இந்த பதிவில் திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் வழியில் அமைந்துள்ள சிறப்பு மிக்க ஓமாந்தூர் காமாட்சி அம்மன் கோயில் சிறப்பினை காண்போம். இது மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் இங்கு கோயில் சந்நதி திறப்பு மற்றும் வழிபாடு என்பது வாரம் இருமுறை மட்டுமே நடக்கும். திங்கள் மற்றும் வெள்ளி கிழமை. மற்றபடி, அமாவாசை, பௌர்ணமி, மகா சிவராத்திரி(முழு விசேஷ தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்). மற்றும் சில குறிப்பிட்ட விசேஷ தினங்களில் மட்டும் தான் நடை திறந்திருக்கும்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | ஜோதிட தகவல்கள் | Learn Basic Astrology | நாலடியார் பாடல்கள் மற்றும் விளக்கம் | கனவு பலன்கள்
ஓமாந்தூர் காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ள இடம்
ஓமாந்தூர் கிராமம் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து சரியாக 30 கி.மீ தூரம். உள்ளூர் பேருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாக உள்ளது.
நடை திறப்பு (காலை 9.30 முதல் 2.30 வரை)
வாரம் இரு நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளி மட்டுமே கோயில் வழிபாட்டு நாட்கள். இது போக தமிழ் மாத பிறப்பு, தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல், ஆடி பதினெட்டு, ஆடி இருபத்தெட்டு, மகா சிவராத்திரி நாட்களில் கோயில் திறந்திருக்கும். சிவராத்திரி இங்கு மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
ஓமாந்தூர் காமாட்சி அம்மன் கோயில் வழிபாடு
ஓமாந்தூர் காமாட்சி அம்மன் கோயில் – இங்குள்ள எல்லா சந்நிதிகளிலும் தெய்வங்கள் ஜோடியாகவே காட்சி தருகின்றன. முதலில் காமாட்சி அம்மன் சந்நிதியை சுத்தம் செய்து அஷ்டலட்சுமி விளக்கில் நெய்விளக்கேற்றி அதிலிருந்து காமாட்சி அம்மன் ஜோதியை ஏற்றி வணங்குவார். அதன்பின்பே மற்ற சந்நிதிகளில் ஜோதி ஏற்றப்படும். மதியம் 12 மணி பூஜையின் போது மட்டும் அம்மனுக்கு கற்பூர ஜோதி காட்டப்படும். பின்னர் ஏகாம்பரநாதருக்கு பூஜை நடைபெறும். இங்கு பூஜை முடிந்த பின்னர் மாசி பெரியண்ண சாமி சந்நிதிக்கு சென்று பூஜை மேற்கொள்ளவர்.
திருவிழா
இத்திரு கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா மிகச் சிறப்பு வாய்ந்தது. அன்று மட்டும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.
கோயில் சிறப்பு
இந்த கோயிலில் எந்த தெய்வத்திற்கும் உருவ(சிலை) வழிபாடு கிடையாது. அனைத்து தெய்வங்களும் ஒளி(ஜோதி) வடிவில் காட்சியளிக்கின்றன. ஆதலால் மக்கள் இங்கு விளக்கேற்றி வழிபட வேண்டும் என்பது அவசியமில்லை.
பிரசாதம்
இத்திருக்கோயில் கோயில் சுற்று மதிலுக்குள் வெட்டியெடுக்கும் மண்ணே திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. பக்தர்கள் இம்மண்ணை திருநீறு பூசியும் வீட்டிற்கு கொண்டு சென்று வீட்டு நிலை வாசலில் ஒரு மஞ்சள் தோய்த்த துணியில் காட்டி தொங்க விடுவார்கள். இவ்வாறு செய்வதால் எந்த ஒரு தீய சக்தியும் வீட்டிற்கு நெருங்காது என்பது நம்பிக்கை.
தனிச் சிறப்பு
இங்கு மாசி பெரியண்ண சுவாமி தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். இவரோடு மாசிக்கருப்பண்ண சாமியும், மகா முனீஸ்வரரும் ஜோதி வடிவில் இருக்கின்றனர். பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற வேல் வழிபாடு செய்கின்றனர். இங்கிருக்கும் திரிசூலம், வேலினைத் தோளில் தாங்கி சந்நிதியை மூன்று முறை வலம் வருகின்றனர். இவருக்குரிய வாகனம் வேங்கைப்புலி. மாசி பெரியண்ண சுவாமிக்கு பால் சாதமும் சர்க்கரை பொங்கலும் நிவேதியம் செய்வது சிறப்பு மற்றும் வேலுக்கு பூமாலை, எலுமிச்சை மாலை அணிவித்து வழிபடுவது சிறப்பு.
தெய்வங்கள்
இத்திருக்கோயிலில் அன்ன காமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் மாசி பெரியண்ண சாமி க்கு பிரசித்தி பெற்ற ஸ்தலம். இது போக காத்தவராயன் சாமி , பைரவர், தேவராயசுவாமி, சவுதாரி அம்மன், சண்டிகேஸ்வரர், கரட்டடியான், பச்சை நாச்சி, கவுமாரி, லாடப்ப சன்னியாசி, மதுரை வீரன், புதுக்கருப்பு, பச்சாயி, மாசி கருப்பண்ண சாமி, மகா முனீஸ்வரர் ஆகியோரும் மக்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
ஓமக்குளம்
இங்கு வாழ்ந்த ஓமரிஷியின் பெயரால் ஓமக்குளம் தீர்த்தம் கிணறு உள்ளது. இக்குளத்தில் நீராடி, காமாட்சி அம்மனை தரிசனம் செய்தால் நினைத்தது நிறைவேறும்.
பிரார்த்தனை
இங்கு வரும் அனைத்து மக்களுக்கும் தாயாக இருந்து அவர்கள் கவலைகளை தீர்த்து வைக்கிறாள் அன்னை(அன்ன) காமாட்சி அம்மன்.
தரிசித்து இறையருள் பெறுக! வாழ்க வளமுடன்!
மேலும் காண்க
- Business Ideas in Tamil
- Video: அம்மா பற்றிய வரிகள்
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க
- All Kanavu Palangal in Tamil
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்