களத்திர தோஷம் விளக்கம் – இந்த பதிவில் களத்திர தோஷம் என்றால் என்ன? தோஷம் தொடர்பான பாவகங்கள் எவை? அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தோஷம் உள்ளவர்களுக்கு களத்திர தோஷ திருமண பொருத்தம் செய்வது எவ்வாறு என்று பார்ப்போம்.
ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் திருமணம் சம்பந்தப்பட்ட பாவகங்களான 1,2,7,8ஆம் ஸ்தானங்களில் இயற்கை பாவ கிரகங்களான செவ்வாய், சனி, ராகு மற்றும் கேது இருப்பது களத்திர தோஷம் எனப்படும்.
Read More: காதல் திருமண ஜாதக பொருத்தம் | முக்கிய திருமண பொருத்தம் | திருமண பொருத்தம்
7ஆம் பாவகாதிபதி நீசம் அடைந்திருந்தால் களத்திர தோஷம் இருப்பதாக பொருள்.
7ஆம் பாவகாதிபதி அஸ்தனம் அடைந்திருந்தால் களத்திர தோஷம் இருப்பதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
சூரியன் அரை பாவர் என்றாலும் 7ஆம் இடத்தில உள்ள சூரியன் ஜாதகருக்கு மிக பெரிய அளவில் தோஷத்தை உண்டு பண்ணுகிறார்.
6, 7 பாவகதிபதிகள் அல்லது 7, 8ஆம் பாவகதிபதிகள் ஒன்றாக ஒரே பாவகத்தில் இருப்பது.
7ஆம் பாவகாதிபதி சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேதுவுடன் இணைந்திருப்பது.
களத்திர தோஷம் விளைவுகள்
களத்திர தோஷம் உள்ள ஜாதகருக்கு எதிர்பார்த்ததை போல் திருமணம் வாழ்க்கை அமையாது.
திருமணத்தில் தடை உண்டாகும், கால தாமதமான திருமணம் ஏற்படும்.
திருமண வாழ்க்கையில் ஏமாற்றத்தை சந்திக்க கூடும்.
அடிக்கடி காலத்திரத்திரத்துடன் பிரச்சனைகள் உண்டாகும், களத்திரத்தினால் பெருமளவில் ஆதாயம் இருக்காது.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும்.
களத்திர தோஷ திருமண பொருத்தம்
லக்கினத்திற்கு அல்லது ராசிக்கு 1,2,7,8ஆம் ஸ்தானங்களில் இயற்கை பாவ கிரகங்கள் அமர்ந்து இருப்பது களத்திர தோஷம் ஆகும். இது போன்ற களத்திர தோஷம் உள்ள ஜாதகருக்கு அதே போல பொருத்தம் உள்ள ஜாதகத்தை இணைப்பது சரியான பொருத்தம் ஆகும்.
Read More
- 27 நட்சத்திர பொது பலன்கள்
- 27 நட்சத்திரங்கள் அதிபதி
- 27 நட்சத்திரங்கள் 12 ராசிகள்
- சனி தோஷம் விளக்கம்
- செவ்வாய் தோஷ விதிவிலக்கு
- காதல் திருமண ஜாதக பொருத்தம்
- முக்கிய திருமண பொருத்தம்
- திருமண பொருத்தம்
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்