எண் 7 நியூமெராலஜி பலன்கள்

கூட்டு எண் 7 நியூமெராலஜி பலன்கள்Numerology Number 7 in Tamil – பிறப்பு எண் 7, 16, 25 ஆக உள்ளவர்கள் மற்றும் விதி எண் 7ல் பிறந்தவர்களுக்கு பொது பலன்கள், அதிர்ஷ்ட தேதிகள், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட ரத்தினம், தொழில் போன்றவைகளுக்கு என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம்.

எண் 7 நியூமெராலஜி பலன்கள்
எண் 7 நியூமெராலஜி பலன்கள்

அதிபதி: கேது
அதிர்ஷ்ட தேதிகள்
– 2,11,20,29,7,16,25ஆம் தேதிகள் அதிர்ஷ்டமானவை
அதிர்ஷ்ட நிறம் – வெளிர்பச்சை, வெளிர்மஞ்சள் நிறம்
அதிர்ஷ்ட ரத்தினம் – வைடூரியம்

தெரிந்து கொள்க: எண் கணிதம் ஜோதிடம் பார்ப்பது எப்படி?

நியூமெராலஜி எண் 7ல் பிறந்தவர்கள் பொதுவான பலன்கள்

7ஆம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் மிகவும் கண்ணியமானவர்கள். செய்யும் தொழிலை நேசிப்பவர்கள். தன்னை அலங்காரம் செய்து கொள்ள விருப்பம் கொள்ள மாட்டார்கள் இருப்பினும் சுத்தமான ஆடைகளை அணிவார்கள். மற்றவர்களிடம் பெரும்பாலும் கலகலப்பாக பேச மாட்டார்கள்.

பேசும்போது ஒவ்வொரு வார்த்தையையும் நிதானித்து பேசுவார்கள். இவர்களுக்கு உண்மையான நண்பர்கள் அல்லது உறவுகள் அமைவது கடினம். பார்ப்பதற்கு பொறுமையாக இருந்தாலும் சட்டென்று கோபத்தின் உச்சிக்கே சென்று விடுவார்கள். எப்பொழுது கோபப்படுவார்கள் என்று இவர்களுக்கே தெரியாது. தன்னுடைய விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார்கள்.

இவர்கள் உண்மையான தேசப்பற்று கொண்டவர்கள். கல்வி கற்பதிலும் கலைகள் கற்பதிலும் ஆர்வம் அதிகம். மனதிற்கு ஏற்றார் போல களத்திரம் அமைவது கடினம். இவர்களுக்கு திருமண வாழ்வில் அவ்வளவாக பற்றிருக்காது. சரீர பலத்தைவிட மனபலம் அதிகம்.

7ஆம் தேதி பிறந்தவர்கள்

அமைதியான மனப்பான்மை கொண்டவர்கள், புத்திசாலி, தெய்வ நம்பிக்கை இருக்கும். விட்டுக்கொடுத்து வாழ்வார்கள். எவ்வளவு பெரிய விஷயத்தையும் உடன் இருப்பவர்களுக்காக விட்டுக்கொடுத்து வாழ்வார்கள். மற்றவர்கள் அதுபோல் இல்லையே என்று வருத்தமும் அடைவார்கள். கலைகள் கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகம்.

16ஆம் தேதி பிறந்தவர்கள்

16ஆம் தேதியில் பிறந்தவர்கள் மனோசக்தி உடையவர்கள். குழந்தை பருவத்திலே பல திறமைகளை கற்றுக்கொள்வார்கள். அனைவரையும் ஆச்சரியப்படும்படி திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள். மிகுந்த துணிச்சலும் நல்ல அறிவாற்றலும் கொண்டவர்கள். எதையும் சாதிக்கும் மனோதிடம் கொண்டவர்கள்.

25ஆம் தேதி பிறந்தவர்கள்

25ஆம் தேதியில் பிறந்தவர்கள் மற்றவர்களால் போற்றத்தக்க மனிதர்களாக இருப்பார்கள். நிர்வாகத்திறன் கொண்டவர்கள். மற்றவர்களை அதிகாரம் செய்பவர்கள். மதபிடிவாதம் கொண்டவர்கள். சிலர் மதத்தலைவர் அல்லது மகான்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பொதுநல சேவை செய்ய பிடிக்கும். அரசு துறையிலோ அல்லது தனியார் துறையிலோ உயர் பதவியை வகிப்பார்கள்.

நியூமெராலஜி எண் 7ல் பிறந்தவர்கள் தொழில்கள்

ரசாயன ஆய்வு, கலை சம்பந்தமான தொழில், எழுத்து தொழில், ஜோதிடம், மதத்தை பரப்பும் தொழில், ஏற்றுமதி இறக்குமதி தொழில், சினிமாத்துறை, புகைப்பட தொழில், கடிகாரம் உருவாக்குதல் மற்றும் பழுது பார்த்தல், சித்திரம், சிற்பம், நாட்டியம் போன்ற தொழில் மூலம் வருமான அதிகமாக வரும். மேலும் மருந்து வியாபாரம், நாட்டு மருந்து வியாபாரம் நல்ல பலனை தரும்.

2,5,7 எண் காரர்களை தொழில் கூட்டாளியாக சேர்த்தால் நல்லது மற்றவர்களிடம் சேர்ந்து கூட்டு சேர வேண்டாம்.

தெரிந்து கொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்