அடைந்த கிரகம் தன் பலத்தை இழந்து இருப்பர், அதனைப் பொறுத்தே ஜாதகருக்கு பலன் அமையும்.

எ.கா: சூரியனுக்கு மேஷம் உச்ச வீடு எனில் மேஷத்திலிருந்து கணக்கிட்டு 7 வது வீடு துலாத்தில் நீசம் அடைவார். அதே போல மற்ற கிரகங்களையும் கணக்கிட்டு பார்க்க

மேஷம் – சனி நீசம்
கடகம் – செவ்வாய் நீசம்
கன்னி – சுக்கிரன் நீசம்
துலாம் – சூரியன் நீசம்
விருச்சிகம் – சந்திரன் நீசம்
மகரம் – குரு நீசம்
மீனம் – புதன் நீசம்

பாரம்பரிய ஜோதிடப்படி சிலர் ராகு கேதுவிற்கு உச்ச நீச வீடுகள் இல்லையென்றும் சிலர் உள்ளது என்றும் கூறுகின்றனர். என்னை பொறுத்தவரையில் ராகு கேது எங்கிருந்தாலும் அந்த பாவகம் வலிமை இழக்கிறது எனவே அதற்கு உச்சம் நீசம் வீடுகள் இல்லை என்று எடுத்து வருகிறேன். இருப்பினும் தகவலுக்காக பதிவிடுகிறேன்.

ராகு, கேது – ரிஷபம் நீச வீடு
ராகு, கேது – விருச்சிகம் உச்ச வீடு

நன்றி வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

Keywords: Aatchi veedu | Ucha veedu | neesa veedu | ஆட்சி உச்சம் நீசம் வீடுகள் | Aatchi ucha neesa veedu

தெரிந்துகொள்க 

You may also like...