கடன் பிரச்சனைகளை சரி செய்ய உதவும் எளிய பரிகாரங்கள்

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

வாழ்க்கையில் பலருக்கும் பல்வேறு விதமான பிரச்சனைகள் இருக்கும். ஆனால் தற்போது பெரும்பாலானவர்களை அதிகம் பாதிக்கக்கூடிய பிரச்சனை கடன் பிரச்சனைதான். மனிதர்களிடமோ அல்லது வங்கியிலோ இருந்து வாங்கிய கடனின் உழைப்பு, அதை அடைக்க வேண்டிய மனஅழுத்தம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடனில் இருந்து விடுபடுவதற்கும் மாதந்தோறும் வட்டிகளை சரியாக செலுத்துவதற்கும் தேவையான வருமானம் கிடைக்காததால், இது பெரும் சவாலாக மாறுகிறது.

கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபட செவ்வாய் கிரகம் மிகவும் சக்திவாய்ந்தது. இது கோபம், தைரியம், வேகம் ஆகியவற்றை வழங்கக்கூடியது. இதனால் கடனில் இருந்து விடுபட நினைப்பவர்கள் வழிபடுவதற்கும், பரிகாரம் செய்வதற்கும் ஏற்ற சக்தி வாய்ந்த நாளாக செவ்வாய்கிழமை கருதப்படுகிறது. அதனால், செவ்வாய் கிழமையில் செவ்வாய் பகவானுக்குரிய அதிபதியான முருகனை வழிபடுவது சிறப்பாகும்.

உப்பு மற்றும் மிளகு பரிகாரம்:

செவ்வாய் கிழமையன்று காலை அல்லது மாலையில் சிறிதளவு உப்பு மற்றும் மிளகை ஒன்றாக கலந்து கொள்ளவேண்டும். கலந்த கலவையை இரண்டாக பிரித்து, வீட்டின் நிலை வாசலுக்கு வெளியே இருபுறமும் சிறிய பாத்திரங்களில் வைக்கவேண்டும். அருகில் நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கேற்றி, முருகனை நினைத்து பூஜை செய்யவும்.

வெள்ளிக்கிழமை காலையில் பழைய உப்பு, மிளகை நீர் நிலைகளில் கரைத்து, அன்று மாலையில் புதிய உப்பு, மிளகை மாற்றி வைக்கவும்.

முடிந்தால், செவ்வாய் கிழமைகளில் மாலை நேரத்தில் முருகன் ஆலயத்திற்கு சென்று அர்ச்சனை செய்து, ஒரு விளக்கேற்றி வைக்கவும்.

மேலும், கடனை அடைக்க, திரும்ப தரும் முதல் தவணை மற்றும் முடிந்தால் அனைத்து தவணையையும், செவ்வாய்கிழமை குளிகை நேரத்தில் செலுத்தி வந்தால், கடனின் அழுத்தம் குறைந்து விரைவில் அடைந்துவிடும்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்தால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, முருகன் அருள் மற்றும் நல்ல சக்திகள் வீட்டில் நிலவும். கடனில் இருந்து விரைவில் விடுபட்டு, நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்.

வாழ்க வளமுடன்!

ஸ்ரீ சுப்ரமணிய அஷ்டகம்

Jaya Jaya Devi Song Lyrics in Tamil

Video – Mesha Rasi New year Palan 2025

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்