எண் 9 நியூமெராலஜி பலன்கள்

கூட்டு எண் 9 நியூமெராலஜி பலன்கள்(Numerology Number 9 in Tamil) – பிறப்பு எண் 9, 18, 27 ஆக உள்ளவர்கள் மற்றும் கூட்டு எண், விதி எண் 9ல் பிறந்தவர்களுக்கு பொது பலன்கள், அதிர்ஷ்ட தேதிகள், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட ரத்தினம், தொழில் போன்றவைகளுக்கு என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம்.

எண் 9 நியூமெராலஜி பலன்கள்

எண் 9 நியூமெராலஜி பலன்கள்

அதிபதி: செவ்வாய்
அதிர்ஷ்ட தேதிகள்
– 5,14,23,9,18,6,15,24,30ஆம் தேதிகள் அதிர்ஷ்டமானவை
அதிர்ஷ்ட நிறம் – சிகப்பு நிறம் மஞ்சள் நிறம்
அதிர்ஷ்ட ரத்தினம் – பவளம்

தெரிந்து கொள்க: எண் கணிதம் ஜோதிடம் பார்ப்பது எப்படி?

நியூமெராலஜி எண் 9ல் பிறந்தவர்கள் பொதுவான பலன்கள்

நியூமெராலஜி எண் 9ல் பிறந்தவர்கள் அறிவாளிகள், சாகச காரர்கள், ஆரோக்கியமான தேகம், பலசாலிகள், வீரச்செயல்களில் புரிவதில் ஆர்வம் அதிகம். வாழ்க்கையில் போராடி வெற்றி பெறுவது பிடிக்கும். எளிதாக கிடைத்த வெற்றியின் மூலம் நாட்டம் இருக்காது. ரகசிய காப்பான்கள், சில நேரங்களில் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார்கள். பேச்சில் சாமர்த்தியசாலிகள்.

இவர்களில் ஏதாவது தழும்பு இருக்கும். சமாதானத்தில் அதிக விருப்பம் இருக்காது. யாருடைய மாட்டர்கள். தன் இஷ்டப்படி வாழ்க்கையை நடத்துவார்கள். முன்கோபமும் .முரட்டுத்தனமும் கொண்டவர்கள், மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்கள். அதனாலே எதிரிகள் இவர்களுக்கு அதிகம்.

மனோதைரியம் மிக்கவர்கள், யார் தவறு செய்தாலும் அதனை எல்லோர் முன்னும் வெளிப்படுத்துவர். தாராள உறுதி கொண்டவர்கள். ரசாயனம், வைத்தியம் சம்பந்தமான வேலை சிறப்பைத்தரும். உடன் இருப்பவர்களை தொந்தரவு செய்வது பிடிக்கும். காம இச்சை அதிகம் கொண்டவர்கள். தெய்வ பக்தி இருந்தாலும் காவல் தெய்வ வழிபாட்டையே அதிகம் விரும்புவார்கள்.

9ஆம் தேதி பிறந்தவர்கள்

9ஆம் தேதியில் பிறந்தவர்கள் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தனது சாமர்த்தியத்தால் வெற்றி அடைவார்கள். மற்றவர்களை அதட்டி வேலை வாங்குவதில் கெட்டிக்காரர்கள். பராக்கிரசாலி என்பதால் செயற்கரிய செயலை செய்து முடிப்பது பிடிக்கும். சாதாரணமான விசயத்திற்கு கூட அதிக வீரத்தை வெளிப்படுத்துவார்கள். எல்லா தடையையும் உடைத்து வாழ்வில் வெற்றி பெறுவார்கள்.

18ஆம் தேதி பிறந்தவர்கள்

18ஆம் தேதியில் பிறந்தவர்கள் அதிக கோபம் மற்றும் பிடிவாத காரர்கள். பெரும்பாலும் சுயநலவாதியாகவே இருப்பார்கள். அவசர முடிவுகளை எடுத்து பின்பு அந்த முடிவுக்காக வருத்தப்படுவார்கள். மேலும் அவசர முடிவுகளால் உடன் இருப்பவர்களிடம் மனக்கசப்பு உண்டாகும். இவர்கள் காதலில் வெற்றி பெறுவது கடினம். இவர்களின் பிடிவாத குணம் மற்றும் கோபத்தை குறைத்துக்கொண்டாள் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள்.

27ஆம் தேதி பிறந்தவர்கள்

27 ஆம் தேதியில் பிறந்தவர்கள் அறிவாளிகள், தளராமல் உழைக்கும் குணம் உண்டு. நல்ல விஷயங்கள் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள் மேலும் அதனால் புகழ் பெறுவார்கள். அவசரமாக எடுக்கும் முடிவுகள் இவருக்கு எதிராகவே சென்றடையும் என்பதை உணர்ந்து நிதானித்து யோசித்து வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்.

நியூமெராலஜி எண் 9ல் பிறந்தவர்கள் தொழில்கள்

இன்ஜினியரிங் தொழில், கட்டிடம் கட்டுதல், இரும்பு சாமான்கள் உற்பத்தி செய்வது, இயந்திர வியாபாரம், காவல்துறை, ராணுவத்துறை, தீயணைப்புத்துறை, மெய்க்காப்பான்கள், மருத்துவம், விளையாட்டுத்துறை, சாகசம் செய்யும் தொழில், ரசாயனம், வேதியியல் ஆய்வு கூடம், ரத்தப்பரிசோதனை, அறுவை சிகிச்சை, இயந்திரங்கள் பழுதுபார்த்தல், ட்ராவேல்ஸ், கட்டுமான பணிகள், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்கள் சிறப்பை தரும்.

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

You may also like...