Jaya Jaya Devi Song Lyrics in Tamil

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

Jaya Jaya Devi Song Lyrics in Tamil – ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் பாடல் வரிகள் – திரைப்பட பின்னணிப் பாடகி பி.சுசீலா அவர்களால் பாடப்பட்டது தான் அன்னை துர்கா தேவியை போற்றிப் பாடும் ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் என்ற பாடலை அறியாத, பாடாத தமிழர்கள் இல்லை என்றே கூறலாம். இன்றளவும் பல திருக்கோயில் திருவிழாக்கள், விசேஷ நாட்களில் வீடுகளிலும் இந்த பாடல் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த பாடலை வரிகளை பார்ப்போம்.

Jaya Jaya Devi Song Lyrics in Tamil
Jaya Jaya Devi Song Lyrics in Tamil

Jaya Jaya Devi Song Lyrics in Tamil

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும்

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்

பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்குமப் பொட்டு வெற்றிப் பாதையைக் காட்டும்

ஆயிரம் கரங்கள் உடையவளே ஆதி சக்தி அவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மை காப்பவளே

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்

சங்கு சக்கரமும் வில்லும் அம்பும் மின்னும் வாளும் வேலும் சூலமும்
தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா..
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள் திங்களை முடிமேல் சூடி நிற்பாள்
மங்கள வாழ்வும் தந்திடுவாள் மங்கையர்கரசியும்
அவளே அங்கையர்ககண்ணியும் அவளே

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
கனக துர்கா தேவி சரணம்
கனக துர்கா தேவி சரணம்

Read More:

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்